Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 14 ஜூலை, 2013

தேர்தலில் முஸ்லிம் பெண்கள் முகத்தை காட்ட வேண்டும்


எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் நிகாப் அணிந்து வரும் முஸ்லிம் பெண்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டையினை கொண்டு வரும் அதேவேளை கட்டாயமாக அவர்களுடைய முகத்தையும் அங்குள்ள அதிகாரிகளுக்கு காண்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இவ்வாறு நிகாப் அணிந்து வரும் முஸ்லிம் பெண்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி சோதனையிடுவதற்கென சகல வாக்குச்சாவடிகளிலும் பெண் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலில் வாக்களிக்க வரும் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிந்து வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அதனை தடை செய்யுமாறு நாம் கோரவுமில்லை. ஆனால் வாக்குச்சாவடிகளில் இருக்கும் பெண் உத்தியோகத்தர்களிடம் தேசிய அடையாள அட்டையினை காண்பிக்கும் போது முகத்தையும் காண்பிக்க வேண்டும்.
தேர்தல் சமயத்தில் நடைபெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் வீண் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்குமே இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த மூன்று மாகாணங்களிலும் தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்

மாத்திரைகள், சுன்னத் செய்யும் கருவிகளுடன் பாகிஸ்தான் பிரஜை


பாகிஸ்தான் பிரஜை ஒருவர் 6 ஆயிரம் மாத்திரைகளுடனும் சுன்னத் செய்வதற்கான உபகணங்களுடனும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கட்டிலிருந்து ஓமன் ஏர்வேஸ் விமானத்தில் வந்த 37 வயதுடைய பாகிஸ்தான் பிரஜையிடமிருந்தே 3 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான குறித்த மாத்திரைகளும் சுன்னத் செய்வதற்கான ஆயிரத்துக்கு மேற்பட்ட கருவிகளும் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இம்மாத்திரைகள் மனநோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும்
என்பதோடு மாணவர்கள் இதனை கூடுதலாக பயன்படுத்தும் போது ஒருவித போதை ஏற்படுவதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த நபருக்கு 10 ஆயிரம் தண்டம் விதித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சந்தேக நபர் இதற்கு முன்னரும் சுங்கப் பிரிவினரால் இவ்வாறான மாத்திரைகளை கடத்தி வந்த போது கைது செய்யப்பட்டவர் எனவும் இவர் கொழும்பு பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது