Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 15 ஜூலை, 2013

போலந்து ஜனாதிபதி மீது முட்டை வீச்சு


1943ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ரஷ்யாவின் உக்ரைன் பகுதியில் நடந்த படுகொலை ஒன்றில், உக்ரைனின் கிளர்ச்சியாளர்கள் குழுவைச சேர்ந்த போலந்து நாட்டவர்கள் பெருமளவில் உயிர் இழந்தனர்.
அவர்களுக்கு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
சென்ற வாரம் போலந்து நாட்டின் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் உக்ரைன் படுகொலையில் இறந்தவர்கள் பற்றிக் குறிப்பிடப்படும் போது இனப்படுகொலை என்ற முத்திரையுடன் இனத்தை சுத்திகரிப்பு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி உக்ரைனில் வசித்துவந்த போலந்து மக்களை கோபப்படுத்தியது.
நேற்று ஞாயிற்றுக் கிழமையன்று, போலந்தின் ஜனாதிபதி ப்ரோனிஸ்லாவ் கொமொரொவ்ஸ்கி உக்ரைனின் வடக்கில் உள்ள வயோலின் பகுதிக்கு சென்றிருந்தார். அங்கிருந்த போர் நினைவிடத்தைப் பார்வையிட்ட அவர், கத்தோலிக்க ஆலயத்தின் பிரார்த்தனைக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
பிரார்த்தனைக் கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த அவரின் தோளை அருகில் இருந்த கூட்டத்திலிருந்து ஒருவர் தட்டினார். திரும்பிப் பார்த்த அவர் முகத்தில் தன் கையிலிருந்த அவரது முகத்தில் முட்டையை வீசினார்..
உக்ரைனின் தெற்குப் பகுதியான சப்போரிஷியாவைச் சேர்ந்த 21 வயதுடைய அவரை பொலிஸார் கைது செய்தனர். அவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
 

ஜனாதிபதியாக முஹம்மது எல்பரடெய் பதவியேற்பு


எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து முன்னாள் ஜனாதிபதி முஹம்மது மோர்சியை ராணுவம் பதவி நீக்கம் செய்தது.
இதனையடுத்து, முஹம்மது எல்பரடெய் பிரதமராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை பிரதமராக நியமிப்பதற்கு பலர் ஆட்சேபனை தெரிவித்ததால் துணை அதிபராக நியமித்து தற்காலிக ஜனாதிபதி அட்லி மன்சூர் அறிவித்தார்.
அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் எகிப்தின் வெளியுறவு துறைக்கான துணை ஜனாதிபதியாக முஹம்மது எல்பரடெய் பதவி ஏற்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அணு கட்டுப்பாட்டு கழகத்தின் முன்னாள் இயக்குனராகவும் எல்பரடெய் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீப்பிடித்ததற்கு பேட்டரிகள் காரணமல்ல: ஆய்வாளர்கள்?


 
பேட்டரி பிரச்சினை காரணமாக கடந்த ஜனவரி மாதம் போயிங் விமான நிறுவனத்தின் 50 டிரீம் லைனர் விமானங்கள் தரையிறக்கப்பட்டன.
இந்தப் பிரச்சினை சரி செய்யப்பட்டபின், அவை மீண்டும் இயக்கத்திற்கு வந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்து நாட்டின் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எத்தியோப்பியன் விமானம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்தது. இந்த விமானம் டிரீம் லைனர் வகையைச் சேர்ந்தது.
பேட்டரி பிரச்சினைக்கு பின்னர் செயல்படும் முதல் வர்த்தக விமானம் இதுவாகும். எனவே தீயை அணைத்த பின்னர், போயிங் நிறுவன அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். ஆரம்பகட்ட ஆய்வில் பேட்டரிகளால் இந்த தீவிபத்து ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேட்டரிகள் பொருத்தப்பட்டிருந்த இடத்தின் அருகில் தீவிபத்து ஏற்படவில்லை என்றும் அவர்களால் கூறப்பட்டது.
இந்த விமானம் லண்டன் விமான நிலையத்திலேயே ஒரு கூடாரத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணைகள்
நடைபெற்று வருகின்றன. விமானத்தின் பின்புறமுள்ள சிக்கலான உடல் பகுதியின் மேல்புறம் அதிக வெப்ப சேதம் ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
விமானத்தின் துணை பேட்டரி பவர் யூனிட் அமைந்துள்ள பகுதி இது என்றபோதிலும், இதுதான் காரணம் என்பதற்கு எந்தவித நேரடி ஆதாரமும் இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எத்தியோப்பியன் நிறுவனம் தனது டிரீம் லைனர் விமானங்களைத் தொடர்ந்து இயக்கப்போவதாக அறிவித்துள்ளது. தீப்பிடிப்பதற்கு முன்னால், அந்த விமானம் எட்டு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனவே, இந்த சம்பவத்தினால் விமானப் பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று அந்நிறுவனம் கருதுகின்றது