Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 16 ஜூலை, 2013

பிறக்க போகும் குழந்தையை தத்தெடுக்க போட்டி


அமெரிக்காவில் நோயுடன் பிறக்க போகும் குழந்தையை தத்தெடுக்க நூற்றுக்கணக்கானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமாக உள்ளார்.
அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த போது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு டவுன் சின்ட்ரோம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குழந்தையை கலைக்க அவர் விரும்பினார். ஆனால் கருவை கலைக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் அமெரிக்காவின் சட்டப்படி, கர்ப்பமான 5 மாதத்திற்கு பிறகு கருவை கலைக்கக் கூடாது. அப்பெண்ணுக்கு 5 மாதம் முடிய இன்னும் ஒரு வார காலம் கூட இல்லை.
இந்நிலையில் இது குறித்து அறிந்த கெய்ன்ஸ்வில் ட்ரினிட்டி கத்தோலிக்க தேவாலய பாதிரியார் தாமஸ் வான்டர் வூட் தேவாலயத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.
அதாவது நோயுடன் பிறக்கும் இந்த குழந்தையை தத்தெடுக்க விரும்புவோர் தன்னை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்து உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளன.
அதில் 3 குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன, அதில் ஏதாவது ஒரு குடும்பத்திடம் குழந்தை ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

டெலிவரிக்கு கவர்ச்சியான பெண்களைத் தேடும் நிறுவனம்


சுவிட்சர்லாந்தில் புல்டாக் பிட்சா நிறுவனம் தனது கிளையில் பணிபுரிய அழகான இளம் பெண்கள் வேண்டும் விளம்பரம் ஒன்றை அறிவித்துள்ளது.
புல்டாக் பிட்சா நிறுவனமானது ஜெனிவா மற்றும் லுசேர்ன் நகரங்களுக்கு இடையேயுள்ள நியான் என்னும் பகுதியில் இதனை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
மேலும் இதன் மூலம் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு பிட்சா வழங்க விரைவில் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த விளம்பரம் குறித்து மேகாலி ஹெல்ஸ்மேன் என்னும் பெண்ணியவாதி தனது கடும் எதிர்ப்பினை சுவிஸ் ஊடகமொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனமானது பெண்கள் மட்டுமே வேலைக்கு வேண்டும் மேலும் அவர்கள் தோற்றத்தில் அழகானவர்களாக இருத்தல் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளனர்.
இந்த விளம்பரத்தால் அந்த நிறுவனமானது சட்டரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் கவர்ச்சியான பெண்களை இந்த தொழிலுக்கு பயன்படுத்துவது என்பது முட்டாள்தனமாக விடயம் என்றும் இதனால் அந்த பெண்கள் ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து புல்டாக் பிட்சா உரிமையாளரான பீட்டர் செட்பர் கூறுகையில், நான் இந்த பிட்சா தொழிலை தொடங்கும் போது எதிர்மறையான கருத்துக்களை எதிர்பார்த்தேன் என சுவிஸ் பத்திரிக்கையில் பதில் கூறியுள்ளார்.
பேஸ்புக்கில் இந்த பிட்சாவிற்கான விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றில் ஒரு இரு பெண்கள் மார்பகம் தெரியும் வகையில் வெள்ளை சட்டை மற்றும் தலையில் தொப்பியுடன் கூடவே ஒரு பிட்சா பாக்சுடன் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
எனது நிறுவனத்தில் மிகவும் மோசமான ஆடைகளை அணிந்து கொண்டு இந்த தொழிலை செய்யப்போவதில்லை. மேலும் அவர்கள் ஏதேனும் பிரச்சனைகளுக்கு ஆளானால் அவர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக கண்ணீர் வரவைக்கும் புகைக் குண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு 4 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மொடல் அழகிகளும் உள்ளனர். ஏராளமான ஆண்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் தெரிவு செய்யப்படவில்லை.
மேலும் இந்த விளம்பரமானது முழுக்க முழுக்க ஒரு வியாபார நோக்கத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.