Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 4 நவம்பர், 2013

ரேபிஸ் நோய்த் தொற்று: 10 பேர் மருத்துவமனையில்


 
பிரான்சில் ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகளுடன் 10 பேர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த வாரம் இரண்டு மாத பூனைக்குட்டி ஒன்று பாரிசுக்கு 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பகுதியில் இருந்து தத்தெடுக்கப்பட்டது.

மூன்று நாட்கள் கழித்து இந்த பூனைக்குட்டி உயிரிழந்தது விட்டது, அப்போது தான் பூனைக்கு ரேபிஸ் நோய் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த பூனையுடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 5 பேருக்கு தற்காப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
இவர்கள் பூனையில் அருகில் இருந்ததால், நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மற்ற உயிரினங்களுக்கு நோய் பரவியுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக கடந்த 1998ம் ஆண்டு நரி ஒன்றுக்கும், 2008ம் ஆண்டு நாய் ஒன்றுக்கு இந்த நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

படகு கவிழ்ந்து மியான்மரில் பரிதாபம்: 62 பேர் பலி


 மியான்மரில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி 62 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்கு நேற்று பெண்கள்,

 குழந்தைகள் உட்பட 70 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று வங்காள விரிகுடா கடலில் சென்றது.
அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றியதாலும், தற்போது மழை காலம் என்பதால் கடுமையான காற்று வீசியதாலும், எதிர்பாராத விதமாக படகு சேதம் அடைந்தது.

இதனால் கடல்நீர் புகுந்ததும், பாரம் தாங்காமல் நடுக்கடலில் கவிழ்ந்தது.
இதில் படகில் இருந்த குழந்தைகள் உள்பட 70 பேரும் நடுக்கடலில் தத்தளித்தனர்.

இதில் இன்று காலை குழந்தைகள் உள்பட 8 பேரை மீட்டதாக மியான்மர் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ளவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி பலியாயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மியான்மரில் நடைபெறும் வன்முறைகளுக்கு பயந்து கடந்த 18 மாதத்தில் மட்டும் 2.5 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.