Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 26 நவம்பர், 2013

கனடாவில் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்

கனடாவில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
கனடா நாடாளுமன்றத்தில் சீர்திருத்த ஆராய்ச்சியாளர் Howard Sapers சமர்பித்த அறிக்கையிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், சிறுபான்மை இனத்தவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 75 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், 12,000 என்ற எண்ணிக்கையில் இருந்த கைதிகளின் எண்ணிக்கை 15,000ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிவாசி பூர்விக குடிமக்களின் தொகை 80 சதவிகிதம் உயர்ந்துள்ளது, கருப்பினத்தை சேர்ந்த மக்களும் இதில் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் கடுங்காவல் தண்டனைக்குட்பட்டவர்கள், பிணையில் கூட வெளிவர தகுதி இல்லாதவர்கள்.

2,700 புதிய சிறைச்சாலை அறைகள் கட்டப்பட்டும், இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது.
கணக்கெடுப்பின்படி கனடா அரசாங்கம் ஆண்டுக்கு ஆண் கைதி ஒருவருக்கு 1,10,000 டொலர்களும், பெண் கைதிக்கு 2,20,000 டொலர்களும் செலவழிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இஸ்லாத்திற்கு தடை விதித்தோமா? விளக்கம் அளித்த அங்கோலா

 இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என அமெரிக்காவில் உள்ள அங்கோலா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மசூதிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

மேலும் நீதி மற்றும் மனித உரிமை அமைச்சகம் இஸ்லாத்தை சட்டப்படி ஏற்றுக் கொள்ள அனுமதி அளிக்கவில்லை என்று அங்கோலாவின் கலாச்சாரத் துறை அமைச்சர் ரோசா க்ரூஸ் இ சில்வா கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியதாக ஆப்பிரிக்க ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வந்தன.
இந்நிலையில் இது குறித்து வாஷிங்டனில் உள்ள அங்கோலா தூதரக செய்தித் தொடர்பாளர், மத விவகாரங்களில் தலையிடாத நாடு அங்கோலா.

எங்கள் நாட்டில் ஏராளமான மதங்கள் பின்பற்றப்படுகின்றன. மக்கள் தங்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்றும் சுதந்திரம் உள்ளது, கத்தோலிக்கர்கள், ப்ராடஸ்டன்ட்கள், பாப்டிஸ்ட்கள், இஸ்லாமியர்கள் உள்ளனர்.
எங்கள் நாட்டில் இஸ்லாத்துக்கு தடை விதிக்கப்படவில்லை, மசூதிகள் இடிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.