Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

வேலைவாய்ப்புகளை அள்ளிக்கொடுக்கும் பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் தாராளமான முறையில் கிடைக்கின்றன.
 வேலை செய்ய பிரான்ஸ் ஒரு அற்பதமான நாடு என்பதை விளக்கும் பத்து காரணங்கள்
· தற்காலிகமாக வேலைவாய்ப்புகளை அளித்து பின் அதை நிரந்தரபணியாக்கும் வழி செயல்படுகிறது.
· 2010 முதல் 2013 வரை பல வித வேலைவாய்ப்புகள் வந்துள்ளன.இதனால் பிரான்ஸ் மக்கள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவரும் பயனடைகின்றனர்.

· பாரிஸ் நகரில் பல வேலைவாய்ப்பு மையங்கள் திறக்கப்பட்டு ,வேலைவாய்ப்பு இணையதளங்கள் மற்றும் ஊடகங்கள் வேலைவாய்பை அளிக்கின்றது.

· பிரான்ஸின் நிறுவனங்கள், மாத வருமானத்துடன் பல வித சலுகைகளையும் அளிக்கிறது.
· வேலை பார்க்குமிடத்தில் மிகவும் மலிவான விலையில் பலவித உணவுகளை வழங்கப்படுகின்றன.
· தற்காலிக வேலையிலிருந்து ஒப்பந்தக்காலம் முடிந்து வேறு பணியில் அமரும் வரை அவர்களுக்கு வேலையின்மை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

· தங்களிடம் வேலைபார்க்கும் தொழிலாளிகளுக்கு மெட்ரோ ரயில் இலவச பயணச்சீட்டை ஒவ்வொரு நிறுவனமும் அளிக்கின்றன.

· சுயவேலைவாய்ப்பிற்காக தொடங்கப்படும் சிறுதொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

· தனியார் துறைகளால் ஓய்வுகாலநிதி மற்றும் ஆயுள்காப்பீடு கொடுக்கப்படுகிறது.
· ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு பிரான்ஸின் பண்நாட்டு நிறுவனங்களில் பல வேலைவாய்ப்பு உள்ளது
 

சர்ச்சைக்குரிய பகுதிக்கு போர் விமானங்களை அனுப்பியது சீனா

கிழக்கு சீனக் கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளை உள்ளடக்கி புதிய வான் பாதுகாப்பு மண்டலம் அறிவித்த சீனா, அங்கு முதல் முறையாக போர் விமானங்களை அனுப்பி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது.

கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஜப்பான் கட்டுப்பாட்டில் உள்ள சென்காகு தீவுகளை டியாவோயு தீவுகள் என்று அழைக்கும் சீனா, அவை தனக்கு சொந்தம் என்று கூறி வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகள் இடையே முறுகல் நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் சீனா கடந்த சனிக்கிழமை தனது வான் எல்லையை விரிவாக்கும் வகையில், சர்ச்சைக்குரிய தீவுகளை உள்ளடக்கி புதிய வான் பாதுகாப்பு மண்டலம் அறிவித்தது.

இப்பகுதி வழியே பறக்கும் விமானங்கள் அதன் பயணத் திட்டத்தை முன்கூட்டியே சீன அரசிடம் அளிக்க வேண்டும். இல்லாவிடில் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என எச்சரித்தது. சீனாவின் இந்த எச்சரிக்கையை ஜப்பானும் அதன் நட்பு நாடுகளும் நிராகரித்தன.

மேலும் சீனாவின் எச்சரிக்கையை நிராகரிக்கும் வகையில், அந்நாடு அறிவித்த புதிய வான் மண்டலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க போர் விமானங்கள் பறந்து சென்றன.

இதைத் தொடர்ந்து ஜப்பான், தென் கொரிய விமானங்களும் அப்பகுதியில் பறந்து சென்றன. இந்த விமானங்களை தாங்கள் கண்காணித்ததாக சீனா கூறியது.
இந்நிலையில் புதிய வான் மண்டலம் அறிவித்த பிறகு முதல் முறையாக அப்பகுதியில் சீனப் போர் விமானங்கள் நேற்று முன்தினம் பறந்து சென்றன.

இதுகுறித்து சீன விமானப் படை செய்தித் தொடர்பாளர் நேற்று கூறுகையில்,
“அனைத்து நாடுகளும் தங்கள் வான் பகுதியில் வழக்கமாக மேற்கொள்ளும் கண்காணிப்பு பணியை போல, கிழக்கு சீனக் கடல் பகுதியில் சீனாவின் புதிய வான் பாதுகாப்பு மண்டலத்தில் ஜெட் போர் விமானங்கள் வியாழக்கிழமை பறந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன” என்றார்.
“சீனாவின் வான் பகுதியை பாதுகாக்கவும், அச்சுறுத்தல்களை உறுதியுடன் எதிர்கொள்ளவும் எந்நேரமும் விழிப்புடன் இருப்போம்” என்று சீன விமானப் படை வியாழக்கிழமை கூறியது. அதே நாளில் போர் விமானங்கள் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே கிழக்கு சீனக் கடல் பகுதியில் புதிய வான் மண்டல அறிவிப்பை நாங்கள் வாபஸ் பெற வேண்டுமானால், ஜப்பானும் இதே போன்ற அறிவிப்பை வாபஸ் பெறவேண்டும் என்று சீனா அறிவித்துள்ளது.

சீனா தனது அறிவிப்பை வாபஸ் பெறவேண்டும் என்று ஜப்பான் பிரதமர் ஷென்ஜோ அபே கூறியிருந்தார்.

இதுகுறித்து சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் யாங் யுஜுன் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறுகையில், “சீனா தனது அறிவிப்பை வாபஸ் பெறவேண்டுமானால், முதலில் ஜப்பான் இதே போன்ற அறிவிப்பை வாபஸ் பெறட்டும். பிறகு அவர்கள் கோரிக்கை குறித்து 44 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் பரிசீலிக்கிறோம்” என்றார்.
 

கனடாவில் நடைபெற்ற ஜி8, ஜி20 மாநாடுகளை உளவு பார்த்த அமெரிக்கா!

கனடாவில் நடைபெற்ற ஜி8 மற்றும் 20 மாநாடுகளை அமெரிக்கா முழுமையாக உளவு பார்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கனடாவின் டொரான்டோ நகரில் 2010ம் ஆண்டு யூன் 26, 27 ஆகிய திகதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற்றது.

இதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் ஊழியர் ஸ்னோடென்னை மேற்கோள் காட்டி கனடா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் என்ற ஊடகம் மற்றுமொரு தகவலை வெளியிட்டுள்ளது.

அதில் கனடாவில் நடைபெற்ற மாநாட்டின் தொலைபேசி உரையாடல்களை அமெரிக்கா ஒட்டுக் கேட்டுள்ளது என்றும் இதற்கு கனடா அரசின் உளவு அமைப்பான கனடா தொலைத்தொடர்பு பாதுகாப்பு நிறுவனமும் முழுஒத்துழைப்பு அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இதேபோல் கனடாவின் ஹன்ட்வில்லே நகரில் 2010ம் ஆண்டு யூன் 25, 26 ஆகிய திகதிகளில் ஜி-8 மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன்,

அமெரிக்கா, கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டையும் அமெரிக்கா அமைப்பு உளவு பார்த்துள்ளது என்று கூறியுள்ளது.