Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 10 டிசம்பர், 2013

கொலைகார நகரமாக மாறும் பாரீஸ்!!!

பிரான்ஸின் தலைநகரமான பாரிசும் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிலுள்ள பிராங்க்ஸியும் குற்றங்களின் எண்ணிக்கையில் என்றும் ஒரே போல் உள்ளது என பிரான்ஸின் பொலிஸ் தலைமை அதிகாரி பிரடெரி பிசெனர்ட் தெரிவித்துள்ளார்.

வன்முறை செயல்களில் ஈடுபடுதல், சொத்துகளை தாக்கிடுதல், வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தல், நகரத்தில் பாதுகாப்பில்லாதிருத்தல் போன்றவை பிராங்க்ஸில் அதிகம் நிகழும். அதே போல் பாரிஸிலும் நடக்கின்றது என ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.

இவரின் இவ்விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து 300 பேர் கொண்ட பொலிஸ் படையை அமைத்து குற்றங்களை குறைக்க பிரான்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மேலும் இரவு நேரங்களில் 25 பேர் கண்ட பொலிஸ் படை ரோந்து பணிக்காக விடப்பட்டுள்ளது. இதில் 2009 முதல் 2012 வரை 1500 பொலிசார் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

செல்வி வனிதா நாதன் மூத்த லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்


கல்விச் சபை உறுப்பினர் செல்வி வனிதா நாதன் மூத்த லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய யோன் மக்கலம் அவர்களுக்கு ஆதரவு! 
மார்க்கம் - கல்விச் சபை உறுப்பினரும் குமுகப் பணியாளரும் மார்க்கம் நகரில் நீண்டகாலமாக வாழ்பவருமான செல்வி வனிதா நாதன் தான் மார்கம்-தோண்கில் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட இருப்பதாக அறிவித்த தனது முடிவை மாற்றியுள்ளதாக இன்று அறிவித்தார். கடந்த ஒக்டோபர் மாதம் தான் இத்தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அறித்த முடிவை அவர் மீளப் பெற்றுள்ளார்.
   
மார்க்கம் நகரின் நலனில் தொடர்ந்தும் அக்கறை காட்டுவதோடு அதன் வளர்ச்சிக்காய் ஒரு கல்விச் சபை உறுப்பினராக அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவேன் எனச் செல்வி வனிதா நாதன் தெரிவித்தார். எனது குடும்பத்தார் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வழங்கிய பெரும் ஆதரவு என்னை நெகிழச் செய்கிறது. எதிர்காலத்தில் உங்கள் அனைவரது ஆதரவுடனும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக நான் போட்டியிடக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

முன்னாள் அமைச்சரும் தற்போதைய லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினருமான மதிப்புக்குரிய யோன் மக்கலம் அவர்களுக்கு தனது முழு ஆதரவைச் செல்வி வனிதா நாதன் வழங்குவார். மார்கம்-தோண்கில் என்கிற இப் புதிய தேர்தற் தொகுதியானது அவரது பழைய தொகுதியின் பெரும் பகுதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரு யசுடின் ரூடோ அவர்களின் தலைமையில் நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியும் இளையோரின் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டும் வயோதிபர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வு வழங்கியும் ஒரு வலுவான கனடாவை உருவாக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதற்காய் நாம் இணைந்து செயற்பட வேண்டிய காலம் இது என அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்துப் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய யோன் மக்கலம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் செல்வி வனிதா நாதன் அவர்கள் மிகவும் திறமைமிக்க ஒரு இளம் பெண்ணும் கீழ்தட்டு மக்களோடு அர்ப்பணிப்போடும் அதிக அக்கறையுடனும் பணியாற்றுவதை முதன்மையாகக் கொண்டவர் எனவும் தெரிவித்தார். எதிர்காலத்தின் ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் வனிதா நாதன் தனக்கும் லிபரல் கட்சிக்கும் வழங்கும் ஆதரவு சிறப்பானது எனவும் குறிப்பிட்டார்.
 

சவுதியில் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

 சவுதி அரேபியாவில் போதை மருந்து கடத்தல், கொலை, கற்பழிப்பு, கொள்ளை போன்ற குற்றச்செயலில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் போதை மருந்து கடத்திய பாகிஸ்தானியரின் தலை துண்டிக்கப்பட்டது. அவரது பெயர் முகமது ஷாகீர்கான்.
இவர் பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பெருமளவில் ஹெராயின் போதை மருந்து கடத்தி வந்தார்.

அவரை கைது செய்த பொலிஸார் சிறையில் அடைத்தனர்.
இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை சவுதி அரேபியாவின் உள்துறை மந்திரி தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் கடந்த ஜனவரி முதல் இதுவரை போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட 73 பேர் தலை துண்டிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3 பேர் குறைவாகும்.
 

விலைமாதுக்களின் வாடிக்கையாளர்களுக்கு அபராதம்:

பிரெஞ்சு பாராளுமன்றம் விலைமாதுக்களின் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
 பிரான்சில் உள்ள 40 ஆயிரம் விலை மாதுக்கள் நைஜீரியா மற்றும் ரோமானியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு பாதிப்புக்குள்ளானவர்களாவர்.
இதனை கருத்தில் கொண்டு பிரெஞ்சு பாராளுமன்றம் விதித்துள்ள சட்டப்படி விலை மாதுக்களின் வாடிக்கையாளர்களுக்கு 1500 யூரோக்கள் ( 2000 டொலர்கள்) அபராதம் விதிக்கப்படும். ஆனால் விலை மாதுக்களுக்கு தண்டனை கிடையாது என்று சட்டம் விதித்துள்ளது.

ஆனால் இந்த சட்டத்தைக் கண்டு விலை மாதுக்கள் மிகவும் அச்சம் கொண்டுள்ளனர். ஏனெனில் தங்களது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுவிடும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முக்கிய பிரெஞ்சு பிரபலங்கள் விமர்சிக்கையில், இந்தக் கடுமையான சட்டம் விபச்சார வியாபாரத்தை நிலத்தடி சுரங்கப்பாதை சட்டவிரோத வர்த்தகமாக மாற்றுவதோடு மட்டுமல்லாது, பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.