siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

போக்குவரத்து திட்டத்துக்கு ரூ.19 லட்சம் கோடி

அமெரிக்காவில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மேம்பாட்டுக்கான திட்டப் பணிகளுக்கு 30,000 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18.59 லட்சம் கோடி) அதிபர் ஒபாமா ஒதுக்கீடு செய்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, அதிபராக 2ஆவது முறையாக பொறுப்பேற்ற பின் நிலவும் அரசியல் மந்த நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த அறிவிப்பை ஒபாமா வெளியிட்டிருப்பதாக கருதப்படுகிறது.
இந்த நிதி ஒதுக்கீட்டுத் திட்டம், செப்டம்பர் மாதம் காலாவதியாகவுள்ள தற்போதைய போக்குவரத்து நிதி மசோதாவுக்குப் பதிலாக இருக்கும்.

போக்குவரத்துக் கட்டமைப்புகளை வரும் ஆண்டுகளில் மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு நிதித் திட்டத்தை அறிவித்துள்ள ஒபாமா, குடியரசு கட்சி எம்.பி.க்களின் அவநம்பிக்கையில் இருந்து வெற்றி காண முடியும் என நம்புகிறார்.
இந்த நிதி தொடர்பான விவரங்கள் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் தெரியவரும்.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

நீர்மூழ்கிக் கப்பல் விபத்து : 2 உயர் அதிகாரிகள்

 மும்பை அருகே கடலுக்கடியில் சென்று கொண்டிருந்த ஐஎன்எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் தேடப்பட்டு வந்த 2 அதிகாரிகள் கப்பலிலேயே பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியக் கடற்படையில், ரஷியாவில் இருந்து வாங்கப்பட்ட ஐ.என்.எஸ். சிந்துரத்னா என்னும் நீர்மூழ்கிக் கப்பல் உள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல், மும்பையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் புதன்கிழமை காலை கடலுக்கடியில் சென்று கொண்டிருந்தது. அதில் 70 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இருந்தனர்.

அப்போது நீர்மூழ்கிக் கப்பலின் 3வது தளத்திலுள்ள வீரர்கள் தங்குமிடத்தில், திடீரென புகை பரவியது. இதனையடுத்து நீர்முழ்கியில் இருக்கும் அவசரகால தீயணைப்புக் கருவியை இயக்கி அந்தப் புகையை வீரர்கள் கட்டுப்படுத்தினர். இருப்பினும் புகையில் சிக்கி 7 வீரர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதனையடுத்து அவர்கள் 7 பேரும் மீட்கப்பட்டு, ஹெலிகாப்டர்கள் மூலமாக மும்பையில் உள்ள கடற்படை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்தின்போது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 2 அதிகாரிகளின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை. நீர்மூழ்கியில் உள்ள ஏதேனும் ஓரு அறையில் அவர்கள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தது. இதனையடுத்து அவர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன், 26 பிப்ரவரி, 2014

நான் சாகப்போகிறேன்! தூது அனுப்பிவிட்டு சிறுவன்

அமெரிக்காவில் 15 வயது சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி என்ற 13 வயது இச்சிறுவன் 15 நிமிடங்களுக்கு முன் பேஸ்புக்கில் நான் சாகப்போகிறேன் என்று செய்தி வெளியிட்டுள்ளான். தற்கொலை செய்துகொள்வதை பார்த்த சிறுவனின் அக்கா உடனே பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர் சிறுவனை அருகில் உள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுவனின் இறப்பு குறித்து அவனது தாயார் லங்காசாயர் கூறுகையில், கடந்த வருடம் 25ம் திகதி கிரடிட் கார்ட் வாங்கினேன், எனக்கு தெரியாமலேயே எனது கிரடிட் கார்டு அட்டையை எனது மகன் எடுத்துள்ளான். கிரடிட் கார்ட்டை பயன்படுத்தி 422 டொலர்கள் விளையாட்டிற்காக இணையதளம் வழியாக பர்ச்சஸ் செய்துள்ளான். இந்த செய்தி எனக்கு நான்கு நாட்களுக்கு பின்னர் தான் தெரியவந்தது. இதனை நான் வன்மையாக கண்டித்தேன், அவன் இவ்வளவு பணத்தை செலவு செய்தது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் எனது மகன் நேற்று மாலை 4.20 மணி அளவில் நண்பர்களுடன் பேசிகொண்டிருந்தான், பின்னர் 5 மணிக்கு அழைத்தபோது அவன் வர மறுத்துவிட்டான் அவனது அக்கா மாடிக்கு சென்று அழைத்தபோது அவன் வர மறுத்துவிட்டான் என்றம் பின்னர் 6.30 மணி அளவில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது மிகவும் அதிர்சியை அளிக்கிறது

 

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

பாக்கெட் உணவுகளால் ஆபத்து! மக்களுக்கு எச்சரிக்கை

 பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகள் ஆபத்தை விளைவிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில், உணவு பொருட்களை பேக்கிங் செய்யும் போது பாதுகாப்பாக மற்றும் பதப்படுத்துவற்காக பார்மால்டிஹைடு என்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படும் இந்த பொருள், புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது.

தாகத்தை தணிப்பதற்காக குடிக்கும் குளிர்பானங்களை சேமிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் சாப்பாட்டு மேஜையில் உள்ள தட்டுகள் போன்ற பொருட்களில் பார்மால்டிஹைடு வேதி பொருள் சிறிய அளவில் சேர்க்கப்படுகிறது.
இதுதவிர உணவை பாதுகாக்க பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும்.

தற்போது உணவு பொருட்கள் பேக்கிங் செய்யப்படுவது அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதாரம் என்ற பெயரில் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்ப்பது நலம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
 

புதன், 19 பிப்ரவரி, 2014

தகவல்அபாய நிலையில் பத்திரிக்கையாளர்கள்!

 உலகம் முழுவதிலும் கடந்தாண்டு மட்டும் 134 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
லண்டனை சேர்ந்த சர்வதேச செய்தி பாதுகாப்பு நிறுவனம் London-based International News Safety Institute(INSI), ஆபத்தான இடங்களில் செய்திகள் சேகரிக்கும் பத்திரிக்கை நிரூபர்களுக்கு பாதுகாப்பு பயிற்சியை வழங்கி வருகின்றது.
இந்நிறுவனம் கடந்தாண்டு உலகம் முழுவதும் பத்திரிக்கையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளை பற்றி ஆய்வு செய்தது.
இதில் கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் 134 பத்திரிக்கையாளர்கள், ஊடக பணியாளர்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் 65 பேர் சிரியாவில் நடந்த உள்நாட்டு போரில் கொல்லப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்சில் 14 பேரும், இந்தியாவில் 13 பேரும் மற்றும் பாகிஸ்தானில் 9 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான நபர்கள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே குறிவைத்து கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உலகின் முன்னணி செய்தி அமைப்புகளின் நிதியுதவியுடன் கடந்த 1996ம் ஆண்டிலிருந்து ஆய்வில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

வியாழன், 13 பிப்ரவரி, 2014

விமான விபத்து: தவறான தகவல்களால் சர்ச்சை

அல்ஜீரியாவில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் வழங்கிய தகவல்கள் தவறானவை என அல்ஜீரிய அரசாங்கமும் இராணுவமும் அறிவித்துள்ளன.
அல்ஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் இடம்பெற்ற இராணுவ விமான விபத்தில் 103 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

99 இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் பணித்த விமானத்தில் அனைவரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் குறித்த விமானத்தில் 78 பேர் பயணித்ததாக அல்ஜீரிய இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதமிருந்த 77 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சீரற்ற வானிலையினால் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

ஜேர்மன் பிரபலங்களின் கறுப்பு பணம் அம்பலம்!

சுவிஸ் வங்கியில் ஜேர்மனிய பிரபலங்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பண விவரங்கள் அம்பலமாகியுள்ளன.

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்டத்தின் குழுத்தலைவர் யுலி ஹொனஸ் பல மில்லியன் யூரோக்கள், தொலைக்காட்சி பெண்தொகுப்பாளரான அலிஸ் ஸ்வார்ச் 200,000 யூரோக்கள், பெர்லின் மேயர் கிலாஸ் வாவிரெய்ட் என்பவர் விமான நிலையம் கட்டும் பணிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை ஊழல் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல் அதனை சுவிஸ் வங்கியில் பதுக்கிவைத்துள்ளார்.

மேலும் அரசியல்வாதிகளும் இந்த கறுப்பு பண விவகாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜேர்மனிய வருமான வரித்துறையால் கடந்த 2010ம் ஆண்டில் தொடரப்பட்ட புலனாய்வில், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பிரபலங்களின் விவரங்கள் அடங்கிய சீடி கண்டுபிடிக்கப்பட்டது.

அதில், ஜேர்மனில் மட்டும் மொத்தம் 26,000 பேர் சுவிஸ் வங்கியில் கணக்குகள் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சீடி வெளியான விபரம் குறித்த தகவல் பிற நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளுக்கு தெரியவந்ததால் அவர்களும் தங்களது நாடுகளின் வரி விவரம் குறித்த புலனாய்வில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை வரி ஏய்ப்பு செய்தவர்கள் வரியுடன் அபராதத்தையும் சேர்த்து கட்டவேண்டும் என்ற விடயத்தில், ஜேர்மன் அரசாங்கமான Social Democratic Party (SPD) க்கும், எதிர்கட்சிக்கும் வாக்குவாதம் நடந்து வருகிறது.

இதுகுறித்து SPD யின் நிதி நிபுணர் கூறுகையில், அரசாங்கத்திற்கு பணம் திரும்ப வர வேண்டும் என்பது அத்தியாவசியமாக இருப்பதால், பல நிபந்தனைகளை விதித்தால் மக்களிடமிருந்து பணம் திரும்ப கிடைக்காது என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சனி, 8 பிப்ரவரி, 2014

வெடிகுண்டு வச்சுருக்கேன்! விமானத்தை கடத்த முயன்ற !

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது குண்டு இருப்பதாக மிரட்டி விமானத்தை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் கார்கோவ் நகரத்தில் இருந்து 110 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
அப்போது, விமானத்தில் இருந்த பயணி ஒருவன் எழுந்து திடீரென கூச்சலிட்டுள்ளான்.
விமானத்தில் குண்டு வைத்திருப்பதாகவும், தான் கூறியபடி விமானத்தை ரஷ்யாவின் சோச்சி நகருக்கு செலுத்தும்படியும் உத்தரவிட்டான், இதனால் பயணிகள் அலறி கூச்சல் போட்டனர்.
உடனடியாக சாதுர்யமாக செயல்பட்ட விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவலை அனுப்பினார்.
இதனையடுத்து விமானிகளின் காக்பிட் அறைக்குள் நுழைய முடியாதபடி கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன.
விமானம் பத்திரமாக துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில் தரையிறக்கப்பட்டது, அங்கு பாதுகாப்பு படையினர் ஆசாமியை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இத்தகவலை துருக்கி நாட்டு போக்குவரத்துதுறை செயலாளர் ஹபீப் சோலுக் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால், சோச்சி நகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.