Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 28 ஜூலை, 2014

பிரான்ஸில் போதைப் பொருளால் உயிரிழந்த குடும்பம்

பிரான்ஸில் ஓட்டுநர் ஒருவர் போதைப் பொருள் உட்கொண்டு லொறி ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸின் கிழக்கு பகுதியில் லொறி ஓட்டுநர் ஒருவர் தவறான பாதையில் லொறியை ஓட்டியுள்ளார்.
அப்போது எதிரே வந்த காருடன், லொறி ஓட்டுநர் நேருக்கு நேர் மோதியதால் காரில் இருந்த பெண்ணும் அவரது குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்
இந்நிலையில் படுகாயமடைந்த இந்த ஓட்டுநரை மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் அளவிற்கு அதிகமான போதைப் பொருளை உட்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

மற்றைய செய்திகள்

சுட்டுக்கொலை பொலிஸ்: மக்களுக்கு 5,000 யூரோ சன்மானம்

 ஜேர்மனியில் பொலிசார் ஒருவர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் ப்ராங்பெட் நகரை சேர்ந்த பொலிசார் ஒருவர், தனது குடும்ப உறுப்பினர்களுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிக்கொண்டிருந்த போது மர்மநபர்கள் சிலர் அவரை சுட்டுள்ளனர்.
தற்போது இந்த கொலை தொடர்பாக, பொலிசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொலையாளியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 5,000 யூரோ சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கொலை தொடர்பாக 87 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் கொலைக்கான காரணம் அறியப்படவில்லை.
 மற்றைய செய்திகள்

சனி, 26 ஜூலை, 2014

வங்கியில் அரங்கேறிய மோசடி இரட்டை கணக்கு வேண்டுமா?

பிரான்ஸ் நாட்டில் உள்ள மக்களுக்கு தங்கள் கறுப்பு பணத்தை மறைத்து வைக்க உதவியதால் சுவிஸ் வங்கிக்கு 1.1 பில்லியன் யூரோ வரி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரான்ஸில் இயங்கி வரும் பிரபல சுவிஸ் வங்கியான UBS வங்கி கடந்த 23ம் திகதி அன்று வரி மோசடி செய்ததாக குற்றம்ச் சாட்டபட்டுள்ளது.
இந்த வங்கி பிரான்ஸ் நாட்டு மக்களின் பணத்தை, சுவிஸ் நாட்டில் உள்ள கிளையில் மற்ற ஒரு கணக்கு தொடங்கி மறைத்து வைக்க உதவியதாக தெரியவந்துள்ளது.
எனவே இந்த வங்கி 1.1 பில்லியன் யூரோ வரி செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த குற்றச்சாட்டு குறித்து UBS வங்கியின் முன்னாள் ஊழியார்கள் தான் வழக்கு தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றைய செய்திகள்

வெள்ளி, 25 ஜூலை, 2014

படுக்கை அறையில் நுழைந்த மர்ம நபர்: நடந்தது என்ன?

பிரித்தானியாவில் நபர் ஒருவர் பெண்ணின் படுக்கையின் கீழ் ஒளிந்து கொண்டு குறுச்செய்தி அனுப்பிக் கொண்டிருந்ததை பார்த்த அப்பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
பிரித்தானியாவில் செஸ்டர் நகரில் ரேவன்ஸ்கார்ப்ட் (18) என்ற மர்ம நபர் ஒருவன் பெண்னின் படுக்கை அறையில் நுழைந்துள்ளார்.
இதன்பின் அவரின் படுக்கையின் கீழே மறைந்து கொண்டு, நான் உன்னை பார்த்து கொண்டு இருக்கிறேன் என குறுச்செய்தி ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளார்.
மேலும் தான் காலையில் ஜன்னல் அருகில் தூக்கு போடு கொள்ள போவதாக அப்பெண்ணிடம், மற்றொரு குறுச்செய்தியை பகிர்ந்து கொண்டு திகிலூட்டியுள்ளார்.
இதனால் பயமடைந்த அப்பெண் தனது தாயின் அறைக்கு சென்று அன்று இரவு உறங்கியுள்ளார்.
இந்நிலையில் காலையில் அந்த பெண் தனது அறைக்கு வந்த போது தனது படுக்கையின் கீழ் இந்த நபர் தூங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இத்தகவலை அவர் தனது தாயாரிடம் கூறியதையடுத்து, அங்கு வந்த பெண்ணின் தாயார் அந்நபரை வெளுத்து வாங்கி விரட்டி அடித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட அந்த மர்ம நபருக்கு 12 வாரம் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

மற்றைய செய்திகள்

வியாழன், 24 ஜூலை, 2014

இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்தே'ஐ.எஸ்.ஐ.எஸ். படையை உருவாக்கினர்!

ஸ்னோடென் அதிர்ச்சி தகவல் இஸ்ரேல் நாட்டுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத இயக்கம் உருவாக்கப்பட்டதாக அமெரிக்காவை அலற வைத்துக் கொண்டிருக்கிற ஸ்னோடென் தெரிவித்துள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தனிநாடாக பிரகடனம் செய்துள்ளது. அதன் கலிபா (தலைவராக) அல் பாக்தாதி அறிவிக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை இது தொடர்பாக ஈரானிய செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.எ.ஏவுக்கு ஸ்னோடென் அளித்த பேட்டி: அமெரிக்க படைகளால் 2004ஆம் ஆண்டு தற்போதைய ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அல் பாக்தாதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்துதான் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் உருவாக்கப்பட்டது.
 
அதாவது இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை உருவாக்கின. இவ்வாறு ஸ்னோடென் கூறியுள்ளார். அண்மையில் மொசூல் மற்றும் கிர்குக் நகரங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் இஸ்ரேல் தயாரிப்பு ஆயுதங்களை பயன்படுத்தியதாக குர்திஷ் படையினரும் கூட தெரிவித்திருந்தனர்.
 
 சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். கடுப்பாட்டில் உள்ள பகுதியில் இஸ்ரேலிய மருத்துவமனை ஒன்றில்தான் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 283 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.. மேலும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூட அந்த மருத்துவமனையைப் பார்வையிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

பயங்கர சூறாவளி தாய்வானில்- இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தாய்வானில் வீசிய பயங்கர சூறாவளி காற்று காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ்சில் கடந்த வாரம் வீசிய ரம்மாசன் சூறாவளி புயலில் சிக்கி 97 பேர் உயிரிழந்தனர்.
சீனாவையும் இந்த சூறாவளி விட்டுவைக்கவில்லை. அங்கு சூறாவளியில் சிக்கி 46 பேர் உயிரிழந்தனர். 25 பேரை காணவில்லை.
இந்த நிலையில் தாய்வனை கடும் சூறாவளி புயல் நேற்று தாக்கியது.
பயங்கர சூறாவளி காற்று வீசியதோடு பலத்த மழையும் பெய்தது. இதனால் சந்தைகள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
சூறாவளியில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். பல இடங்களில் சேதம் ஏற்பட்டது.
கடற்கரை அழகை படம் எடுக்கச்சென்ற சுற்றுலா பயணி ஒருவர் மாயமாகி உள்ளார்.
மீட்புப்பணிகளில் தாய்வான் இராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.


மற்றைய செய்திகள்

செவ்வாய், 22 ஜூலை, 2014

அதிபரின் மறுமண ஆசை - காதலியை 60 வது பிறந்த நாளில் மணம்

பிரான்ஸ் நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர், பிராங்கோயிஸ் ஹாலண்டே. அந்நாட்டின் முன்னாள் சுற்றுச் சூழல் மந்திரியாக இருந்த செகொலேன் ராயலுடன் இவர் 'குடும்பம் நடத்திய' போது இந்த ஜோடிகளுக்கு 4 குழந்தைகள் பிறந்தன. அவரை கை கழுவி விட்டு, பத்திரிகையாளரான வேலரி ட்ரையெர்விய்லெர்(49) என்பவருடன் அதிபர் மாளிகையான "எலிசீ பேலஸ்'சில் சில ஆண்டுகள் இவர் சேர்ந்து வாழ்ந்தார். கருத்து வேறுபாடு காரணமாக அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய வேலரி ட்ரையெர்விய்லெர், ஒரு வாரத்துக்கு பிறகு பிராங்கோயிஸ் ஹாலண்டேவை பிரிந்து விட்டதாக அறிவித்தார்.
  
இதற்கிடையில், பிரெஞ்சு சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிரபல நடிகையான ஜூலி கெயெட்டுடன் பிராங்கோயிஸ் ஹாலண்டேவை இணைத்து ஏராளமான கிசுகிசுக்களும், வதந்திகளும் உலவி வந்தன. ஆரம்பத்தில், அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இவற்றை மறுத்து வந்த நிலையில், கடந்த வாரம் இது தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளித்த பிராங்கோயிஸ் ஹாலண்டே, 'ஏதும் முக்கியமான தகவல் இருந்தால், உங்களுக்கு நிச்சயம் தெரிவிப்பேன்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி தனது 60வது பிறந்த நாளை கொண்டாடவுள்ள பிராங்கோயிஸ் ஹாலண்டே, 2 குழந்தைகளுக்கு தாயான 42 வயது நடிகை ஜூலி கெயெட்டை திருமணம் செய்துக் கொள்ளும் ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மற்றைய செய்திகள்
 
 

ஞாயிறு, 20 ஜூலை, 2014

உச்சிமாநாடு: ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராக பலத்த சர்ச்சை

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஜீ-20 உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாத்திமிர் புத்தின் கலந்து கொள்வாரா என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்வது தொடர்பில் பொறுத்திருந்து தான் தீர்மானிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய பிரதமர் ரோனி அபொட் தெரிவித்துள்ளார்.
மலேசியன் எயார்லைன்ஸ் விமானத்திற்கு நேர்ந்த கதியைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அரசாங்கம் ரஷ்யத் தலைவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன.
நடுவானில் பறந்து கொண்டிருந்த எம்எச்-17 விமானம் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகி உக்ரேனின் கிழக்குப் பகுதியில் வீழ்ந்து நொருங்கியது. இந்த அசம்பாவிதத்தில், 28 அவுஸ்திரேலியர்கள் அடங்கலாக, விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாகியிருந்தார்கள்.
ரஷ்யாவின் ஆதரவுடைய கிளர்ச்சியாளர்கள் தான் தாக்குதலை நடத்தியதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.
இது பற்றிய சர்வதேச விசாரணைகளுக்கு ரஷ்யா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அரசாங்கம் கூறகிறது.
ரஷ்யா ஒத்துழைக்காவிட்டால், புத்தினை அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷோர்ட்டன் தெரிவித்தார்.
ஆனால், ரஷ்யா எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க விரும்புவதாக அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியா தன்மானமுள்ள நாடாகும். அத்துடன், அவுஸ்திரேலியாவை நாடும் விருந்தாளிகள் அந்நாட்டின் மீது நல்லெண்ணம் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மற்றைய செய்திகள்

சனி, 19 ஜூலை, 2014

வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை

ஜப்பானில் குழந்தைளின் வறுமை நிலை குறித்து எடுக்கப்பட்ட நலத்துறை அமைச்சகத்தின் கணக்கீடு இந்த ஆண்டு அதிக பட்ச உயரத்தைத் தொட்டுள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டைவிட இப்போது 16.3 சதவிகிதம் அதிகரித்துக் காணப்படும் இந்த நிலையானது கணக்கீடு தொடங்கப்பட்ட முப்பதாண்டுகளில் இதுவரை இல்லாத உயர்ந்தபட்ச சதவிகிதம் என்று கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 34 உறுப்பினர் நாடுகளில் ஜப்பானிலும் குழந்தை வறுமை அதிக அளவில் இருப்பதாக இந்தக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. மெக்சிகோ, இஸ்ரேல், சிலி, அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஜப்பான் இதில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது
ஒரு நபருக்கான ஆண்டு நிகர வருமானம் 1.22 மில்லியன் யென்னுக்குக் குறைவாக (12000 அமெரிக்க டாலர்) உள்ள குடும்பங்களில் வளரும் குழந்தைகளே இந்தக் கணக்கெடுப்பில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஒரு பெற்றோராக இருக்கும் குடும்பங்களில் பாதிக்கு மேல் வறுமை நிலைக்குக் கீழிருப்பதுவும், பல குழந்தைகள் உள்ள குடும்பங்களில் மூன்றில் இரண்டு சதவிகிதத்தினர் தங்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கருதுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்தது.
மக்களின் ஊதிய விகிதங்களில் தென்பட்ட இந்த மிகப்பெரிய இடைவெளி நீண்டகாலமாக சமத்துவ சமுதாயத்தைக் கொண்டுள்ளதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் ஜப்பானின் நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைந்துள்ளது. கடந்த இருபதாண்டுகளாக காணப்பட்டுவரும் நலிவுற்ற பொருளாதார நிலை பெண்கள் குறைந்த அளவு ஊதியம் பெறும் ஒப்பந்த நிலையை இங்கு ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. குடும்ப வருமானக் குறைவே குழந்தைகளின் வறுமை சதவிகிதத்தை உயர்த்தியுள்ளது என்று நலத்துறை அமைச்சகம் குறிப்பிடுகின்றது.
இந்த நிலை ஆச்சரியத்தை அளிக்கவில்லை என்று கூறும் மசாடோ ஹிராயு என்ற குழந்தை வறுமை ஒழிப்பு ஆர்வலர் இந்தப் பிரச்சினையைக் கையாளுவதில் செயலாற்ற நிலையை உடைய அரசினால் ஏற்படும் இயற்கையான முடிவு இதுவாகத்தான் இருக்கும் என்று குறிப்பிடுகின்றார்.
 
மற்றைய செய்திகள்

வியாழன், 17 ஜூலை, 2014

செர்பியா எல்லையில் தோன்றியது பாரிய பள்ளம்! !

 செர்பிய நாட்டின் யாமல் தீபகற்பகத்தில் திடீரென மெகா பள்ள தோன்றியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா - செர்பியா எல்லையான வடமேற்கு மாகாணத்தில் யாமல் தீபகற்ப பகுதி உள்ளது. இயற்கை எரிவாயு அதிகம் உள்ள நிலப்பரப்பு இப்பகுதி ஆகும். உலகத்தின் முடிவு எனவும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் மெகா சைஸ் பள்ளம் தோன்றியுள்ளது. 80 மீ அகலம் கொண்டதாகவும் இருந்தது.
   அதன் ஆழம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். திடீரென பள்ளம் தோன்றியது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக உள்ளது.பூமிக்கடியில் உள்ள பாறைகள் இடம் பெயர்வதே இப்பள்ளத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
விஞ்ஞானிகள் அதிர்ச்சியில்!

மற்றைய செய்திகள்

இராக்கில் தவித்த புதுவை இளைஞர் மீட்பு

இராக்கில் வேலைக்காகச் சென்று, உள்நாட்டுப் போரால் சிக்கித் தவித்த புதுவையைச் சேர்ந்த இளைஞர் மத்திய அரசால் மீட்கப்பட்டு புதன்கிழமை வீடு திரும்பினார்.
புதுவை பெரியார் நகர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் ஷியாபுதீன் (35). கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி இராக் சென்ற அவர், குருதீஸ்தான் பகுதியில் உள்ள எக்ஸ்பெர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில், பராமரிப்புப் பிரிவில் பணியாற்றி வந்தார்.
அங்கு உள்நாட்டுப் போர் மூண்டதால், அந்த நிறுவனம் மூடப்பட்டது. இதனால் வேலையின்றியும், அங்கிருந்து வெளியே செல்ல வழியின்றியும் அவர் தவித்து வந்தார்.
ஷியாபுதீனை மீட்கக் கோரி அவரது மனைவி மரியம்பி, தனது 2 பிள்ளைகளோடு வந்து, கடந்த ஜூன் 23-ஆம் தேதி புதுவை முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளித்தார்.
இந்நிலையில், மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய வெளியுறவுத் துறையின் முயற்சியின் காரணமாக, புதுவையைச் சேர்ந்த ஷியாபுதீனும் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும், இராக்கிலிருந்து புதன்கிழமை தாயகம் திரும்பினர்.
காலையில் சென்னை விமான நிலையம் வந்த ஷியாபுதீன், அங்கிருந்து பேருந்தில் புதுவைக்கு வந்து சேர்ந்தார். அவரை மனைவி மரியம்பி மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
ஷியாபுதீனை மீட்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். இதனையடுத்து, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, ஷியாபுதீன் நன்றி தெரிவித்தார். மேலும், இராக்கில் தான் பணியாற்றிய நிறுவனத்தில் முடங்கியுள்ள பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

மற்றைய செய்திகள்

 

ஜனாதிபதி இரங்கல் மரணத்தை தழுவிய இராணுவ வீரர்...

பிரான்ஸ் நாட்டில் இராணுவ வீரர் ஒருவர் உளவு பணியிலிருந்த போது இறந்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்சின் வடக்கு மாலி நகரில் நேற்று உளவுப்பணியில் இராணுவ வீரர் ஒருவர் உளவுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த இறப்பிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகை வருதத்தை தெரிவித்துள்ளது.மேலும் இறந்த வீரரின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்த ஜனாதிபதி ஹோலாண்டே அவருக்கு புகழாரமும் சூட்டியுள்ளார்.
இதேபோல் கடந்த ஜனவரி 2013ம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 9 வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மற்றைய செய்திகள்

செவ்வாய், 15 ஜூலை, 2014

புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிக உயரமான டீன் ஏஜ் பெண்!

துருக்கியை சேர்ந்தவர் ருமேசா கெல்கி (17). இவர் 11வது வகுப்பு படித்து வருகிறார். இவரது உயரம் 7 அடி 9 இஞ்ச் ஆகும். வீவர் சிண்ட்ரோம் என்ற அபூர்வ நோயால் ருமேசா பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தான் இவர் அதிக உயரம் வளர்ந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதுவே அவருக்கு பெருமை சேர்த்துள்ளது. அதாவது உலகிலேயே மிக உயரமான 'டீன்ஏஜ்' பெண்
அதற்காக சமீபத்தில் அவரது சொந்த ஊரான சப்ரான் போலுவில் பாராட்டு விழா நடந்தது. அப்போது அவருக்கு அதற்கான கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த விழாவில் ருமேசா கூறியதாவது..
"நான் வெளியில் செல்லும் போது அனைவரும் என்னை வினோதமாக பார்ப்பார்கள். அதற்காக நான் மனசங்கடப்படுவதில்லை. மாறாக பெருமை கொள்வேன். உயரமாக இருக்கும் நான் மற்றவர்களை குனிந்து பார்ப்பதில் எனக்கு அலாதியான மகிழ்ச்சி ஏற்படும். ஒரு சில சிறந்தவர்களால் மட்டுமே கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற முடியும். அந்த வகையில் நானும் அதில் இடம் பிடித்து இருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது" என்றார்.
 
மற்றைய செய்திகள்

 

செய்மதி தொலைபேசிகள் எப்படிக் கிடைத்தன?

புகலிடம் தேடி வந்த அகதிகளிடம் செய்மதித் தொலைபேசிகள் இருந்தமை குறித்து அவுஸ்திரேலியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அண்மையில் அவுஸ்ரேலிய கடற்பரப்பை படகு மூலம் சென்றடைந்த 153 அகதிகளிடம் செய்மதித் தொலைபேசிகள் காணப்பட்டன. இது தொடர்பில் அவுஸ்ரேலிய அரசாங்கம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அகதிகள் சட்டத்தரணிகளுடன் செய்மதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு சட்டத்தரணிகளின் தொலைபேசி இலக்கங்கள் கிடைக்கப் பெற்றன என்பது குறித்தும் விசாரணை செய்யப்பட உள்ளது.
   இந்த தொலைபேசி உரையாடல்களை அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினர் பதிவு செய்துள்ளனர். அகதிகளின் இந்த பயணம் திட்டமிட்ட அடிப்படையிலான சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கை என அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மற்றைய செய்திகள்

திங்கள், 14 ஜூலை, 2014

சர்ச்சையில் சிக்கிய பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி  லஞ்ச ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
2007ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற லஞ்ச ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதாக நிக்கோலஸ் சர்கோசி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் வழக்கு விசாரணையை எதிர்கொண்டார்.
தன்னுடைய அரசியல் மறுபிரவேசத்தைக் குறைத்து மதிப்பிடும் வண்ணம் நீதித்துறையைக் கைக்குள் போட்டுக்கொண்ட அவரது எதிரிகள் தன்னை இப்படியொரு கோரமான பிரச்சினைக்குள் மாட்டிவிட்டதாக சர்கோசி குறை கூறினார். ஆனால் இப்போது அவரது தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியிடப்பட்டு மீண்டும் அவரை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
பிரெஞ்சு பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டிருந்த இந்த உரையாடலில் மொனாகோவில் உள்ள நீதிபதி கில்பர்ட் அசிபர்ட் தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஆறு நிதி ஊழல் வழக்குகளில் ஒன்றில் உதவி புரிந்தால் அதற்குத் தகுந்த வேலை ஒன்று பரிந்துரைக்கப்படும் என்று சர்கோசி தனது நீண்டகால வழக்கறிஞரிடம் தெரிவிப்பதுபோல் உள்ளது.

இந்த நீதிபதியுமே நீண்டகாலமாக நடைபெற்று வந்துள்ள கோடீஸ்வரர்கள் லோரியல் ஹேரஸ், லிலியன் பெட்டென்கோர்ட் நன்கொடை வழக்குகள் குறித்து சட்டவிரோதமாக சர்கோசிக்கு தகவல்கள் தந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் அரசின் சிபாரிசின்பேரில் அளிக்கப்படும் இந்தப் பதவி அந்த நீதிபதிக்கு அளிக்கப்படவில்லை என்றபோதும் இவ்வாறு உதவி புரிவதாகக் கூறுவதே பிரெஞ்சு அரசியல் சட்டத்தின்படி குற்றமாகக் கருதப்படும்.
போலியான பெயரில் வாங்கிய தொலைபேசியில் கடந்த பிப்ரவரி மாதம் இந்த உரையாடலை சர்கோசி மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி மொனாகோவின் பிரதமர் மைக்கேல் ரோஜரை சந்தித்தது குறித்தும் கில்பர்ட்டுக்குத் தகவல் தெரிவித்தார் என்றும் சர்கோசி மீது புகார் எழுந்தது. ஆனாலும், தனது தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்படுகின்றது என்பதை அறிந்திருந்த சர்கோசி இப்படி ஒரு வாய்ப்பை வெளியிட்டிருக்கமாட்டார் என்றும் அந்தத் தகவல் குறிப்பிடுகின்றது.

 
மற்றைய செய்திகள்

சனி, 12 ஜூலை, 2014

நெதர்லாந்து அமைச்சர் இலங்கைக்கு உயர்மட்ட விஜயம்

நெதர்லாந்தின் வர்த்தக துணை அமைச்சர் சைமன் ஸ்மிட்ஸ் எதிர்வரும் 14ம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

டச்சு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என கொழும்பில் அமைந்துள்ள நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிர்வரும் 14ம் திகதி விஜயம் செய்யும் அமைச்சர் ஸ்மிட்ஸ், 17ம் திகதி வரை தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது இந்த விஜயம், இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார சந்தை வாய்ப்புக்களை முதல்தரத்தில் கொண்டு வர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களையும் தனியார் துறையின் அதிகாரிகளையும் ஸ்மிட்ஸ் தனது விஜயத்தின் போது சந்திக்கவுள்ளார்.

இவ்வமைச்சரின் முக்கிய சந்திப்புக்கள் டச்சு நிறுவனங்களுடன் நடைபெறவுள்ளது. இந்த டச்சு நிறுவனங்கள் நீர்வளம் மற்றும் சுகாதாரத் துறையில் தங்களது நிபுணத்துவத்தை அளிக்கும் என நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

மற்றைய செய்திகள்

வியாழன், 10 ஜூலை, 2014

பல தடைகளையும் தாண்டி பிரம்ரன் நகரில் ஈழம் சாவடி..

 கனடாவில் ஒன்;டாரியோ மாகாணத்தில் பிரம்ப்டன் மாநகரில் கரபிராம்(carabram)நிகழ்வுகளில் தமிழர் கலை பண்பாட்டு வாழ்வை பிரதிபலிக்கும் கண்காட்சியும் நடன இசை நிகழ்ச்சிகளும் பிரம்ப்டன் சொக்கர் சென்டரில் ( டிக்ஸ்சி - சண்டல்வூட் பார்க்வே சந்தியில்) வருகின்ற வெள்ளிகிழமை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில்( ஐ_லை மாதம் 11 12 13 திகதிகளில்) நடைபெறவிருக்கின்றது. வருடம் தோறும் நடைபெறும் கரபிரம்) ஏனப்படும் பல்நாட்டு கலைகலாச்சார பண்பாட்டு விழாவில் பிரம்டன் வாழ்தமிழ் மக்கள் பிரம்ட்ன் தமிழ் ஒன்றியம் சார்பாக இரண்டாம் வருடமாக இம்முறையும் தமிழ் கலை கலாச்சார வரலாற்று பண்பாட்டு பிரதிபலிக்கும் வகையில் வெகு சிறப்பாக ஆயத்தங்களை செய்துள்ளார்கள்.
  
கடந்த வருடம் கரபிராம் நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்ட ஈழம் சாவடிக்கு 8000 க்கும் மேற்பட்ட பல்லின மக்கள் தரிசித்து தமிழர் கலை பண்பாட்டினை அறிந்து கொள்வதிலும் தமிழரின் சுவை நிறைந்த உணவு வகைகளை விரும்பி உண்பதிலும் இசை நடன நிகழ்வுகளில் ஆர்வமுடன் கண்டு களிப்பதிலும் திருப்தி அடைந்தார்கள்.
கனடாவின் மத்திய மாநில நகர அரசுகளிலிருந்தும் பல நாடாள மன்ற உறுப்பினர்கள் தமிழ்மக்களும் அதிகளவில் கலந்து கொண்டதோடு விடுமுறைக்கென் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த தமிழர்களும் ஈழம் சாவடியை தரிசித்து ஆதரவு வழங்கினார்கள். இந்த வருடமும் பாரிய அளவில் தமிழர் கலை பண்பாடு இலக்கியம் தமிழர் மருத்துவம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகைகளில் கண்காட்சியும் உணவு உடை தொடர்பான பல சாவடிகளும் சிறந்த நடனக் கல்லூரிகளிலிருந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் பல இசைக்குழுக்களின் இசைநிகழ்ச்சிகளும் சிறுவருக்கான பொழுது போக்கு விளையாட்டுக்களும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் அனைவரையும் ஈழம் சாவடி நிகழ்வுகளில் கலந்து விழாவை சிறப்பிக்க அழைக்கிறார்கள் பிரம்பன் வாழ் ஒன்றிய மக்கள்.
வாருங்கள் பாருங்கள் மகிழ்ந்து செல்லுங்கள்
விழா நிகழ்வுகள்
ஐீலை 11�� 2014 (வெள்ளிக்கிழமை) மாலை 6:00 தொடக்கம் இரவு 12:00 மணி வரை
ஐீலை 12�� 2014 (சனிக்கிழமை) மதியம்; 12:00 மணி தொடக்கம் இரவு 12:00 மணி வரை
ஐீலை 13�� 2014 (ஞாயிறுக்கிழமை) நண்பகல் 1:00 மணி தொடக்கம் மாலை 6:00 வரை மற்றைய செய்திகள்




 

புதன், 9 ஜூலை, 2014

தொடர் மழை , மண் சரிவு - 73 பேரை காணவில்லை!

சீனாவில் இன்று ஏற்பட்ட பயங்கர மண் சரிவில் 73-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளனர். இதுவரை 10-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. மீதிவுள்ளவரின் நிலை என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. சீனாவில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், மக்களுக்கு போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று, அதிகாலை சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தில் உள்ள லோங்யாங் மாவட்டத்தில் திடீரென்று மண்சரிவு ஏற்பட்டது.
இதில் 73 க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழிந்துள்ளனர். மண்ணில் புதைந்தவர்களில் 25 பேரை மட்டும் காப்பாற்றியுள்ளனர். மீதமுள்ளவரின் நிலை இதுவரை தெரியவில்லை. மீண்டும் மண் சரிவு ஏற்படும் என்ற பயத்தால், மீதமுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் மீட்பு குழுவினர் தங்க வைத்துள்ளனர். தொடர் மழையால் உலகில் பல இடங்களில் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு, அதனால் பலர் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
மற்றைய செய்திகள்

 

பிரதேசப் பொலிசார் விடுத்துள்ள வழிப்புணா்வு எச்சரிக்கை!

ரொறன்ரோவில் - Durham என அழைக்கப்படும் பிரதேசத்தில் பல வீட்டுரிமையாளர்களுக்கு தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகதத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக அவர்கள் ஹைட்டோவிற்கு கிட்டத்தட்ட 1000 டொலர்கள் வரையில் செலுத்தவேண்டியிருக்கின்றது எனவும் அதற்கான பணத்தை அனுப்பாவிடின் அவர்களது மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது என அவர்கள் பயமுறுத்தப்படுகின்றார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் வீட்டடைமையாளர்கள் மட்டுமல்ல தொழில் உரிமையாளர்களுக்கும் இவ்வாறான பயமுறுத்தல்கள் தொலைபேசி மூலகமாகக் கிடைத்திருக்கின்றன எனவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்
Durham பிரதேசப் பொலிசார் இவ்வாறன பல முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்திருப்பதாகவும் தாம் அவற்றைப் பரிசீலனை செய்துவருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். தொலைபேசி மூலமாக மிரட்டுபவர்கள் பொதுமக்களின் credit card or prepaid credit card போன்றவற்றைப் பாவித்து உடனடியாக குறிப்பிட்ட பணத்தைச் செலுத்தும்படியும் அவ்வாறு அவர்கள் செய்யாவிடின் அவர்களின் மின்சாரம் துண்டிக்கப்பம் எனப் பயமுறத்தி வருகின்றார்கள் எனத் தெரிவித்திருக்கின்றார்கள்.
குறிப்பிட்ட இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படுவதற்கான வகையில் தமது தொலைபேசியில் answering machine and toll-free number போன்ற நடைமுறைகளை அமைத்திருக்கின்றார்கள் எனப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறான பயமுறுத்தும் தொலைபேசி அழைப்பு கிடைத்தால் பணத்தினைச் செலுத்துவதற்கு நடவடிக்கை செய்வதற்கு முன்பாக கடந்த மாதத்தின் கட்டனசீட்டினைப் பரிசீலனை செய்யும்படி மக்கள் கேட்கப்படுகின்றார்கள். அத்துடன் 1-888-579 FREE யுடன் தொடர்பு கொண்டு விபரத்தைத் தெரிவிக்கும்படியும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளார்கள் எனத் தெரிகிறது.

மற்றைய செய்திகள்

திங்கள், 7 ஜூலை, 2014

உளவு சொல்லும் ஜேர்மன் ஊழியர்கள்?

ஜேர்மனியின் வெளிநாட்டு புலனாய்வு சேவை ஊழியர் ஒருவர் அமெரிக்காவிற்கு உளவு சொல்வதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டுள்ளார்.
பாராளுமன்ற விவகாரத்தில், ஜேர்மனியின் வெளிநாட்டு புலனாய்வு சேவை ஊழியர் ஒருவர், அமெரிக்கவின் வாஷிங்டன் அரசுக்கு உளவு சொல்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
கைதுசெய்ய பட்ட அந்த 31 வயது ஊழியர், பெயர் குறிப்பிடாத மையத்திற்கு, வெளிநாட்டு புலனாய்வு சேவை செய்து வருவதாக அரசு தரப்பில் குறிப்பிடபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஊடகங்கள் அந்த நபர் அமெரிக்க புலனாய்வு சேவை மையத்திற்கு தகவல் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடுகின்றன.
அமெரிக்கா புலனாய்வு சேவை மையம், ஜேர்மனிய ஊழியர்களை குறி வைத்து உளவு சொல்வதற்கு ஆட்களை சேகரிப்பதாக வெளியான செய்திகள
அடுத்து இந்த நபர் கைது செய்யபட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இது போன்ற விடயங்களில் ஈடுபட வேண்டாம் என மற்ற ஊழியர்களை எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
மற்றைய செய்திகள்
 
 



 
                     

ஞாயிறு, 6 ஜூலை, 2014

ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற மாணவனின் தாய்

katthi
  பிரான்சில் பள்ளி வகுப்பறையில் ஒரு மாணவனின் தாய், ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு பிரான்சில் உள்ள அல்பி என்ற நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் ஒரு மாணவனுடன், அவனது தாயும் பள்ளிக்கு வந்துள்ளார். அவர் தன் மகன் படிக்கும் வகுப்பறைக்குள் சென்று, சிறிது நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியையை குத்தியுள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த அந்த ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கத்தியால் குத்திய பெண் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கல்வித்துறை மந்திரிக்கு பிரான்ஸ் அதிபர் ஹொலாண்டே உத்தரவிட்டுள்ளார்.
 
மற்றைய செய்திகள்

சனி, 5 ஜூலை, 2014

அமெரிக்காவுடன் இணைய ரஷ்யா போடும் திட்டம்?

இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்ற அமெரிக்கா, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகிறது.
இந்த சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் நல்வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் ரஷ்யாவும், அமெரிக்காவும் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஷ்யா ஜனாதிபதி மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
சர்வதேச அளவில் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றை ஒட்டுமொத்த உலகின் நலனையொட்டி பாதுகாக்கிற சிறப்பான பொறுப்பு ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் உண்டு என ஒபாமாவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1776ம் ஜூலை நான்காம் திகதி இங்கிலாந்திடம் இருந்து அமெரிக்கா சுதந்திரம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது
மற்றைய செய்திகள்

வெள்ளி, 4 ஜூலை, 2014

இந்திய- சீன ராணுவ தளபதிகள் முக்கிய பேச்சுவார்த்தை

எல்லைப் பகுதியில் அமைதியை பராமரித்தல், புதிய எல்லை பாதுகாப்புத் திட்டம் உள்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சீன ராணுவத் தளபதியுடன் இந்திய ராணுவ தலைமைத் தளபதி விக்ரம் சிங் ஆலோசனை நடத்தினார்.
கடந்த 9 ஆண்டுகளில் சீனாவுக்கு சென்றுள்ள முதல் இந்திய ராணுவ தலைமைத் தளபதியான ஜெனரல் விக்ரம் சிங், அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஃபாங் ஃபெங்குயியை பெய்ஜிங்கில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.India_china
இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு ராணுவத்தினரிடையேயான கூட்டுப் பயிற்சிகளை அதிகரித்தல், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட எல்லை பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தம் உள்பட உயர்நிலை அதிகாரிகளிடையிலான தகவல் பரிமாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக இந்திய தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, பெய்ஜிங் சென்றடைந்த விக்ரம் சிங்கை வரவேற்று ஃபாங் ஃபெங்குயி கூறுகையில், “இந்தியாவில் புதிய அரசு பதவியேற்றபிறகு முதன்முறையாக வந்துள்ள உங்கள் தலைமையிலான மூத்த ராணுவ அதிகாரிகள் குழுவின் வருகை இருநாட்டு உறவை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது’ என்றார்.
அதற்கு, “சீனாவுடனான உறவுக்கு இந்தியா அதிகபட்ச முன்னுரிமை அளித்துள்ளதோடு, இருநாட்டுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் உறுதி பூண்டுள்ளது’ என்று விக்ரம் சிங் பதில் அளித்தார்.

மற்றைய செய்திகள்
 

வியாழன், 3 ஜூலை, 2014

விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: 290 பேர் பலி (காணொளி, )

அமெரிக்க போர்க் கப்பல் பாரசீக வளைகுடா மீது பறந்த ஈரான் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. இதில் பயணம் செய்த 290 பேரும் கொல்லப்பட்டனர்.
இன்று வரலாற்றில் நடந்தவை,
* 1778 - புருசியா ஆஸ்திரியாவின் மேல் படையெடுத்தது.
* 1848 - அமெரிக்கக் கன்னித் தீவுகளில் பீட்டர் வொன் ஸ்கொல்ட்டன் என்பவரால் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.
* 1867 - தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
* 1866 - புருசியாவின் வெற்றியுடன் ஆஸ்திரிய- புரூசியப் போர் முடிவுக்கு வந்தது.
* 1944 - இரண்டாம் உலகப் போர்: பெலரஸ்சின் தலைநகர் மின்ஸ்க் சோவியத் படையினரால் நாசி ஜெர்மனியிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
* 1969 - சோவியத்தின் என்1 என்ற ஏவுகணை ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது.
* 1970 - பிரிட்டன் விமானம் ஸ்பெயினில் மலையொன்றுடன் மோதியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.




மற்றைய செய்திகள்
 

புதன், 2 ஜூலை, 2014

முன்னாள் ஜனாதிபதி பொலிஸ் காவலில் வைப்பு

  பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டு வழக்கு, நீதிமன்றத்துக்கு போகுமா என்பது குறித்து தகவல் தருவதற்காக ஒரு மாஜிஸ்திரேட்டுக்கு உயர் பதவி பெற்றுத்தருகிறேன் என வாக்குறுதி

அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் இரு தினங்களுக்கு முன்பு அவரது சட்டத்தரணி மற்றும் இரு நீதவான் நீதிமன்ற நீதிபதிகளிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், சர்கோசியை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொலிஸார் அழைப்பாணை அனுப்பினர். அதன்படி நேற்று அவர் பாரீசில் பொலிஸார் முன்பு ஆஜர் ஆனார். அவரை காவலில் வைத்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

 அவரை மேலும் ஒரு நாள் தங்கள் காவலில் வைத்து பொலிஸார் விசாரணை நடத்தவுனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணைகளின் பின்னர் அவர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படலாம் அல்லது விடுவிக்கப்படலாம். பிரான்சில் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் பொலிஸ் காவலில்

வைக்கப்படுவது இதுவே முதல் முறை. 2017ம் ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக சர்கோசி சமீபத்தில் அறிவித்திருந்தார். இப்போது பொலிஸ் விசாரணையில் அவர் சிக்கி இருப்பது, மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அவருடைய முடிவுக்கு விழுந்த அடியாகக் கருதப்படுகிறது.

மற்றைய செய்திகள்