Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 22 செப்டம்பர், 2014

படிப்புக்கு மாணவர்களுக்கு உதவும் பிச்சைக்கார தாத்தா!

சீனாவில் பிச்சைக்கார முதியவர் ஒருவர் 3 கல்லூரி மாணவர்களின் படிப்புக்கு உதவுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் (Beijing) வசிக்கும் முதியவர் (65) ஒருவர் அப்பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வருகிறார்.
இவர் பிச்சை எடுக்கும் பணத்தை மாதந்தோறும் அங்குள்ள அஞ்சலகத்தின் மூலம் தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார்.
இதுகுறித்து அஞ்சலக ஊழியர்கள் கூறுகையில், மாதம் தவறாமல் தான் பிச்சை எடுத்த பணத்தை எங்கள் அலுவலகத்திற்கு இவர் கொண்டுவருவது வழக்கம் என்றும் ஒரு மாதத்திற்கு மட்டும் சுமார் 10,000 ரென்மிம்பிகள் (Renminbi) சம்பாதிப்பார் எனவும் கூறியுள்ளனர்.
வெகு காலமாக பிச்சை எடுத்து வரும் இவர், சொந்த ஊரில் வீடு கட்டியுள்ளது மட்டுமின்றி 3 மாணவர்களின் கல்லூரி படிப்புக்கும் உதவுகிறார் என கூறப்படுகிறது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 18 செப்டம்பர், 2014

பியர் போத்தில்கள் திருடிய குடிமகன்கள்

கனடாவில் 1300க்கும் மேற்பட்ட பியர்  பெட்டிகள் களவு போனதை தேடும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் பிரபல பியர்  நிறுவனம் ஒன்றிலிருந்து சுமார் 1300க்கும் மேற்பட்ட பீர் பெட்டிகள் திருடப்பட்டுள்ளன. இவை 25,000 டொலர்கள் மதிப்பு கொண்டவை ஆகும்.
மேலும் லொறி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இந்த பியர் போத்தில்கள், உடைக்கப்பட்டு திருடப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த திருட்டை அரங்கேற்றிய குடிமகன்களை பிடிக்கும் முயற்சியில் பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

திக்குமுக்காடிய பல்கலைக்கழகம்

பிரான்ஸ் நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் தோலோஸ் (Toulouse) நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் சுமார் 1200 மாணவர்களை அடுத்த வாரம் வருமாறு கூறியுள்ளது.
தற்போது பொதுமான ஆசிரியர்கள் நியமிப்பதற்கும், வகுப்பறைகள் கட்டுவதற்கும் அவகாசம் கேட்டுள்ளது.
மேலும் மற்ற மாணவர்களை வேறு பல்கலைக்கழகத்தில் மாற்றவும் திட்டமிட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

பாரதி வித்தியால மாணவர்கள் அமெரிக்கத் தூதரகத்தால் கௌரவிப்பு!

அமெரிக்கத் தூதரகத்தின் அனுரணையுடன் கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் நடத்தப்பட்ட விசேட ஆங்கில பயிற்சி நெறியில் தேர்ச்சிபெற்ற 38 மாணவர்கள் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இந்தக் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அமெரிக்கத் தூதரகத்தால் நடத்தப்பட்ட ஆங்கிலப் பயிற்சி நெறியில் சிறப்பாகச் சித்தியெய்திய 38 மாணவர்களும் அவர்களுக்கு பயிற்சி வழங்கிய மூன்று ஆசிரியர்களும் நாளை அமெரிக்கத் தூதரத்தில் வைத்துக் கௌரவிக்கப்படவுள்ளனர். அமெரிக்கத் தூதரகத்தால் விசேடமாக அனுப்பப்பட்ட பேருந்து மூலம் கொழும்புக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வியாழன், 11 செப்டம்பர், 2014

விண்வெளி நிலையத்தை 2022ம் ஆண்டில் அமைக்க சீன திட்டம்!

சீனா தனது முதல் விண்வெளி நிலையத்தை 2022ம் ஆண்டு நிறுவப்போவதாகக் கூறியிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே, விண்வெளி நிலையம் அமைக்கும் வேலைகளைத் தொடங்கப்போவதாக சீன அதிகாரிகள் தெரிவித்திருந்தனர், ஆனால் இப்போது அவர்கள் இது குறித்த விவரமான கால அட்டவணையை வெளியிட்டிருக்கிறார்கள். புதிய விண் ஆய்வுக் கூடம் ஒன்று இரண்டாண்டுகளில் தொடங்கப்படும்; அதன் பின்னர் ராக்கெட்டுகள் மற்றும் பிற அமைப்புகள் உருவாக்கப்படும்.
சீன விண்வெளி வீரர்கள் ஏற்கனவே விண்வெளியில் கலன்களை பொருத்தும் நடவடிக்கைகளை பயிற்சி செய்து வருகின்றனர். சீனா ஒரு விண்வெளி சக்தியாக உருவாக வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக சீனாவின் தலைவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் அதற்குத் தேவைப்படும் தொழில்நுட்பம் குறித்த விஷயத்தில், ரஷ்யா மற்றும் அமெரிக்காவைவிட , சீனா பின் தங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வியாழன், 4 செப்டம்பர், 2014

பள்ளியில் படிக்கும் நண்பனை துரத்தி துரத்தி கத்தியால் குத்திய தமிழ் இளைஞன்:

பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் தன்னுடன் பள்ளியில் படிக்கும் நண்பனை கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்வம் ஒன்று நடந்துள்ளது.
பிரித்தானியாவின் நோத்-கால்ட் (Northolt) நகரில் வசித்து வந்த சுலக்ஷன் (Sulaxssan) என்னும் 19 வயதான இளைஞன், தன்னுடன் பயிலும் 17 வயது மாணவன் டுஷான் சீனுவை (Dusan Sinu) தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த மாணவர் வேறு வீடு மற்றும் பள்ளிக்கூடம் என மாறிச் சென்றுள்ளார்கள்.
ஆனாலும் சுலக்ஷன் அவரை பின் தொடர்ந்துள்ளார்.சுலக்ஷன், சீனுவை தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில், ஒருநாள் அவர்கள் இருக்கும் புது வீட்டிற்குச் சென்று கதவை தட்டியுள்ளார்.
வெளியே வராவிட்டால் கண்ணாடியை உடைப்பேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன டுஷான் வெளியே வந்தவேளை அவரை முகத்தில் அடித்துள்ளார்.
இதனால் பயந்து போன டுஷான் ஓட ஆரம்பித்துள்ளார். பின்னர் தனது உடல் முழுவதும் இரத்தத்தால் நனைந்திருப்பதை உணர்ந்த டுஷான், தன்னை சுலக்ஷன் கத்தியால் குத்திவிட்டார் என்பதனையும் பின்னரே உணர்ந்துள்ளார்.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நல்லவேளையாக கத்தி நெஞ்சில் குத்தப்படவில்லை. மார்புக்கும் கைகளுக்கும் இடையே தான் குத்தப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் பேசிய நீதிபதி, உங்களை 19 வயதில் நான் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக கவலையடைகிறேன்.
நீங்கள் குத்திய கத்தி சற்று ஆழமாக ஏறி இருந்தால் கூட டுஷான் கொலை செய்யப்பட்டு இருப்பார். எனவே உங்களுக்கு 4 வருட தண்டனை வழங்குகிறேன் என்று கூறி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
டுஷானின் தரப்பில் பேசும்போது, சுலக்ஷன் ஏற்கனவே வெடிகுண்டு புரளி ஒன்றை செய்து, நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நபர் என்று தெரிவிக்கப்பட்டது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

புதன், 3 செப்டம்பர், 2014

மாணவர்களுக்கு பயங்கரவாத காணொளி ஒளிபரப்பு: பரபரப்பு

பிரித்தானியாவில் பள்ளி கூடம் ஒன்றில் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவளிக்கும் விளம்பர படத்தின் காணொளி திரையிடப்பட்டத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
பிரித்தானியாவின் பிர்பிங்கம் (Birmingham) நகரில் உள்ள பள்ளிகூடம் ஒன்றில் பயங்கரவாதியாக மாற வலியுறுத்தும் வகையில் காணொளி ஒன்று திரையிடப்பட்டுள்ளது.
இதில் பள்ளி மாணவர்கள் பார்க்க கூடாத அளவிற்கு வன்முறை உள்ள காட்சிகள் வெளியானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்லாமிய மதத்தை பற்றி விளம்பரம் செய்த பள்ளிக்கூடம் மற்ற இளைஞர்களை மாற வைக்க ஏதாவது தீவிரவாத முயற்சி செய்கிறதா? என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பள்ளிக்கூட அளவில் மத பிரச்சினை மற்றும் இன பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்க்கொள்ள போவதாக நகரத்தின் அலோசனை சபை தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்
 

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

நேர்ந்த கொடூரம் :சிறுமிக்கு நடந்தது என்ன? பொலிசார் விசாரணை !

 அமெரிக்காவில் சிறுமி ஒருவர் பள்ளிக்கூடத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் புது சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அர்லிங்டன்(Arlington) நகரை சேர்ந்த அவலின்(Avalin age - 5) என்ற சிறுமி பலத்த காயத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
இவர் பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தில் விழுந்து அடிபட்டதாக பள்ளி நிறுவனம் கூறி வரும் நிலையில், சிறுமியின் தாயார், தனது மகள் தாக்கப்பட்டுள்ளார் என சர்ச்சை எழுப்பியுள்ளார்.
இதனை அடுத்து இவர் தனது மகளின் காயங்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது மகளுக்கு நியாயம் கிடைக்க நிதி உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சிறுமியின் அடிபட்ட முகத்தின் புகைப்படங்களை பார்த்தால் எவரோ தாக்கியது போல இருப்பதால் பெரும்பாலான மக்கள் நிதி கொடுத்துள்ளனர்.
இந்த காயம் ஏற்பட்ட பின்னணியில் எவரும் ஈடுபட்டுள்ளதாக இதுவரை எந்த தடையமும் சிக்கவில்லை என்றாலும், பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் லேசி, தனது மகளுக்கு என்ன நடந்தது என தெரிந்து கொள்ளும் வரையில் போராட போவதாக உறுதியளித்துள்ளார்.
 இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்