தற்போது, உலகெங்கும் புகழ்பெற்ற ஒரு போட்டோ பாணி செல்ஃபி… தினமும், பல்துலக்குவது, குளிப்பது போன்று அன்றாட வாழ்வில் சாதாரணமான ஒன்றாகிவிட்டது இந்த செல்ஃபி. இந்நிலையில், சிலர் தனித்துவமான செல்ஃபி எடுப்பதற்காக உயிரை பணையம் வைத்து ஆபத்துகளில் இறங்குவது, வினொதமாக யாரும் செய்யாத ஒன்றை செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டுவருகின்றனர். அப்படித் தான் ஆர்வக்கோளாரில் லெபானனைச் சேர்ந்த நபர் ஒருவர், இறந்த தன் தாயை தோண்டி எடுத்து செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார். லெபனானில் உள்ள சுடுகாடு ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வருபவர், டெப் சாய்ஃலி (Deab Saiqly) என்ற நபர்.
இவர் ஏற்கனவே இறந்து புதைக்கப்பட்ட தன் தாயுடன் செல்ஃபி எடுத்து இணையத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதற்காக, பல ஆண்டுகளுக்கு முன் இறந்த தன் தாயின் பிணத்தை கல்லரையிலிருந்து தோண்டி எடுத்து, அதனுடன் பல்லைக் காட்டி கொண்டு செல்ஃபி எடுத்துள்ளார் இந்த நபர். உலகெங்கிலும், பலர் இந்த மூட செயலிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை கண்ட மருத்துவர்கள் சிலர் இவருக்கு மனநிலை சரியில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் மனநல மருத்துவரிடம் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ”எனக்கு அமெரிக்காவில் வரன் ஒன்று அமைந்தது ஆனால் மரணங்கள் எனக்கு விருப்பமான ஒன்றாக இருப்பதால் அதனை நான் நிராகரித்தேன்.” “இதுவரை நான் நிறைய சடலங்களுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளேன், ஆனால் தாயாருடன் எடுத்துக் கொண்ட செல்பியை மட்டும் பாதுகாப்பாக வைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த பேட்டியைப் பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இவரை பேட்டி எடுத்த மருத்துவர் இவருக்கு மனநிலை சரியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
புதன், 26 நவம்பர், 2014
திங்கள், 24 நவம்பர், 2014
சீன விமான ஓடுதளத்தை அமைத்து உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு பத்திரிகை
தெற்கு சீன கடல் பகுதியில் சீனாவுக்கும், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில், அங்குள்ள சர்ச்சைக்குரிய ஸ்பிரேட்லி தீவில் கட்டுமானப்பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக அங்கு விமான ஓடுதளத்தை அமைத்து உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.
மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் “மங்கள்யான்':“டைம் இதழ் புகழாரம்
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “டைம்’ இதழ் வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் மிகச் சிறந்த 25 கண்டுபிடிப்புகளின் பட்டியலில் இந்தியாவின் “மங்கள்யான்’ இடம்பெற்றுள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பியுள்ள மங்கள்யான் குறித்து அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைய அமெரிக்காவால் முடியவில்லை. ரஷியாவாலும், ஐரோப்பாவாலும்கூட முடியவில்லை.
ஆனால் செவ்வாயின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தைச் செலுத்தி, இந்தியா அதை சாதித்திருக்கிறது.
செவ்வாய் கிரகத்தை எட்டியதன் மூலம், மற்ற ஆசிய நாடுகள் எதுவும் இதுவரை செய்திராத சாதனையை இந்தியா செய்துள்ளது. இந்தியாவின் மங்கள்யான், படுசூட்டிகையான விண்கலம் (சூப்பர்ஸ்மார்ட் ஸ்பேஸ்கிராஃப்ட்) ஆகும்.
வெறும் ரூ.450 கோடி செலவில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள மங்கள்யானில், அங்குள்ள மீத்தேன் வாயுவை அளவிடும் கருவி உள்பட நான்கு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
விண்வெளித் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் வலிமை, இந்த விண்கலம் மூலம் நிரூபணமாகியுள்ளது என “டைம்’ இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
வெள்ளி, 21 நவம்பர், 2014
ஒரு மில்லியன் குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர்:??
கனடாவில் குழந்தைகளின் வறுமை மற்றும் பட்டினியை முற்றாக ஒழிக்க கனேடிய அரசாங்கம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய உறுதிமொழியை இன்னும் நிறைவேற்ற முடியாதிருப்பதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். கனேடிய நாடாளுமன்றத்தில் கனடாவில் குழந்தைகளின் வறுமை குறித்து மோசன் எம்.534 கீழ் ஆற்றிய உரையில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்... கனேடிய அரசாங்கம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகளின் வறுமை மற்றும் பட்டினியை அறவே ஒழித்து விட வேண்டும் என உறுதிப்பூண்டிருந்தது. ஆயினும் இந்த உறுதியிணை இன்னும் கனேடிய அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாதுள்ளது. ஒரு மில்லியன் கனேடிய குழந்தைகள் இன்னும் வறுமையில் வாடி வருகின்றனர்.
உலகில் செல்வந்த நாடுகளின் ஒன்றான எமது மகத்தான கனடா, நமது நாட்டில் முற்றாக வறுமை ஒழிக்கப்பட்டு விடும் என ஐ.நா சபையில் தெரிவித்திருந்தமை எம் எல்லோருக்கும் நினைவிருக்கலாம். இதன் முதல் கட்டமாக கனடாவில் வறுமையில் வாடி தவிக்கும் ஒரு மில்லியன் குழந்தைகளின் பட்டினியை போக்கி, அவர்களின் உணர்வினை அறிந்து அவர்களது வளர்ச்சிக்கு வழிகோல வேண்டியது கனேடிய
அரசாங்கத்தின் மிகப் பெரிய கடமையல்லவா?. பூனை தனது கண்களை மூடிக்கொண்டு உறங்கும் போது முழு உலகமே இருளாக இருக்கின்றது என்று எண்ணுவது போல் நமது அரசாங்கம் தனது கண்களை இறுக மூடிக்கொண்டு கனேடிய எல்லையெங்கும் வறுமையோ பட்டினியோ இல்லை என்று கூறுவதை போல் உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக குழந்தைகளின் வறுமை வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். கனடாவில் வறுமை காரணமாக ஒரு மில்லியன் குழந்தைகள் போஷாக்கின்மையோடு வாழ்ந்து வருவதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். வறுமை என்பது எப்படி மறுக்க முடியாத உண்மையோ, வறுமை மற்றும் பட்டினி காரணமாக ஏற்பட்டுள்ள குழந்தைகளின் போஷாக்கின்மையும் உணவு பற்றாகுறை என்பனவும் மறுக்க முடியாத உண்மைகளாகும். யுனிசெப் அமைப்பு தனது ஆய்வறிக்கையில், கனடாவில் குழந்தைகளின் வறுமை மற்றும் போஷாக்கின்மை குறித்து விபரித்து எழுதியிருந்தது.
இதற்கு பதிலளித்த நமது கனேடிய அரசாங்கம் வறுமையை முற்றாக ஒழித்து விட முடியும் என கூறியிருந்தாலும் முக்கியமாக குழந்தைகளின் வறுமை, பட்டினி மற்றும் போஷாக்கின்மையை ஒழிக்க மேற்கொள்ளவிருக்கும் செயற்திட்டங்களை முழுவதுமாக நிறைவேற்றவில்லை என்பது நம் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். 25 வருடங்களுக்கு முன்னர் கனேடிய குழந்தைகளின் வறுமை நிலைமையானது 13 சத வீதமாக மட்டுமே இருந்தது. எனினும் தற்போது அது 23 சத வீதத்தை எட்டியுள்ளது.
கனடாவை ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 23 சத வீதம் என்ற இந்த நிலைமையானது நமது நாட்டின் மதிப்பு உலக அரங்கில் எப்படி மதிக்கப்படும் என்பதை அவையாரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். யுனிசெப் நிறுவனம், கனேடிய அரசாங்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சர்வதேச
நிறுவனங்கள் முன்வந்து தேவையான போதிளவு பொருளுதவிகளை உணவு வங்கி மூலமாக வழங்கி, கனடாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் குழந்தைகளை காபற்ற வேண்டியதன் அவசியத்தை அவையாரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
கனேடிய அரசாங்கம் குழந்தைகளின் வறுமையையும் பட்டினியையும் போஷாக்கின்மையையும் ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன். கனேடிய அரசாங்கம், குழந்தைகளின் வளர்ச்சிக்காக வீட்டுத்திட்டங்கள், குழந்தை காப்பகங்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து திட்டம் ஆகிய மூன்றையும் கவனத்தில் கொண்டு, பொருளாதார உதவிகள் செய்து மேற்கூறிய திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு செயற்பட்டால், கனடாவில் குழந்தைகளின் வறுமை நிலைமையை படிப்படியாக குறைத்து, பின்னர் அதனை முற்றாக ஒழித்து விடலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ராதிகா சிற்சபேசன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> உலகில் செல்வந்த நாடுகளின் ஒன்றான எமது மகத்தான கனடா, நமது நாட்டில் முற்றாக வறுமை ஒழிக்கப்பட்டு விடும் என ஐ.நா சபையில் தெரிவித்திருந்தமை எம் எல்லோருக்கும் நினைவிருக்கலாம். இதன் முதல் கட்டமாக கனடாவில் வறுமையில் வாடி தவிக்கும் ஒரு மில்லியன் குழந்தைகளின் பட்டினியை போக்கி, அவர்களின் உணர்வினை அறிந்து அவர்களது வளர்ச்சிக்கு வழிகோல வேண்டியது கனேடிய
அரசாங்கத்தின் மிகப் பெரிய கடமையல்லவா?. பூனை தனது கண்களை மூடிக்கொண்டு உறங்கும் போது முழு உலகமே இருளாக இருக்கின்றது என்று எண்ணுவது போல் நமது அரசாங்கம் தனது கண்களை இறுக மூடிக்கொண்டு கனேடிய எல்லையெங்கும் வறுமையோ பட்டினியோ இல்லை என்று கூறுவதை போல் உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக குழந்தைகளின் வறுமை வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். கனடாவில் வறுமை காரணமாக ஒரு மில்லியன் குழந்தைகள் போஷாக்கின்மையோடு வாழ்ந்து வருவதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். வறுமை என்பது எப்படி மறுக்க முடியாத உண்மையோ, வறுமை மற்றும் பட்டினி காரணமாக ஏற்பட்டுள்ள குழந்தைகளின் போஷாக்கின்மையும் உணவு பற்றாகுறை என்பனவும் மறுக்க முடியாத உண்மைகளாகும். யுனிசெப் அமைப்பு தனது ஆய்வறிக்கையில், கனடாவில் குழந்தைகளின் வறுமை மற்றும் போஷாக்கின்மை குறித்து விபரித்து எழுதியிருந்தது.
இதற்கு பதிலளித்த நமது கனேடிய அரசாங்கம் வறுமையை முற்றாக ஒழித்து விட முடியும் என கூறியிருந்தாலும் முக்கியமாக குழந்தைகளின் வறுமை, பட்டினி மற்றும் போஷாக்கின்மையை ஒழிக்க மேற்கொள்ளவிருக்கும் செயற்திட்டங்களை முழுவதுமாக நிறைவேற்றவில்லை என்பது நம் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். 25 வருடங்களுக்கு முன்னர் கனேடிய குழந்தைகளின் வறுமை நிலைமையானது 13 சத வீதமாக மட்டுமே இருந்தது. எனினும் தற்போது அது 23 சத வீதத்தை எட்டியுள்ளது.
கனடாவை ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 23 சத வீதம் என்ற இந்த நிலைமையானது நமது நாட்டின் மதிப்பு உலக அரங்கில் எப்படி மதிக்கப்படும் என்பதை அவையாரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். யுனிசெப் நிறுவனம், கனேடிய அரசாங்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சர்வதேச
நிறுவனங்கள் முன்வந்து தேவையான போதிளவு பொருளுதவிகளை உணவு வங்கி மூலமாக வழங்கி, கனடாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் குழந்தைகளை காபற்ற வேண்டியதன் அவசியத்தை அவையாரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
கனேடிய அரசாங்கம் குழந்தைகளின் வறுமையையும் பட்டினியையும் போஷாக்கின்மையையும் ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன். கனேடிய அரசாங்கம், குழந்தைகளின் வளர்ச்சிக்காக வீட்டுத்திட்டங்கள், குழந்தை காப்பகங்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து திட்டம் ஆகிய மூன்றையும் கவனத்தில் கொண்டு, பொருளாதார உதவிகள் செய்து மேற்கூறிய திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு செயற்பட்டால், கனடாவில் குழந்தைகளின் வறுமை நிலைமையை படிப்படியாக குறைத்து, பின்னர் அதனை முற்றாக ஒழித்து விடலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ராதிகா சிற்சபேசன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
வியாழன், 20 நவம்பர், 2014
தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை
பிரான்ஸ் நாட்டில் முதன் முறையாக கருவில் உள்ள குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளனர்.
பிரான்ஸின் பாரிஸ் (Paris) நகரில் உள்ள நெக்கர் மருத்துவமனையில் (Necker hospital), கருவில் உள்ள 5 மாத குழந்தை ஒன்றிற்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து ஸ்பினா பிஃபிடியா (spina bifida) என்ற பிறப்பு குறைபாடு நோயை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.
குழந்தையின் மூளையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், சிகிச்சை செய்த பத்து நாட்களில் குழந்தைக்கு இருந்த மூளை நோய் குணமடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
4 மாதகளுக்கு முன்பு நடந்த இந்த சிகிச்சையின் முறையின் தகவல்களை, குழந்தை பிறந்தபின்பு தான் மருத்துவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது..
தற்போது தாயும் சேயும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது
ஞாயிறு, 16 நவம்பர், 2014
உடலில் வளரும் நகங்கள்: விசித்திர நோயால் திண்டாடும் பெண்

அமெரிக்காவில் பெண் ஒருவரின் உடலில் முடிக்கு பதிலாக நகங்கள் முளைப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் பகுதியை சேர்ந்த ஷானைனா இசோம் (32.அ).
கடந்த ஐந்து ஆண்டுகளாக வித்தியாசமான நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
தோலில் முடிகள் முளைக்க வேண்டிய இடங்களில் எல்லாம் நகங்கள் முளைத்துள்ளன. இந்த நோய்க்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
ஆஸ்துமாவுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அளவுக்கு அதிகமான ஸ்டீராய்ட் மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அது அலர்ஜியாக மாறி, தோலில் கடுமையான அரிப்பை உண்டாக்கியிருக்கிறது. அரிப்பைத் தடுக்க மேலும் சில மருந்துகள் கொடுக்கப்பட்டபோது, நிலைமை இன்னும் மோசமாகி விட்டது.
முடிகளுக்குப் பதிலாக நகங்கள் உடல் முழுவதும் முளைத்துவிட்டன. கால்கள் இரண்டும் கறுப்பாகிவிட்டன. அவரது பார்க்கும் திறன் குறைந்துவிட்டது. எலும்புகள் வலுவிழந்துவிட்டன, உடல் எடையும் வேகமாகக் குறைந்து வருகிறது.
மேலும், இவர் மருத்துவ செலவினை கவனிக்க முடியாமல் திண்டாடி வருகிறது.
வியாழன், 13 நவம்பர், 2014
தூதரகத்துக்கு 24 மணி நேரத்தில் 3 மர்ம பார்சல்!
இது தொடர்பாக நியூசிலாந்து போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக வெடிகுண்டு சோதனை நிபுணர்களுடன் விரைந்து வந்து, அந்த 3 பார்சல்களையும் பாதுகாப்பாக எடுத்துச் சென்று சோதனை செய்து வருகின்றனர். அந்த பார்சல்களில் பிளாஸ்டிக்
பாட்டில்களில் ஒரு வித திரவம் இருந்தது. பிளாஸ்டிக் பாட்டில்களில் ரசாயன பொருட்களை நிரப்பி, அத்துடன் எபோலா நோய் கிருமிகளும் கலக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அந்த பொருட்கள் நியூசிலாந்து அரசின் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்று நியூசிலாந்து போலீஸ் அதிகாரி நிக் போம் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
ஞாயிறு, 9 நவம்பர், 2014
குடிபோதையில் கார் ஓட்டிய சல்மான்ருஷ்டி மகனுக்கு கார் ஓட்ட தடை
இங்கிலாந்தில் குடி போதையில் கார் ஓட்டிய சல்மான்ருஷ்டியின் மகனுக்கு அபராதமும், கார் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.
புகழ்பெற்ற இங்கிலாந்து வாழ் இந்திய எழுத்தாளர் சல்மான்ருஷ்டி. இவரது மகன் ஷபார்ருஷ்டி (35). இவர் ஒரு வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த ஆகஸ்டு 1–ந்தேதி ஹம்ப்ஸ்டட்டில் உள்ள தனது வீட்டுக்கு காரில் வந்தார். அப்போது அவர் மது அருந்தி இருந்தார். அதை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர்.
அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஷபார்ருஷ்டி 13 மாதங்கள் கார் ஓட்ட தடை விதித்தார். மேலும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்
சனி, 1 நவம்பர், 2014
குழந்தைகளை கத்தியால் குத்திய கொடூரன்
சீனாவில் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்ஸி மாகாணத்தில் லியோஜியா கிராமத்தில் 3 பள்ளி குழந்தைகள் உணவு சாப்பிட வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மர்மநபர் தான் வைத்திருந்த கத்தியால் அவர்களை சரமாரியாக குத்தினான்.
இதனால் அவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். உடனே அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஒரு குழந்தையை பரிதாபமாக இழந்தது. மேலும் 2 குழந்தை படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களை கத்தியால் குத்திய நபர் யார்? எதற்காக இந்த கொடூர செயலை செய்தான் என்று தெரியவில்லை. அவனை போலீசார் தேடி வருகின்றனர். சீனாவில் இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகளவில் நடந்து வருகின்றன.