Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 29 டிசம்பர், 2014

ராணியின் பாதுகாவலர்களை தாக்க சதி? ஐ.எஸ். தீவிரவாதிகள்!!

 இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பாதுகாவலர்களை தாக்குவதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
ராணியின் பாதுகாவலர்களில் ஒருவரை கடத்தி கொல்வதற்கு அவர்கள் சதி செய்துள்ளதாக ‘தி மிரர்’ பத்திரிகை கூறி உள்ளது.
இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ‘‘உளவுத்துறையினர், ஐ.எஸ். தீவிரவாதிகளின் இணையதள உரையாடல்களை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளனர். ராணி குடும்பத்தினரை தாக்குவது கடினம் 
என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிந்துள்ளனர். எனவே அவர்கள் ராணியின் பாதுகாவலர்களில் ஒருவரை அவர்கள் தாக்குதல் இலக்காக கொள்ளக்கூடும்’’ என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து ராணியின் பாதுகாவலர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை, 
கிளாரன்ஸ் இல்லம் ஆகியவற்றில் ராணியின் பாதுகாவலர்கள் எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளனர்.
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

தனக்குதானே தீ வைத்துக்கொண்ட பெண்

பிரான்சில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்லேட்யூஸ் நகரின்போவ்லோன் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒன்றரை வயது மகள் வீட்டுக்குள் உறங்கி கொண்டிருந்த போது வீட்டு முற்றத்தில் 30 வயது பெண் தீ மூட்டிக்கொண்டுள்ளார். பெண்ணின் கணவர் சடலத்தை கண்டுபிடித்து அது பற்றி பொலிசாருக்கு அறிவித்துள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 20 டிசம்பர், 2014

கியூபா அமெரிக்கா வுக்கு 50 ஆண்டுகளின் பின் மலரும் உறவு!

1962ம் ஆண்டுக்குப் பின் முற்றாக முறிந்துபோன அமெரிக்கா - கியூபா இடையிலான உறவு மீண்டும் மலர்ந்துள்ளது. கியூபாவில் 5 வருடங்களுக்கு முன் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த 65 வயதான க்ரோஸ் என்ற புலனாய்வாளர் நேற்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கியூபாவுடன் தூதரக உறவு மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். அமெரிக்க அரசின் வலைதள பணிகளை

 மேற்கொள்வதற்காக 2009ம் ஆண்டு 65 வயதான க்ரோஸ் என்பவர் கியூபா சென்றார்.அங்கு உளவு வேலை பார்த்ததாக அவரை கியூபா அரசு சிறைப்பிடித்தது. இதுதொடர்பாக எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் கியூபா அரசு உடன்படவில்லை. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் தெற்கு புளோரிடா மாநிலத்தில் உளவு பார்த்ததாக கியூபாவை சேர்ந்த 5 பேரை அமெரிக்கா சிறைபிடித்தது. கடந்த 5 ஆண்டுகளாக இருதரப்பிலும் எவ்வித தூதரக உறவும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், கியூபாவில் பணையக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டு இருந்த க்ரோஸ் விடுவிக்கப்பட்டார். அவர் அமெரிக்க விமானம் மூலம் புதன்கிழமை இரவு வாஷிங்டனுக்கு சென்றார். இதனைத் தொடர்ந்து தான் பிடித்து வைத்திருந்த கியூபாவை சேர்ந்த 5 பேரையும் அமெரிக்கா விடுவித்தது. இதை தொடர்ந்து அந்நாட்டுடன் தூதரக உறவுகளை மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

கியூபா அதிபர் ரவுல் கஸ்ரோ அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் தொலைபேசியில் பேசியுள்ளதன் மூலம் தூதரக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் துவங்கும் என்று அமெரிக்க குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் மார்கோ ருபியோ கூறியுள்ளார்.

தென் ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த இரு நாட்டுத் தலைவர்களும் தவிர்க்க முடியாத சந்தர்பம் ஒன்றில் கைகுலிக்கிக்கொண்டனர். பகை நாடுகளாகப் பார்க்கப்பட்ட இரு நாடுகளின் தலைவர்களும் கைகுலுக்கிக்கொண்ட காட்சி உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இரு நாட்டுத் தலைவர்களும் மகிழ்வோடு கைகுலுக்கும் காலம் மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


செவ்வாய், 16 டிசம்பர், 2014

மனைவியை 2 நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த நபர்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் முன்னாள் கணவர் உள்பட 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இது குறித்து மாநில அரசிடம் கேட்டால் மீடியாக்கள் உத்தர பிரதேசத்தை மட்டுமே உற்று நோக்குவதாக கூறுகிறது.

இந்நிலையில் தான் உத்தர பிரதேசத்தில் மேலும் ஒரு பலாத்கார சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ராம்கட்டைச் சேர்ந்தவர் ரிஸ்வான். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரிஸ்வான் வேலைக்கு போகாமல் தகாத வழியில் சென்றுள்ளார். இதை தட்டிக்கேட்ட மனைவி நல்ல வழியில் செல்லுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த காரணத்திற்காக ரிஸ்வான் தனது மனைவியை விவாகரத்து செய்தார். விவாகரத்திற்கு பிறகு இருவரும் தனித் தனி வீடுகளில் வசித்து வருகிறார்கள். ரிஸ்வான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ரிஸ்வான் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து முன்னாள் மனைவியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்கள் 3 பேரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 12 பேர் சுட்டுக்கொலை

தலீபான்கள் அட்டூழியம் ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் இங்கிலாந்து நாட்டின் முன்னாள் ராணுவ தளம் உள்ளது. அதன் அருகில் உள்ள பகுதியில் தொழிலாளர்கள் நேற்று கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கே மோட்டார் சைக்கிள்களில் வந்த தலீபான் தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 12 தொழிலாளர்கள் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். இது குறித்து தகவல் அறிந்து வந்த பாதுகாப்பு படையினர், அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 4 தீவிரவாதிகள் பலியாகினர். 3 தீவிரவாதிகளை அவர்கள் உயிருடன் பிடித்தனர். இதற்கிடையே காபூல் நகரில் தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை குறிவைத்து பஸ் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 7 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
ஆப்கானில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வெறிச்செயலுக்கு தலீபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். இதேபோல் தீவிரவாத தாக்குதலுக்கு இரண்டு வெளிநாட்டு ராணுவ வீரர்களும் பலியாகியுள்ளனர். இந்த சம்பவங்கள், ஆப்கானிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

10 விமானங்கள் புதிதாக கொள்வனவு...

 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானங்கள் பிரிவிற்கு வலுச்சேர்க்கும் நோக்கிலேயே இந்த விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் டொக்டர் ரவீந்திர ருபேரு குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கென தற்போது 23 விமானங்கள் காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 26 நவம்பர், 2014

தன்து இறந்ததாயை தோண்டி எடுத்த மகன்

தற்போது, உலகெங்கும் புகழ்பெற்ற ஒரு போட்டோ பாணி செல்ஃபி… தினமும், பல்துலக்குவது, குளிப்பது போன்று அன்றாட வாழ்வில் சாதாரணமான ஒன்றாகிவிட்டது இந்த செல்ஃபி. இந்நிலையில், சிலர் தனித்துவமான செல்ஃபி எடுப்பதற்காக உயிரை பணையம் வைத்து ஆபத்துகளில் இறங்குவது, வினொதமாக யாரும் செய்யாத ஒன்றை செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டுவருகின்றனர். அப்படித் தான் ஆர்வக்கோளாரில் லெபானனைச் சேர்ந்த நபர் ஒருவர், இறந்த தன் தாயை தோண்டி எடுத்து செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார். லெபனானில் உள்ள சுடுகாடு ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வருபவர், டெப் சாய்ஃலி (Deab Saiqly) என்ற நபர். இவர் ஏற்கனவே இறந்து புதைக்கப்பட்ட தன் தாயுடன் செல்ஃபி எடுத்து இணையத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதற்காக, பல ஆண்டுகளுக்கு முன் இறந்த தன் தாயின் பிணத்தை கல்லரையிலிருந்து தோண்டி எடுத்து, அதனுடன் பல்லைக் காட்டி கொண்டு செல்ஃபி எடுத்துள்ளார் இந்த நபர். உலகெங்கிலும், பலர் இந்த மூட செயலிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை கண்ட மருத்துவர்கள் சிலர் இவருக்கு மனநிலை சரியில்லை என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் மனநல மருத்துவரிடம் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ”எனக்கு அமெரிக்காவில் வரன் ஒன்று அமைந்தது ஆனால் மரணங்கள் எனக்கு விருப்பமான ஒன்றாக இருப்பதால் அதனை நான் நிராகரித்தேன்.” “இதுவரை நான் நிறைய சடலங்களுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளேன், ஆனால் தாயாருடன் எடுத்துக் கொண்ட செல்பியை மட்டும் பாதுகாப்பாக வைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த பேட்டியைப் பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இவரை பேட்டி எடுத்த மருத்துவர் இவருக்கு மனநிலை சரியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 24 நவம்பர், 2014

சீன விமான ஓடுதளத்தை அமைத்து உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு பத்திரிகை

தெற்கு சீன கடல் பகுதியில் சீனாவுக்கும், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில், அங்குள்ள சர்ச்சைக்குரிய ஸ்பிரேட்லி தீவில் கட்டுமானப்பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக அங்கு விமான ஓடுதளத்தை அமைத்து உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் “மங்கள்யான்':“டைம் இதழ் புகழாரம்


அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “டைம்’ இதழ் வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் மிகச் சிறந்த 25 கண்டுபிடிப்புகளின் பட்டியலில் இந்தியாவின் “மங்கள்யான்’ இடம்பெற்றுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பியுள்ள மங்கள்யான் குறித்து அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைய அமெரிக்காவால் முடியவில்லை. ரஷியாவாலும், ஐரோப்பாவாலும்கூட முடியவில்லை. ஆனால் செவ்வாயின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தைச் செலுத்தி, இந்தியா அதை சாதித்திருக்கிறது. செவ்வாய் கிரகத்தை எட்டியதன் மூலம், மற்ற ஆசிய நாடுகள் எதுவும் இதுவரை செய்திராத சாதனையை இந்தியா செய்துள்ளது. இந்தியாவின் மங்கள்யான், படுசூட்டிகையான விண்கலம் (சூப்பர்ஸ்மார்ட் ஸ்பேஸ்கிராஃப்ட்) ஆகும். வெறும் ரூ.450 கோடி செலவில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள மங்கள்யானில், அங்குள்ள மீத்தேன் வாயுவை அளவிடும் கருவி உள்பட நான்கு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. விண்வெளித் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் வலிமை, இந்த விண்கலம் மூலம் நிரூபணமாகியுள்ளது என “டைம்’ இதழ் புகழாரம் சூட்டியுள்ளது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 21 நவம்பர், 2014

ஒரு மில்லியன் குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர்:??

கனடாவில் குழந்தைகளின் வறுமை மற்றும் பட்டினியை முற்றாக ஒழிக்க கனேடிய அரசாங்கம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய உறுதிமொழியை இன்னும் நிறைவேற்ற முடியாதிருப்பதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். கனேடிய நாடாளுமன்றத்தில் கனடாவில் குழந்தைகளின் வறுமை குறித்து மோசன் எம்.534 கீழ் ஆற்றிய உரையில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்... கனேடிய அரசாங்கம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகளின் வறுமை மற்றும் பட்டினியை அறவே ஒழித்து விட வேண்டும் என உறுதிப்பூண்டிருந்தது. ஆயினும் இந்த உறுதியிணை இன்னும் கனேடிய அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாதுள்ளது. ஒரு மில்லியன் கனேடிய குழந்தைகள் இன்னும் வறுமையில் வாடி வருகின்றனர்.
உலகில் செல்வந்த நாடுகளின் ஒன்றான எமது மகத்தான கனடா, நமது நாட்டில் முற்றாக வறுமை ஒழிக்கப்பட்டு விடும் என ஐ.நா சபையில் தெரிவித்திருந்தமை எம் எல்லோருக்கும் நினைவிருக்கலாம். இதன் முதல் கட்டமாக கனடாவில் வறுமையில் வாடி தவிக்கும் ஒரு மில்லியன் குழந்தைகளின் பட்டினியை போக்கி, அவர்களின் உணர்வினை அறிந்து அவர்களது வளர்ச்சிக்கு வழிகோல வேண்டியது கனேடிய
அரசாங்கத்தின் மிகப் பெரிய கடமையல்லவா?. பூனை தனது கண்களை மூடிக்கொண்டு உறங்கும் போது முழு உலகமே இருளாக இருக்கின்றது என்று எண்ணுவது போல் நமது அரசாங்கம் தனது கண்களை இறுக மூடிக்கொண்டு கனேடிய எல்லையெங்கும் வறுமையோ பட்டினியோ இல்லை என்று கூறுவதை போல் உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக குழந்தைகளின் வறுமை வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். கனடாவில் வறுமை காரணமாக ஒரு மில்லியன் குழந்தைகள் போஷாக்கின்மையோடு வாழ்ந்து வருவதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். வறுமை என்பது எப்படி மறுக்க முடியாத உண்மையோ, வறுமை மற்றும் பட்டினி காரணமாக ஏற்பட்டுள்ள குழந்தைகளின் போஷாக்கின்மையும் உணவு பற்றாகுறை என்பனவும் மறுக்க முடியாத உண்மைகளாகும். யுனிசெப் அமைப்பு தனது ஆய்வறிக்கையில், கனடாவில் குழந்தைகளின் வறுமை மற்றும் போஷாக்கின்மை குறித்து விபரித்து எழுதியிருந்தது.
இதற்கு பதிலளித்த நமது கனேடிய அரசாங்கம் வறுமையை முற்றாக ஒழித்து விட முடியும் என கூறியிருந்தாலும் முக்கியமாக குழந்தைகளின் வறுமை, பட்டினி மற்றும் போஷாக்கின்மையை ஒழிக்க மேற்கொள்ளவிருக்கும் செயற்திட்டங்களை முழுவதுமாக நிறைவேற்றவில்லை என்பது நம் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். 25 வருடங்களுக்கு முன்னர் கனேடிய குழந்தைகளின் வறுமை நிலைமையானது 13 சத வீதமாக மட்டுமே இருந்தது. எனினும் தற்போது அது 23 சத வீதத்தை எட்டியுள்ளது.
கனடாவை ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 23 சத வீதம் என்ற இந்த நிலைமையானது நமது நாட்டின் மதிப்பு உலக அரங்கில் எப்படி மதிக்கப்படும் என்பதை அவையாரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். யுனிசெப் நிறுவனம், கனேடிய அரசாங்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சர்வதேச
நிறுவனங்கள் முன்வந்து தேவையான போதிளவு பொருளுதவிகளை உணவு வங்கி மூலமாக வழங்கி, கனடாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் குழந்தைகளை காபற்ற வேண்டியதன் அவசியத்தை அவையாரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
கனேடிய அரசாங்கம் குழந்தைகளின் வறுமையையும் பட்டினியையும் போஷாக்கின்மையையும் ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன். கனேடிய அரசாங்கம், குழந்தைகளின் வளர்ச்சிக்காக வீட்டுத்திட்டங்கள், குழந்தை காப்பகங்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து திட்டம் ஆகிய மூன்றையும் கவனத்தில் கொண்டு, பொருளாதார உதவிகள் செய்து மேற்கூறிய திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு செயற்பட்டால், கனடாவில் குழந்தைகளின் வறுமை நிலைமையை படிப்படியாக குறைத்து, பின்னர் அதனை முற்றாக ஒழித்து விடலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ராதிகா சிற்சபேசன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 20 நவம்பர், 2014

தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை

 பிரான்ஸ் நாட்டில் முதன் முறையாக கருவில் உள்ள குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளனர்.
பிரான்ஸின் பாரிஸ் (Paris) நகரில் உள்ள நெக்கர் மருத்துவமனையில் (Necker hospital), கருவில் உள்ள 5 மாத குழந்தை ஒன்றிற்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து ஸ்பினா பிஃபிடியா (spina bifida) என்ற பிறப்பு குறைபாடு நோயை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.
குழந்தையின் மூளையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், சிகிச்சை செய்த பத்து நாட்களில் குழந்தைக்கு இருந்த மூளை நோய் குணமடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
4 மாதகளுக்கு முன்பு நடந்த இந்த சிகிச்சையின் முறையின் தகவல்களை, குழந்தை பிறந்தபின்பு தான் மருத்துவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது..
தற்போது தாயும் சேயும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது
 
 இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 16 நவம்பர், 2014

உடலில் வளரும் நகங்கள்: விசித்திர நோயால் திண்டாடும் பெண்


அமெரிக்காவில் பெண் ஒருவரின் உடலில் முடிக்கு பதிலாக நகங்கள் முளைப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் பகுதியை சேர்ந்த ஷானைனா இசோம் (32.அ).
கடந்த ஐந்து ஆண்டுகளாக வித்தியாசமான நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
தோலில் முடிகள் முளைக்க வேண்டிய இடங்களில் எல்லாம் நகங்கள் முளைத்துள்ளன. இந்த நோய்க்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
ஆஸ்துமாவுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அளவுக்கு அதிகமான ஸ்டீராய்ட் மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அது அலர்ஜியாக மாறி, தோலில் கடுமையான அரிப்பை உண்டாக்கியிருக்கிறது. அரிப்பைத் தடுக்க மேலும் சில மருந்துகள் கொடுக்கப்பட்டபோது, நிலைமை இன்னும் மோசமாகி விட்டது.
முடிகளுக்குப் பதிலாக நகங்கள் உடல் முழுவதும் முளைத்துவிட்டன. கால்கள் இரண்டும் கறுப்பாகிவிட்டன. அவரது பார்க்கும் திறன் குறைந்துவிட்டது. எலும்புகள் வலுவிழந்துவிட்டன, உடல் எடையும் வேகமாகக் குறைந்து வருகிறது.
மேலும், இவர் மருத்துவ செலவினை கவனிக்க முடியாமல் திண்டாடி வருகிறது.


வியாழன், 13 நவம்பர், 2014

தூதரகத்துக்கு 24 மணி நேரத்தில் 3 மர்ம பார்சல்!


நியூசிலாந்து நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3 முறை மர்ம பார்சல் வந்துள்ளது. அதில் வெடிகுண்டுகள் அல்லது எபோலா கிருமிகள் இருக்குமோ என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் அமெரிக்க தூதரகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை 6 மணியளவில் மர்ம பார்சல் வந்துள்ளது. நேற்று முன்தினம் மாலையும் 2 மர்ம பார்சல்கள்
வந்துள்ளது. இந்த பார்சல்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த 3 பார்சல்களிலும் எபோலா நோய் தாக்கக்கூடிய பொருட்கள் ஏதேனும் இறுக்குமோ அல்லது வெடிபொருட்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக நியூசிலாந்து போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக வெடிகுண்டு சோதனை நிபுணர்களுடன் விரைந்து வந்து, அந்த 3 பார்சல்களையும் பாதுகாப்பாக எடுத்துச் சென்று சோதனை செய்து வருகின்றனர். அந்த பார்சல்களில் பிளாஸ்டிக்
பாட்டில்களில் ஒரு வித திரவம் இருந்தது. பிளாஸ்டிக் பாட்டில்களில் ரசாயன பொருட்களை நிரப்பி, அத்துடன் எபோலா நோய் கிருமிகளும் கலக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அந்த பொருட்கள் நியூசிலாந்து அரசின் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்று நியூசிலாந்து போலீஸ் அதிகாரி நிக் போம் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 9 நவம்பர், 2014

குடிபோதையில் கார் ஓட்டிய சல்மான்ருஷ்டி மகனுக்கு கார் ஓட்ட தடை

 இங்கிலாந்தில் குடி போதையில் கார் ஓட்டிய சல்மான்ருஷ்டியின் மகனுக்கு அபராதமும், கார் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.
புகழ்பெற்ற இங்கிலாந்து வாழ் இந்திய எழுத்தாளர் சல்மான்ருஷ்டி. இவரது மகன் ஷபார்ருஷ்டி (35). இவர் ஒரு வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த ஆகஸ்டு 1–ந்தேதி ஹம்ப்ஸ்டட்டில் உள்ள தனது வீட்டுக்கு காரில் வந்தார். அப்போது அவர் மது அருந்தி இருந்தார். அதை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர்.
அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஷபார்ருஷ்டி 13 மாதங்கள் கார் ஓட்ட தடை விதித்தார். மேலும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 1 நவம்பர், 2014

குழந்தைகளை கத்தியால் குத்திய கொடூரன்


சீனாவில் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்ஸி மாகாணத்தில் லியோஜியா கிராமத்தில் 3 பள்ளி குழந்தைகள் உணவு சாப்பிட வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மர்மநபர் தான் வைத்திருந்த கத்தியால் அவர்களை சரமாரியாக குத்தினான்.
இதனால் அவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். உடனே அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஒரு குழந்தையை பரிதாபமாக இழந்தது. மேலும் 2 குழந்தை படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களை கத்தியால் குத்திய நபர் யார்? எதற்காக இந்த கொடூர செயலை செய்தான் என்று தெரியவில்லை. அவனை போலீசார் தேடி வருகின்றனர். சீனாவில் இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகளவில் நடந்து வருகின்றன.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

பஸ் விபத்தில் 9 பேர் பலி, 17 பேர் காயம்

 
அசாம் மாநிலம் நாகோனில் அரசு பஸ் விபத்துக்குள் சிக்கியதில் 9 பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அசாம் போக்குவரத்து துறைக்கு சொந்தமான பஸ் ஒன்று லாகிம்பூரில் இருந்து தலைநகர் கவுகாத்திக்கு சென்றுக் கொண்டிருந்தது. நாகோன் அருகே பஸ் வேகமாக சென்றபோது
பாலத்தில் மோதி விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்துள்ளனர். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்தான முழுதகவல்கள் வெளியாகவில்லை.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 25 அக்டோபர், 2014

நாடுகளில் இருந்து பலவண்ண பறவைகள் ஒரிசாவுக்கு வருகை

சைபீரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட பலவண்ண பறவைகள் இடம்பெயர்ந்து தங்கள் குளிர்காலத்தை அனுபவிக்க ஒரிசாவின் சிலிக்கா ஏரிக்கு வந்துள்ளன. முதலில் குறைவான பறவைகள் வந்தன. பின்னர் பறவையின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. சிலிக்கா ஏரி 1,100 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரி ஆகும்.
அது பறவை மற்றும் சுற்றுலா பயணிகள் கவரும் இடமாக கருதப்படுகிறது. சுமார் 10 லட்சம் புலம்பெயர் பறவைகள் அக்டோபர் மாதம் ஏரிக்கு வருகை தரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குளிர்காலம் முடிந்து மார்ச் மாதத்தில் பறவைகள் மீண்டும் தங்கள் நாடுகளுக்கு திரும்பி சென்று விடும் என்று பறவை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

காணொளியைப் பார்த்த கோடீஸ்வரர் ஜேம்ஸ் பெக்கர் கண்ணீர் விட்டார்!!

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜேம்ஸ் பெக்கர், ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமையை வெளிப்படுத்தும் த நோ பயர்சோன் காணொளியை பார்த்து கண்ணீர்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
க்ரவுன் இன்டர்நெசனல்ஸ் என்று மிகப்பெரிய சூதாட்ட மையத்தின் சொந்தகாரரான ஜேம்ஸ் பெக்கர், சிறிலங்காவில் 500 மில்லியன் டொலர்கள் பெறுமதியான கெசினோ ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரை நோ பயர் சோன் காணொளியை பார்வையிட்டு, சிறிலங்காவையும், ஈழத தமிழர்களையும் இலாபத்துக்கு அப்பால் சென்று நோக்குமாறு அவுஸ்திரேலிய அகதிகள் பேரவை கோரிக்கை விடுத்திருந்தது.
இதன்படி கடந்த வாரம் அவர் இந்த காணொளியை பார்வையிட்டதன் பின்னர், அகதிகள் பேரவையின் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த காணொளியை பார்த்து தமது இரத்தம் உரைந்து போனதாக அவர் இதன் போது கூறி இருக்கிறார்.
அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 14 அக்டோபர், 2014

இலங்கைக்கு ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து கப்பல் அன்பளிப்பு..

ஜப்பானிய அரசாங்கம் தொள்ளாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான கப்பல் ஒன்றை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.
ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜெய்க்கா) மூலம் இந்தக் கப்பல் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் 50 மீட்டர் நீளம் கொண்டது. 624 தொன் எடை கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்லக் கூடியது. பல்தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தக் கப்பலுக்கு சயுர என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், மீன்பிடித்துறை அமைச்சிற்கு இக்கப்பல் கையளிக்கப்படவுள்ளது.
சயுர கப்பல் மூலம் இலங்கையின் மீன்பிடித்துறைமுகங்களை ஆழமாக்கும் பணிகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
சயுர கப்பலை உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு கையளிக்கும் நிகழ்வு வரும் சனிக்கிழமை மாலை 03 மணிக்கு திக்ஓவிட்ட மீன்பிடித்துறைமுகத்தில் நடைபெறவுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 7 அக்டோபர், 2014

எபோலா நோய் சிகிச்சை அளித்த நர்சுக்கு தாக்கியது

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா, நைஜீரியாவில் ‘எபோலா’ என்ற உயிர்க் கொல்லி நோய் பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 3,400 பேர் பலியாகி உள்ளனர். பல லட்சம் போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஸ்பெயினை சேர்ந்த மத குருக்கள் மானுவேல் கார்சியா வியஜோ மற்றும் மினகல் பஜாரஸ் ஆகியோர் எபோலா நோய் தாக்கி சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இவர்களில் மானுவேல் கார்சியா வியஜோவுக்கு சியாரா லோனிலும், மினகல் பஜாரஸ்க்கு லைபீரியாவிலும் எபோலா நோய் தாக்கியது. இவர்களுக்கு ஸ்பெயினில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது, அவர்களுக்கு நர்சு ஒருவர் சிகிச்சை அளித்தார். அவருக்கு கடந்த வாரம் அவரும் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார்.
எனவே பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு ‘எபோலா’ நோய் பாதித்து இருப்பது தெரியவந்தது. எனவே, அவர் மாட்ரிட் அருகேயுள்ள அல்கார்கன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரது நிலை சீராக இருப்பதாக ஸ்பெயின் சுகாதார மந்திரி அனா மாரூடா தெரிவித்துள்ளார். தாமஸ் டன்கான் என்பவரும், லைபீரியாவில் எபோலா நோய் பாதித்து அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே, அமெரிக்கா வரும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கடுமையாக பரிசோதிக்கப்படுவார்கள் என அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 22 செப்டம்பர், 2014

படிப்புக்கு மாணவர்களுக்கு உதவும் பிச்சைக்கார தாத்தா!

சீனாவில் பிச்சைக்கார முதியவர் ஒருவர் 3 கல்லூரி மாணவர்களின் படிப்புக்கு உதவுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் (Beijing) வசிக்கும் முதியவர் (65) ஒருவர் அப்பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வருகிறார்.
இவர் பிச்சை எடுக்கும் பணத்தை மாதந்தோறும் அங்குள்ள அஞ்சலகத்தின் மூலம் தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார்.
இதுகுறித்து அஞ்சலக ஊழியர்கள் கூறுகையில், மாதம் தவறாமல் தான் பிச்சை எடுத்த பணத்தை எங்கள் அலுவலகத்திற்கு இவர் கொண்டுவருவது வழக்கம் என்றும் ஒரு மாதத்திற்கு மட்டும் சுமார் 10,000 ரென்மிம்பிகள் (Renminbi) சம்பாதிப்பார் எனவும் கூறியுள்ளனர்.
வெகு காலமாக பிச்சை எடுத்து வரும் இவர், சொந்த ஊரில் வீடு கட்டியுள்ளது மட்டுமின்றி 3 மாணவர்களின் கல்லூரி படிப்புக்கும் உதவுகிறார் என கூறப்படுகிறது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 18 செப்டம்பர், 2014

பியர் போத்தில்கள் திருடிய குடிமகன்கள்

கனடாவில் 1300க்கும் மேற்பட்ட பியர்  பெட்டிகள் களவு போனதை தேடும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் பிரபல பியர்  நிறுவனம் ஒன்றிலிருந்து சுமார் 1300க்கும் மேற்பட்ட பீர் பெட்டிகள் திருடப்பட்டுள்ளன. இவை 25,000 டொலர்கள் மதிப்பு கொண்டவை ஆகும்.
மேலும் லொறி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இந்த பியர் போத்தில்கள், உடைக்கப்பட்டு திருடப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த திருட்டை அரங்கேற்றிய குடிமகன்களை பிடிக்கும் முயற்சியில் பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

திக்குமுக்காடிய பல்கலைக்கழகம்

பிரான்ஸ் நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் தோலோஸ் (Toulouse) நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் சுமார் 1200 மாணவர்களை அடுத்த வாரம் வருமாறு கூறியுள்ளது.
தற்போது பொதுமான ஆசிரியர்கள் நியமிப்பதற்கும், வகுப்பறைகள் கட்டுவதற்கும் அவகாசம் கேட்டுள்ளது.
மேலும் மற்ற மாணவர்களை வேறு பல்கலைக்கழகத்தில் மாற்றவும் திட்டமிட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

பாரதி வித்தியால மாணவர்கள் அமெரிக்கத் தூதரகத்தால் கௌரவிப்பு!

அமெரிக்கத் தூதரகத்தின் அனுரணையுடன் கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் நடத்தப்பட்ட விசேட ஆங்கில பயிற்சி நெறியில் தேர்ச்சிபெற்ற 38 மாணவர்கள் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இந்தக் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அமெரிக்கத் தூதரகத்தால் நடத்தப்பட்ட ஆங்கிலப் பயிற்சி நெறியில் சிறப்பாகச் சித்தியெய்திய 38 மாணவர்களும் அவர்களுக்கு பயிற்சி வழங்கிய மூன்று ஆசிரியர்களும் நாளை அமெரிக்கத் தூதரத்தில் வைத்துக் கௌரவிக்கப்படவுள்ளனர். அமெரிக்கத் தூதரகத்தால் விசேடமாக அனுப்பப்பட்ட பேருந்து மூலம் கொழும்புக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வியாழன், 11 செப்டம்பர், 2014

விண்வெளி நிலையத்தை 2022ம் ஆண்டில் அமைக்க சீன திட்டம்!

சீனா தனது முதல் விண்வெளி நிலையத்தை 2022ம் ஆண்டு நிறுவப்போவதாகக் கூறியிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே, விண்வெளி நிலையம் அமைக்கும் வேலைகளைத் தொடங்கப்போவதாக சீன அதிகாரிகள் தெரிவித்திருந்தனர், ஆனால் இப்போது அவர்கள் இது குறித்த விவரமான கால அட்டவணையை வெளியிட்டிருக்கிறார்கள். புதிய விண் ஆய்வுக் கூடம் ஒன்று இரண்டாண்டுகளில் தொடங்கப்படும்; அதன் பின்னர் ராக்கெட்டுகள் மற்றும் பிற அமைப்புகள் உருவாக்கப்படும்.
சீன விண்வெளி வீரர்கள் ஏற்கனவே விண்வெளியில் கலன்களை பொருத்தும் நடவடிக்கைகளை பயிற்சி செய்து வருகின்றனர். சீனா ஒரு விண்வெளி சக்தியாக உருவாக வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக சீனாவின் தலைவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் அதற்குத் தேவைப்படும் தொழில்நுட்பம் குறித்த விஷயத்தில், ரஷ்யா மற்றும் அமெரிக்காவைவிட , சீனா பின் தங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வியாழன், 4 செப்டம்பர், 2014

பள்ளியில் படிக்கும் நண்பனை துரத்தி துரத்தி கத்தியால் குத்திய தமிழ் இளைஞன்:

பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் தன்னுடன் பள்ளியில் படிக்கும் நண்பனை கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்வம் ஒன்று நடந்துள்ளது.
பிரித்தானியாவின் நோத்-கால்ட் (Northolt) நகரில் வசித்து வந்த சுலக்ஷன் (Sulaxssan) என்னும் 19 வயதான இளைஞன், தன்னுடன் பயிலும் 17 வயது மாணவன் டுஷான் சீனுவை (Dusan Sinu) தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த மாணவர் வேறு வீடு மற்றும் பள்ளிக்கூடம் என மாறிச் சென்றுள்ளார்கள்.
ஆனாலும் சுலக்ஷன் அவரை பின் தொடர்ந்துள்ளார்.சுலக்ஷன், சீனுவை தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில், ஒருநாள் அவர்கள் இருக்கும் புது வீட்டிற்குச் சென்று கதவை தட்டியுள்ளார்.
வெளியே வராவிட்டால் கண்ணாடியை உடைப்பேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன டுஷான் வெளியே வந்தவேளை அவரை முகத்தில் அடித்துள்ளார்.
இதனால் பயந்து போன டுஷான் ஓட ஆரம்பித்துள்ளார். பின்னர் தனது உடல் முழுவதும் இரத்தத்தால் நனைந்திருப்பதை உணர்ந்த டுஷான், தன்னை சுலக்ஷன் கத்தியால் குத்திவிட்டார் என்பதனையும் பின்னரே உணர்ந்துள்ளார்.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நல்லவேளையாக கத்தி நெஞ்சில் குத்தப்படவில்லை. மார்புக்கும் கைகளுக்கும் இடையே தான் குத்தப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் பேசிய நீதிபதி, உங்களை 19 வயதில் நான் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக கவலையடைகிறேன்.
நீங்கள் குத்திய கத்தி சற்று ஆழமாக ஏறி இருந்தால் கூட டுஷான் கொலை செய்யப்பட்டு இருப்பார். எனவே உங்களுக்கு 4 வருட தண்டனை வழங்குகிறேன் என்று கூறி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
டுஷானின் தரப்பில் பேசும்போது, சுலக்ஷன் ஏற்கனவே வெடிகுண்டு புரளி ஒன்றை செய்து, நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நபர் என்று தெரிவிக்கப்பட்டது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

புதன், 3 செப்டம்பர், 2014

மாணவர்களுக்கு பயங்கரவாத காணொளி ஒளிபரப்பு: பரபரப்பு

பிரித்தானியாவில் பள்ளி கூடம் ஒன்றில் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவளிக்கும் விளம்பர படத்தின் காணொளி திரையிடப்பட்டத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
பிரித்தானியாவின் பிர்பிங்கம் (Birmingham) நகரில் உள்ள பள்ளிகூடம் ஒன்றில் பயங்கரவாதியாக மாற வலியுறுத்தும் வகையில் காணொளி ஒன்று திரையிடப்பட்டுள்ளது.
இதில் பள்ளி மாணவர்கள் பார்க்க கூடாத அளவிற்கு வன்முறை உள்ள காட்சிகள் வெளியானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்லாமிய மதத்தை பற்றி விளம்பரம் செய்த பள்ளிக்கூடம் மற்ற இளைஞர்களை மாற வைக்க ஏதாவது தீவிரவாத முயற்சி செய்கிறதா? என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பள்ளிக்கூட அளவில் மத பிரச்சினை மற்றும் இன பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்க்கொள்ள போவதாக நகரத்தின் அலோசனை சபை தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்
 

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

நேர்ந்த கொடூரம் :சிறுமிக்கு நடந்தது என்ன? பொலிசார் விசாரணை !

 அமெரிக்காவில் சிறுமி ஒருவர் பள்ளிக்கூடத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் புது சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அர்லிங்டன்(Arlington) நகரை சேர்ந்த அவலின்(Avalin age - 5) என்ற சிறுமி பலத்த காயத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
இவர் பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தில் விழுந்து அடிபட்டதாக பள்ளி நிறுவனம் கூறி வரும் நிலையில், சிறுமியின் தாயார், தனது மகள் தாக்கப்பட்டுள்ளார் என சர்ச்சை எழுப்பியுள்ளார்.
இதனை அடுத்து இவர் தனது மகளின் காயங்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது மகளுக்கு நியாயம் கிடைக்க நிதி உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சிறுமியின் அடிபட்ட முகத்தின் புகைப்படங்களை பார்த்தால் எவரோ தாக்கியது போல இருப்பதால் பெரும்பாலான மக்கள் நிதி கொடுத்துள்ளனர்.
இந்த காயம் ஏற்பட்ட பின்னணியில் எவரும் ஈடுபட்டுள்ளதாக இதுவரை எந்த தடையமும் சிக்கவில்லை என்றாலும், பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் லேசி, தனது மகளுக்கு என்ன நடந்தது என தெரிந்து கொள்ளும் வரையில் போராட போவதாக உறுதியளித்துள்ளார்.
 இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தீவிரவாதிகளுக்கு முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் போர்ப் பயிற்சி!

 சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது �இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா� என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
  
இதன் முதல்கட்டமாக சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இப்படையினர் அங்கிருக்கும் கிருஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டி விட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், சிரியாவின் ரக்கா நகரை ஏற்கனவே கைப்பற்றி தங்களது தலைமை பீடமாக அமைத்துக் கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் பல பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இதன் அடுத்தகட்டமாக, அலெப்போ மாகாணத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டர்க்மென், பரே, அக்தரின் ஆகிய நகரங்களையும் அவற்றை ஒட்டியுள்ள சில கிராமங்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். என்றிருந்த தங்களது இயக்கத்தின் பெயரை ஐ.எஸ். என்று சமீபத்தில் சுருக்கிக் கொண்ட இவர்களது படையில் இணைய பலரும் முயன்று வருவதாக தெரிகின்றது.
இந்த ஐ.எஸ்.படையில் அமெரிக்கா, பிரிட்டைன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்களும் சேர்ந்து சிரியா மற்றும் ஈராக் ராணுவத்தினருடன் போரிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தியாவை சேர்ந்த சுமார் 100 இஸ்லாமிய இளைஞர்களும் இந்தப் படையில் சமீபத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டைனை சேர்ந்த சுமார் 600 இஸ்லாமிய இளைஞர்கள் ஐ.எஸ்.படையில் இணைந்து சிரியா மற்றும் ஈராக்கில் போராடி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக இந்த இயக்கத்தில் இணையும் இளைஞர்களுக்கு பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் நவீன வகை போர்ப் பயிற்சிகளை அளித்து வரும் திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் செல்போன் உரையாடல் மற்றும் இ-மெயில்களை பிரிட்டைன் நாட்டின் உளவுத்துறையான எம்.16 மற்றும் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. ஆகியவை இடைமறித்து உளவறிந்ததில் மேற்கண்ட உண்மை தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமான !தி டெய்லி ஸ்டார்! குறிப்பிட்டுள்ளது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

சனி, 30 ஆகஸ்ட், 2014

பெருநட்டத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ்! விமான விபத்துக்களால்

இந்து சமுத்திரத்துக்கு மேலாகப் பறந்த வேளை, கடந்த மார்ச் மாதத்தில் விமானம் ஒன்று காணாமல் போன சம்பவத்தை அடுத்து மலேசியன் ஏர்லைன்ஸின் பயணிகள் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு, அது பெரும் நிதி இழப்பை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகின்றது. ஜூலையில் இரண்டாவது விமானம் ஒன்று யுக்ரெய்னில் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, பயணத்துக்கான பதிவுகள் 30 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததால், இந்த வருடத்தின் இரண்டாவது அரைப் பகுதியில் மேலும் இழப்பு ஏற்படும் என்று அது எச்சரித்துள்ளது.
முதலாவது விமானம் காணாமல் போனதை அடுத்து, விமானப் பயணத்துக்கான பதிவுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக முதல் காலாண்டில் அந்த நிறுவனத்துக்கு 97 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

குழந்தை பிறந்ததை 'ஆப்பிள்' ஸ்டைலில் விளம்பரமாக்கிய தந்தை

ஜேர்மனியில் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் தனக்கு குழந்தை பிறந்த விடயத்தை வித்தியாசமாக இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆண்ட்ரியாஸ் கிளெய்ன்க் (Andreas Kleinke) என்பவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
தன் மகன் பிறந்ததை நண்பர்களுக்குத் தெரியப்படுத்த தனியாக வலைத்தளம் ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, புதிய சிறிய ரகம் ஜோனாதன் அறிமுகம். ஜோனாதன் (2014 வருட படைப்பு) 20 அங்குலம் நீளமுள்ள ஒரே உடல் அமைப்பு கொண்ட திடமான அழகினை உடையது. ஒழுங்கான 10 விரல்கள் நேர்த்தியான பன்முக தொடுதல் அனுபவம் தர கூடியது.
கூடுதலாக, ஒன்று அல்ல பார்வை திறன் கொண்ட இரு கமெராக்களை கொண்டது. ஒவ்வொன்றும் ரெடினா ரெசல்யூசனில் திகைக்க வைக்கும் படங்களை தருவது.
இரு ஒலிவாங்கள் (Microphones) இரு புறமும் அமைந்து ஒவ்வொரு சத்தத்தையும் கேட்கும் திறன் கொண்டது.
இதன்பின் நடுவில் அமைந்துள்ள ஸ்பீக்கர் உங்களை ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டு சென்று விடும்.
அதுவும் அதிகபட்சமாக 120 டெசிபல் அளவுள்ள சத்தத்தை அதிகமாக வெளியிடும் திறன் கொண்டது.
பல மொழிகளை அறிந்து கொள்ளும் வகையில் இது படைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இதன் இருப்பிடம் முனிச் (Munich) ஜேர்மனி என்று கூறியதுடன், தனது குழந்தை குறித்த சுவாரிஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
9
 இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .


 

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ரூபாய் ஒன்றரை கோடிக்கு விலைபோன ஆட்டுக்கிடா!

 ஆட்டு விந்துக்கு மவுசு பாருங்க!கலப்பின ஆடுகளின் விந்தணுக்களின் மூலமாக திடகாத்திரமான ஆடுகளை உருவாக்கும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் 6 மாத ஆட்டுக்கிடா ஒன்றினை ஒரு லட்சத்து 52 ஆயிரம் பவுண்டுகளுக்கு வாங்கியுள்ளது. உடலின் மேல்பகுதியில் அடர்த்தியான கம்பளி ரோமத்துடன் கொழுகொழுவென்று இருக்கும் இந்த அரியவகை ஆட்டிடம் ஒருமுறை சுரக்கும் விந்தினை குறைந்தபட்சம் 100 பவுண்டுகளுக்கு விற்று போட்ட முதலீட்டை எடுத்து விடலாம் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

 

ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் (காணொளி)

அணு உலை நிலையங்களை வேவு பார்க்க வந்த இஸ்ரேலின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரானின் பல பகுதிகளில் அமைந்துள்ள அணு செறிவூட்டும் நிலையங்களை ஆளில்லா உளவு விமானங்களின் மூலமாக இஸ்ரேல் வேவு பார்த்தும் வருகின்றது.
இந்நிலையில், ஈரானின் நட்டன்ஸ் பகுதியில் உள்ள அணு செறிவூட்டும் நிலையத்தை நேற்று வேவு பார்த்த இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
ஈரானின் நட்டன்ஸ் அணு செறிவூட்டும் நிலையத்தை நோக்கிச் சென்ற ஆளில்லா உளவு விமானத்தை, ஈரான் இராணுவப் படைகள் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிலுள்ள அணு உலைகளில் மின்சார உற்பத்தி மட்டுமின்றி பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களும் தயாரிக்கப்படுவதாக உலக நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரானின் அணு ஆயுதங்களை எல்லாம் பறிமுதல் செய்து அழித்து விட வேண்டும் இஸ்ரேல் கங்கணம் கட்டி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

எரிமலை வெடிக்கலாம் என்பதால் மக்கள் வெளியேற்றம்!

 ஐஸ்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய எரிமலையான பர்டர்புங்கா எரிமலை அமைந்துள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து புவியியலாளர்கள் 300க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களைக் கணக்கிட்டுள்ளனர். இந்த நிலை அதிர்வு நடவடிக்கை ஒரு எரிமலை வெடிப்பிற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டில் அங்குள்ள எய்ஜப்ஜள்ளஜோகுல் எரிமலை வெடித்தபோது அதிலிருந்து சிதறப்பட்ட சாம்பல் துகள்களால் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு பெரும்பாலான ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்து மூடப்பட்டது. இப்போதும் எச்சரிக்கைக் குறியீட்டின் நான்காவது தர நிலையான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளதால் இதுபோன்றதொரு பாதிப்பு நிகழக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.
   
தலைநகர் ரெய்க்ஜவிக்கிலிருந்து 300கி.மீ தொலைவில் உள்ள இந்தப் பகுதியில் மனிதக் குடியிருப்புகள் அதிகம் இல்லாதபோதும் அங்குள்ள தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகமாகக் காணப்படும். எனவே பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்தப் பூங்காவிற்கு வருபவர்களைத் தடை செய்து பூங்காவையும் மூடியுள்ளதாக அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று வரை இந்த எரிமலை அமைதியாகக் காணப்பட்டபோதிலும், இது வெடிக்கத் தொடங்குமேயானால் அட்லாண்டிக் வான் போக்குவரத்து இதனால் பாதிக்கப்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .

 

பேச்சுவார்த்தையிலிருந்து இம்ரான் விலகல்

 பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான், அப்போராட்டத்தைக் கைவிடுவது குறித்து அரசுடன் நிகழ்த்தி வந்த பேச்சுவார்த்தையிலிருந்து வியாழக்கிழமை விலகினார்.
அந்நாட்டின் மத குரு தாஹிருல் காத்ரியின் அவாமி தெஹ்ரிக் கட்சியும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதுகுறித்து விவாதிக்க அரசு விடுத்திருந்த அழைப்பை ஏற்று, இம்ரான் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.
இந்நிலையில் தற்போது அதிலிருந்து விலகியதுடன், இறுதிவரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளதன்மூலம், அரசுக்கு எதிரான தனது நிலையை அவர் மேலும் கடுமையாக்கியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் உத்தரவு: முன்னதாக, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு தலைமை வழக்குரைஞர் சல்மான் பட் தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “இது நிர்வாகம் சார்ந்த பிரச்னை. அரசுதான் சட்டத்துக்கு உள்பட்டு இந்த விவகாரத்தைக் கையாள வேண்டும்’ என்று தெரிவித்தது.
இதன் காரணமாகவே, இம்ரான் கான் தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் தீர்மானம்: இதற்கிடையே, பிரதமரை பதவி விலக
வலியுறுத்தி இம்ரான் கான், தாஹிருல் காத்ரி கட்சிகள் மேற்கொண்டுள்ள போராட்டத்துக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
எதிர்க்கட்சியினர் தரக்குறைவாகவும், அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசி வருவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிபருடன் ஷெரீஃப் சந்திப்பு: இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்தும், நிலைமையை சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்க அதிபர் மம்நூன் ஹுசைனை நவாஸ் ஷெரீஃப் சந்தித்தார்.
முக்கிய அரசுக் கட்டடங்கள் அமைந்துள்ள சிறப்புப் பாதுகாப்பு மண்டலத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து அதிபரிடன் அவர் எடுத்துரைத்தார்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

 

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

போதை வழக்கில் மகன்: வெட்கி தலைகுனிந்த ஜாக்கி சான்

பிரபல நடிகர் ஜாக்கி சான் தனது மகன் கைதானது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜாக்கி ஜானின் மகன் நடிகர் ஜெய்சி சான் (31), தைவான் சினிமா நடிகர் கெய் கோ (23) ஆகியோர் போதை பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஜெய்சி சான் வீட்டில் இருந்து 100 கிராம் போதைப்பொருள் கைப்பற்றபட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜாக்கி சான் தனது வலைதளத்தில், இந்த பிரச்சினை தொடர்பாக, நான் கோபமாகவும் அதிர்ச்சிகரமாகவும் உணர்கிறேன்.
நான் பிரபலமானவன் என்ற அடிப்படையில் இதற்கு நான் மிகவும் வெட்கப்படும் வேளையில், ஒரு தந்தை என்ற அடிப்படையில் எனது இதயம் உடைந்து போய் உள்ளேன்.
இதனால் இந்த சமூகத்திடமும், பொதுமக்களிடமும் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.
அனைத்து இளைஞர்களும் ஜெய்சியை பார்த்து போதைப்பொருள் தீங்கானது என்ற பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும், தவறு செய்யும் போது அதற்குரிய விளைவுகளை ஏற்று கொள்ள வேண்டும்,தந்தை என்ற நிலையில் வருபவைகளை உன்னுடன் சேர்ந்து எதிர்கொள்ள போகிறேன் என்று ஜெய்சிக்கு கூறுவதாக தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .


புதன், 20 ஆகஸ்ட், 2014

அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை!

வீடியோ வெளியானதால் பரபரப்பு!
ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40) கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர்.
அந்த வீடியோவின் இறுதியில் மற்றொரு அமெரிக்கரும் தோன்றுகிறார். அவர் சிரியாவில் இருந்து 2013ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர். ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த படுகொலையை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
 

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

தனிநாடாக பிரியக்கூடாது: அவுஸ்திரேலிய பிரதமர்

  ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஸ்கொட்லாந்து மக்கள் தனியாக பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து தனிநாடு கோரும் வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது.
வாக்கெடுப்பு பத்திரத்தில் சுதந்திர நாடாக மாறுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆம் இல்லை என்ற வார்த்தைகள் மாத்திரமே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆம் என்ற புள்ளியிடலில் புள்ளியிட வேண்டாம் என அவுஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் இந்த கருத்தனை வெளியிட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

ஆஸ்திரேலிய மருத்துவமனை மன்னிப்பு கோரியது.

    அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என்று அறிவித்துவிட்டது. இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மருத்துவமனை நிர்வாகம் இன்று பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளது. தங்களிடம் பணிபுரியும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனையை விட்டு செல்லும்போது அந்தந்த மருத்துவர்களுக்கு அனுப்பப்படும் தகவல் குறிப்புகளில் கவனக்குறைவாக இதுபோல் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று இம்மருத்துவமனையின் சுகாதாரப்பிரிவு இயக்குனர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், மேலும் இந்தத் தவறு குறித்து அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர் என்றும் நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது. இதனால் நோயாளிகளின் கவனிப்பு பாதிக்கப்படவில்லை என்றும் இந்த அறிக்கை தெரிவித்தது. இந்தத் தவறு ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்று கூறிய ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம், இதனால் பணியில் இருந்த மருத்துவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றது. எதிர்த்தரப்பு உறுப்பினர்களோ சுகாதார அமைப்பின் அதிகப்படியான வேலைப்பளுவை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகின்றது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.