Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 27 ஜனவரி, 2014

செக்ஸ் அடிமைகளாக வைத்திருந்த கடாபி! புதிய ஆவணப்படம் வெளியானது

 லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி சிறுமிகளை கற்பழித்து செக்ஸ் அடிமைகளாக வைத்திருந்தார் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு ஆப்ரிக்கா நாடான லிபியாவில் 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி, மக்கள் போராட்டத்தின் விளைவாக கடந்த 2011ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

இவர் ஆட்சியின்போது நூற்றுக்கணக்கான சிறுமிகளை கற்பழித்து அவர்களை தனது செக்ஸ்காக பயன்படுத்தி தொந்தரவு செய்துள்ளார் என்று புதிய தகவலை நியூ பி.பி.சி. 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

மேலும் டெய்லி மெயில் பத்திரிக்கை தகவலின் படி, கடாபியின் உத்தரவின்படியே பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த மாணவிகள் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடாபி சிறுமிகளை கற்பழித்து கொடுமைபடுத்தியதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் பல கொடுமைகளை சிறுமிகளுக்கு கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வாதிகாரி மறைவிடத்தில் இருந்து தப்பிய பெண்ணின் மூலம் இந்த தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
இந்த ஆவணப்படம் “ஸ்டோரிவில்லே: மேடு டாக் - கடாபியின் சீக்ரெட் உலகம்” என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
 

ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன்

 அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட செய்வதற்கு ஆதரவாக நிதி வசூலை தொடங்கப்போவதாக அரசியல் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

2008-ம் ஆண்டு ஜனநாயக கட்சிக்குள் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் ஹிலாரி தோல்வியடைந்தார்.

அதில் வெற்றி பெற்ற ஒபாமா, பின்னர் அதிபர் தேர்தலிலும் வெற்றி வாகை சூடினார். அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் இம்முறை ஹிலாரி கிளிண்டன் நிறுத்தப்படலாம் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஹிலாரி,

"தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. அதில் போட்டியிடுவது தொடர்பான எனது முடிவை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிப்பேன்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரியாரிட்டிஸ் யு.எஸ்.ஏ. ஆக்சன் என்ற லாப நோக்கமற்ற அரசியல் அமைப்பு, ஹிலாரி கிளிண்டன் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவாக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செல்வந்தர்களிடம் நிதி திரட்டும் பணியை விரைவில் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது.