siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 2 ஜூன், 2014

அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்களை தகர்க்க சதி

அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்களை தகர்க்க சதித் திட்டம் தீட்டிய பாகிஸ்தான் உளவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த மலேசிய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 29ம் திகதி பாகிஸ்தான் உளவாளி என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் கியூ பிரிவு பொலிஸாரால் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் ஆகியவற்றை குண்டு வைத்து தகர்க்க சதித்திட்டம் தீட்டியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
ஜாகீர் உசேனின் ரகசிய டைரியை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில் முகமது உசேன் என்பவரது பெயரும் இடம் பெற்றிருப்பதும், அவரும், ஜாகீர் உசேனும் நெருங்கிய கூட்டாளிகள் என்பதும் தெரிய வந்தது. முகமது உசேனும் இலங்கையைச் சேர்ந்தவர்தான்.
இவரும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளோடு தொடர்பு வைத்திருந்தார் என்பதும், அவர்களின் உத்தரவின்பேரில் முகமது உசேனும் பாகிஸ்தானுக்காக உளவு பார்க்கும் சதிவேலையில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.
ஜாகீர் உசேனுடன், முகமது உசேன் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இருப்பதும், அப்போது இருவரும் சென்னையில் அமெரிக்கத் தூதரகம் மற்றும் பெங்களூரில் இஸ்ரேலிய தூதரகம் ஆகியவற்றை குண்டு வைத்து தகர்ப்பது குறித்து பேசி உள்ளதும் தெரியவந்தது.
மலேசிய பொலிஸார் முகமது உசேனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும், பெங்களூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தையும் தகர்க்க தனக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் இருந்து உத்தரவு வந்ததாகவும், அதற்காக 2 பேருக்கு உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
இவரது கைது மற்றும் அவரிடம் நடத்திய விசாரணை பற்றிய விவரங்களை மலேசிய அரசு இலங்கையிடம் பரிமாறிக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், பிரான்சை தலைமையிடமாக கொண்ட சர்வதேச பொலிஸாரிடம் முகமது உசேன் கைது குறித்த தகவலை இந்திய தூதரகம் தெரிவித்து தொடர் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தது.
மேலும் மலேசிய அரசு முகமது உசேனிடம் நடத்திய விசாரணை குறித்த தகவல்களை தங்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறும், அது இந்த வழக்கில் தொடர் விசாரணைக்கு உதவும் என்றும் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது உசேனை இந்தியாவுக்கு கொண்டு சென்று சென்னை பொலிஸார் விசாரணை மேற்கொள்வதற்கு வசதியாக அவரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மலேசிய அரசு மேற்கொண்டு வருகிறது