Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 31 ஜனவரி, 2015

புதிய பொருளாதார தடை ரஷியா மீது இல்லை; ஐரோப்பிய நாடுகள் ??

 
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. டண்ட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளுக்கு இடையே உள்ள முக்கிய ரெயில் நிலையமான டெபால்ட்சேவ் பகுதியில் இரு படையினரும் தொடர்ந்து குண்டு மழை பொழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு
 பங்கு இல்லை என அந்த நாடு தொடர்ந்து கூறி வரும் நிலையில், ரஷியாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்து உள்ளன. ரஷியாவில் உள்ள ஏராளமான செல்வந்தர்களின் சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளதுடன், அவர்களுக்கு பயண தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடை விதிக்க இந்த நாடுகள் பரிசீலித்து வந்தன. ஆனால் பிரஸ்சல்சில் நேற்று நடந்த ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில், ரஷியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க மறுப்பு 
தெரிவிக்கப்பட்டது.
எனினும் ஏற்கனவே ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த தடையில் மேலும் சில ரஷியர்களை இணைப்பது குறித்து பரிசீலிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 27 ஜனவரி, 2015

வான்வழி தாக்குதலில் வெளிநாட்டு தீவிரவாதிகள்பலி!

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளிக்கூ டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 16–ந்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 133 குழந்தைகள் உள்பட 154 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து
 தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள தத்தா ஹெல் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தியது
இந்த அதிரடி தாக்குதலில் வெளிநாட்டு தீவிரவாதிகள் உள்பட 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். வடக்கு வஜிரிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான் 
ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 1,200–க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பது நினைவுகூரத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 24 ஜனவரி, 2015

டென்னிஸ் வீராங்கனை வைலட்டாடெஜிடிரேவா திடீர் மரணம்!

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை வைலட்டாடெஜிடிரேவா பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பால் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவில் உள்ள ரோஸ்டோவ் நகரில் பிறந்த வைலட்டா டெஜிடிரேவா, உலக அளவில் டென்னிஸ் வீரர்கள் வரிசை பட்டியலில் 1084வது இடத்தில் உள்ளார். இறுதியாக துருக்கியில்
 நடைபெற்ற காலிறுதி சுற்றில் இவர் கலந்து கொண்டார். வளர்ந்து வரும் இளம் வீராங்கனையான வைலட்டா டெஜிடிரேவா, தனது அபாரா ஆட்டத்தால் இவரது விளையாட்டு திறமை படிப்படியாக உலகிற்கு தெரியவந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், பயிற்சியின்போது டெஜிரரேவா மரணம் அடைந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 இவரது மரணம் குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. இவரது நெருங்கிய சக டென்னிஸ் வீராங்கனையான அனஸ்டாசியா வைலட்டா டெஜிடிரேவா மரணம்  நம்பமுடியவில்லை. இருப்பினும் அவரது ஆன்மா சாந்தி அடைய நவற்கிரி இணையங்களும்நிலாவரை இணையங்களும் இறைவனை பிரார்த்திக்கின்றது,   
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 23 ஜனவரி, 2015

துணி பார்சலில் கடல் ஆமைகளை இறக்குமதி செய்த வருக்கு சிறை!

 வங்காள தேசத்தில் இருந்து சிங்கப்பூருக்கு  அரியவகை கருப்பு ஆமைகளை இறக்குமதி செய்த இந்தியருக்கு
 அந்நாட்டு நீதிமன்றம் 16 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. இந்தியரான ஜெய்ஸ்வால் அருண் ஹரிஷ் சந்திரா (42) என்பவர் சிங்கப்பூரில் ஜவுளி இறக்குமதி தொழில் செய்து வருகிறார்.
 இந்த இறக்குமதி உரிமத்தை பயன்படுத்தி வங்காள தேசத்தில் இருந்து குட்டைகளில் வாழும் அரிய வகை கருப்பு ஆமைகளை உரிய அனுமதி இன்றி இவர் கள்ளத்தனமாக சிங்கப்பூருக்கு 
இறக்குமதி செய்துள்ளார். சங்கி விமான நிலையத்தில் சுமார் 190 ஆமைகள் கொண்ட 3 துணி பைகளை கண்டுபிடித்த சுங்கத்துறை அதிகாரிகள், அருண் ஹரிஷ் சந்திராவை கைது செய்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 16 ஜனவரி, 2015

கிரிக்கெட் அணி கேவிக் கேவி அழுத கெவின் பீ்ட்டர்சன்

இங்கிலாந்து அணியிலிருந்து தன்னை நீக்கிய செய்தியைக் கேள்விப்பட்டதும் தான் அழுததாக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சன் இல்லை. அவரை நீக்கி விட்டனர். அவரது நீக்கம் அப்போது இங்கிலாந்து அணியில் சலசலப்புகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் போட்டிகளை ஆட இங்கிலாந்து போயிருந்தது. அபபோது ஐந்து போட்டிகளிலும் அது தோல்வியைத் தழுவியது. இதனால் பெரும் சர்ச்சைக்குள்ளானது இங்கிலாந்து அணி.
இதையடுத்து கெவின் பீ்ட்டர்சனை அதிரடியாக நீக்கியது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு. இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள கெவின் பீட்டர்சன், அணியினரை கிரிக்கெட் போர்டு மதிப்பதில்லை. என்னைப் பார்த்துப் பொறாமைப்பட்டனர். இருப்பினும் தற்போதைய கேப்டன் இயான் மார்கன் மட்டும் என்னை அணியில் சேர்க்க வேண்டும் என்று பகிரங்கமாக அணி நிர்வாகத்திடம் கூறினார்.
நான் நீக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் அழுது விட்டேன். இதை நான் மறுக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார் கெவின் பீ்ட்டர்சன்.
கெவின் பீட்டர்சன் அதன் பின்னர் டெல்லி டேர்டெவில்ஸ் ஐபிஎல் அணியில் இடம் பெற்று ஆடினார். ஆனால் தற்போது அந்த அணியிலிருந்தும் அவரை நீக்கி விட்டனர் என்பது 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 15 ஜனவரி, 2015

ராஜினாமா ஸ்காட்லாந்து பிரதமர்??

இங்கிலாந்துடன் ஸ்காட்லாந்து இணைந்து இருக்கத் தேவையில்லை, நாம் தனி நாடாக பிரிந்து செல்வோம் என்ற கோரிக்கையை வைத்து தீவிரமாக பிரசாரம் செய்து வந்தவர் ஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் தலைவரான அலெக்ஸ் சல்மாண்ட். இவர் ஸ்காட்லாந்து பிரதமராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம், இங்கிலாந்தில் இருந்து பிரிந்து செல்வதா? வேண்டாமா? என்பது குறித்த கருத்து வாக்கெடுப்பு ஸ்காட்லாந்து மக்களிடம் எடுக்கப்பட்டது. இதில் 55.3 சதவீத மக்கள் இங்கிலாந்துடன் இணைந்திருக்க ஆதரவு தெரிவித்தனர்.
 அலெக்ஸ் சல்மாண்ட் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து ஸ்காட்லாந்து பிரதமர் மற்றும் கட்சியின் தலைவர் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அலெக்ஸ் சல்மாண்ட் நேற்று அறிவித்தார்.
ஸ்காட்லாந்தின் அடுத்த பிரதமரும், கட்சியின் புதிய தலைவரும் வருகிற நவம்பர் மாதம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நீந்திச் செல்ல முயன்ற அமெரிக்க இளைஞர் கைது!!

தென்கொரியாவிலிருந்து வடகொரியா நோக்கி நீந்திச் செல்ல முற்பட்ட அமெரிக்கப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோனை தான் சந்திக்க வேண்டுமென தென்கொரிய படையினரிடம் குறித்த 20 வயதான குறித்த இளைஞன் கூறியுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் வடகொரியாவை நோக்கி நீந்திச் செல்ல முற்பட்ட அமெரிக்கப் பிரஜைகள் இருவர் தென்கொரியாவில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அமெரிக்கப் பிரஜையொருவருக்கு வடகொரியாவில் 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 14 ஜனவரி, 2015

நாடாளுமன்றத்தில் இலங்கை தேர்தல் குறித்து இன்று விவாதம்!

  பிரி்த்தானிய இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரித்தானிய பிரபுக்கள் சபையில் இன்று விவாதம் ஒன்று நடத்தப்படவுள்ளது. பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நேஸ்பை என்பவர், தேர்தல் தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டமைக்கு அமைய சபை, நடந்து முடிந்த இலங்கை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடலை நடத்த இணங்கியுள்ளது.
ஏற்கனவே தேர்தலுக்கு முன்னரும் பிரித்தானிய பிரபுக்கள் சபை அது தொடர்பில் விவாததங்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.இதன்போது இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் பொதுநலவாய கண்காணிப்பாளர்களின் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

தற்கொலை குண்டு தாக்குதலில் 19 பேர் பலி

நைஜீரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் சிறுமி ஒருவர் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்கொலை தாக்குதலை 10 வயதுடைய சிறுமி ஒருவரே மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பொர்னோ மாகாணத்தின்
 மைடுகுரி நகரத்திலுள்ள சந்தை தொகுதியில் இந்த தற்கொலை தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி தனது உடலில் குண்டுகளை பொருத்தியிருந்த நிலையில் அவற்றை வெடிக்க செய்ததாக நைஜீரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

துப்பாக்கி சூடு: இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயம்

பிரான்ஸ் தலைநகரான பாரீசில் இன்று காலை மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் இரு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

பாரீஸ் நகருக்கு வெளியே தெற்குப்புற நகரமான மொண்ட்ரோகில் குண்டு துளைக்காத உடை அணிந்த நபர் ஒருவர் நடத்திய
 துப்பாக்கி சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்சு நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் நடந்த இடத்திற்கு அந்நாட்டு உள்துறை மந்திரி பெர்னார்ட் கசெனுவ் விரைந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று இரவு பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏவுகணை பிரிவு அதிகாரியாக பெண் ஒருவர் நியமணம்!

இங்கிலாந்து விமானப் படையின் ஏவுகணை தாக்குதல் பிரிவுக்கு, முதன் முறையாக பெண் கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். நிக்கி தோமஸ் என்ற அந்த 36 வயது வீராங்கனை, இங்கிலாந்து விமானப் படையில் 12 ஆண்டுகளுக்கு முன் சேர்ந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து பயிற்சி விமானியாக பணியாற்றினார். அத்துடன் ஆப்கானிஸ்தானில் 3 மாதங்கள் தங்கியிருந்து, அங்கு நடந்த 35 தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தார்.

ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசும் போர் விமானங்களில், ஆண் விமானிகளுடன் தனது திறமையை வெளிப்படுத்தினார். இத்தகைய சிறப்பு பெற்ற நிக்கி தாமஸ் நேற்று ஏவுகணை பிரிவின் கமாண்டராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம், இங்கிலாந்து விமானப் படையின் ஏவுகணை பிரிவுக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் கமாண்டர் என்ற பெருமையை நிக்கி பெற்றுள்ளார். இதுதொடர்பாக, இங்கிலாந்து ராணுவ செயலாளர் மைக்கேல் பாலோன் கூறுகையில், ‘ஆண்களை போலவே பெண்களும் போர் புரிவதில் திறமை வாய்ந்தவர்கள்.

இதுவரை அவர்களின் பணிகள் ராணுவத்தில் அங்கீகரிக்கப்படவில்லை. ராணுவத்தில் சேர்க்கும் போது அவர்களின் பாலினத்தை கருதாமல், அவர்களின் திறமையை வைத்து அங்கீகரிக்க வேண்டும். இத்தகைய திறமைமிக்க நிக்கி தாமஸ் தலைமையில் அடுத்த ஆண்டு முதல் பெண்களுக்கு தனியே படைப் பிரிவு துவங்கப்படும்‘ என்றார்.

ஏவுகணை விமானப் படையின் கமாண்டராக நியமனம் செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக எத்தகைய கடினமான பணிகளையும் எளிதாக மேற்கொண்டு இருக்கிறேன். இந்த கமாண்டர் பணியையும் மிகச் சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த பணியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இல்லை என்று கருதுகிறேன். விமானப் படையில் பெண்களும் சேர்ந்து பணியாற்ற முன்வர வேண்டும்‘ என்று நிக்கி தாமஸ் பூரிப்புடன் கூறினார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

புதன், 7 ஜனவரி, 2015

வார இதழ் அலுவலகம் மீது தாக்குதல் 12 பேர் பலி

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி கார்டடூன் போட்ட பிரெஞ்சு நாளிதழ் 
பாரீஸ்: பிரான்ஸின், பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார இதழ் அலுவலகத்திற்குள் புகுந்த 2 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
பிரான்ஸைச் சேர்ந்த வார இதழ் சார்லி ஹெப்டோ. அதன் பாரீஸ் அலுவலகத்திற்குள் இன்று இரண்டு ஆண்கள் நுழைந்து திடீர் என கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டதாக அவர்களை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஏதாவது சர்ச்சைக்கிடமான செய்தியை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது சார்லி ஹெப்டோவுக்கு வழக்கமாகிவிட்டது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கார்ட்டூன்களே அதில் அதிகம் வரும்.
அண்மையில் அந்த வார இதழ் உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி பற்றி கார்டூன் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தான் இன்று சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் கொடூரத் தாக்குதல் நடந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் நாளிதழின் எடிட்டர் உயிரிழந்துள்ளார். அதேபோல நான்கு கார்ட்டூனிஸ்ட்டுகளும் கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் கார்ட்டூனிஸ்ட்டுகளை இவர்கள் குறி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. கார்ட்டூனிஸ்டுகள் இருக்கும் பகுதியை நன்கு அறிந்து கொண்டு திட்டமிட்டு உள்ளே நுழைந்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் கடந்த 2011ம் ஆண்டு டென்மார்க் பத்திரிக்கை ஒன்று நபிகள் நாயகத்தை கேலி செய்து வெளியிட்ட கார்டூனை இவர்கள் தங்கள் வார இதழில் வெளியிட்டனர். அந்த கார்டூன் வெளியிட்ட மறுநாளே அதைக் கண்டித்து பெட்ரோல் குண்டு வீசி அலுவலகம் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 6 ஜனவரி, 2015

பாய்ந்த கத்தியுடன் 2 மணி நேரம் கார் ஓட்டிய நபர்: உயிர் தப்பினார்

அமெரிக்காவில் தலையில் பாய்ந்த கத்தியுடன் 2 மணி நேரம் காரை ஓட்டி வந்து மருத்துவமனையில் சேர்ந்தார் பிரேசிலைச் சேர்ந்த நபர். அமெரிக்காவில் டெரிசினா பகுதியில் உள்ள ஒரு ஒதுக்குப் புறமான வீட்டில் விருந்து நடைபெற்றுள்ளது.
அப்போது அங்கிருப்பவர் களிடையே ஏற்பட்ட தகராறில் பிரேசிலை சேர்ந்த ஜுவாசிலோ நியூனிஸ் என்பவரது தலையில் கத்தி குத்து விழுந்தது. 30 செ.மீ. நீளமுள்ள அந்த கத்தி அவரது இடது கண்ணுக்கு அருகே பாய்ந்து வாயை கடந்து வலது தாடை வரை இறங்கியது.
இது தவிர அவரது தோள்பட்டை, தொண்டை, மற்றும் மார்பிலும் கத்தி குத்து விழுந்திருந்தது. இந்த நிலையில் 2 மணி நேரம் காரை ஓட்டிய அவர் சுமார் 97 கி.மீ. தூரம் உள்ள மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.
ரத்தம் சொட்டும் நிலையில் மருத்துவமனைக்குள் நுழைந்த அவரை மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று தலையில் பாய்ந்த கத்தியை நீக்கி சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கத்தி அவரது தலையில் பாய்ந்து பல்வேறு முக்கிய நரம்புகளையும், ரத்த குழாய்களையும் சேதப்படுத் தியிருந்தது. இதுபோன்று காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் உயிர் பிரிந்து விடும்.
ஆனால் நியூனிஸ் அந்த காயத்தை வைத்துக் கொண்டு காரை இரண்டு மணி நேரம் ஓட்டியதும், மருத்துவமனைக்கு வரும் வரை தாக்குப்பிடித்ததும் வியப்பான விஷயம்தான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கத்தி குத்து சம்பவம் தொடர்பாக அமெரிக்க போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 
 

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

பளிங்குக் கல் சுரங்க விபத்தில் 12 பேர் மரணம்!

பாகிஸ்தானில் பளிங்குக் கல் சுரங்கம் இடிந்து விழுந்ததில், 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து "டான்' இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது... பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் மொஹ்மந்த் ஏஜென்ஸி மாவட்டத்தில் உள்ள ஜியாரத் பகுதியில் சனிக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
 அங்குள்ள பளிங்குக் கல் சுரங்கத்தில் கற்களை தொழிலாளர்கள் வெட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது, இடிந்து விழுந்தது. அதில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன், இரண்டு வாகனங்களும் இடிபாடுகளில் புதைந்தன.
இதுவரை, 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால், மீட்புப் பணிகளில் மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>