siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 23 ஏப்ரல், 2015

தமிழர் ஒருவர் போதைவஸ்த்து கடத்தலில் கைது!!!!

 இந்தோனேசியாவில் போதைவஸ்த்து கடத்தல். மற்றுமொரு தமிழர் கைது 
இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தியமைக்காக ஏற்கனவே அவுஸ்திரேலிய தமிழர் ஒருவர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது மற்றுமொரு
 தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விக்னேஸ்வரன் சுதர்சன் என்ற அவர் மற்றுமொரு சிறிலங்காவைச் சேர்ந்த முஸ்லிம் இனத்தவருடன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களிடம் இருந்து பெருந்தொகையான போதைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதியில் !!!!


ஜப்பான், தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.8 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தலைநகர் தைபேயில் நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் நிலநடுக்கம் காரணமாக பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.
இந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஒகினாவா தீவை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டது. இதனையடுத்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனையடுத்து சிறிதுநேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பெண் பலாத்காரம் கடற்படை மாலுமிகள்கைது !!!

கனடாவில் நடந்த ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள வந்த பிரித்தானிய கடற்படை மாலுமிகள் நால்வர் மீது பலாத்கார குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நோவ ஸ்கோசிய கனடிய கடற்படை போக்குவரத்து மையமான Shearwater-ல் கனடிய படையினருக்கும், பிரித்தானிய கடற்படை மாலுமிகளுக்கும் இடையே ஹாக்கி போட்டி நடந்துள்ளது.
இந்த போட்டியின் போது பிரிட்டிஷ் கடற்படை மாலுமிகள் கிறேய்க் ஸ்ரோனர், டரன் ஸ்மெலி, ஜோசுவா வின்போ மற்றும் சிமோன் றட்வோட் ஆகிய 4 பேர் மீது இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் எழுந்தது.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அன்றே தளத்தில் உள்ள ராணுவ பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் பாதிக்கப்பட்ட பெண் கனடிய படைகளின் உறுப்பினர் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நால்வரும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை றோயல் கடற்படை மிகவும் தீவிரமானதாக எடுத்து கொள்வதாக தெரிவித்த பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் சட்ட நடவடிக்கைகள் தொடர்வதால் மேலதிக கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கமுடியாது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள நால்வரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 15 ஏப்ரல், 2015

முகாமில் ஈழத் தமிழர் மாரடைப்பால் மரணம்

அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவில் காணப்படும் கர்ட்டின் அகதி முகாமில் ஈழத்தை சேர்ந்த அகதி மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
50 வயதுடைய இராமைய்யா மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் படகு பயணத்தின் மூலம் புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தார்.
இதனையடுத்து அவர் தொடர்ந்து கொக்கோஸ் தீவில் தங்க வைக்கப்பட்டதன் பின்னர் கிறிஸ்மஸ் தீவிற்கு மாற்றப்பட்டு கர்ட்டின் தீவில் தங்க வைக்கப்பட்டார்.
இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.
எனினும் அவுஸ்திரேலியாவிற்கு சென்றது முதல் இராமைய்யாவுக்கு சரியான முறையிலேயே வைத்திய சேவைகள் வழங்கப்பட்டு வந்துள்ளதாக சடலத்தை பரிசோதனை
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




செவ்வாய், 7 ஏப்ரல், 2015

ஸ்டர் பண்டிகையை கொண்டாடிய டேவிட் கேமரூன்--

வித்தியாசமான முறையில்  இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பிராணிகள் மீது ஆர்வம் கொண்டவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வித்தியாசமான முறையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினார். நண்பர்களுடன் தனது சொந்த தொகுதியான விட்னி-யில் உள்ள டீன் லேன் பண்ணைக்கு அவர் சென்றார். அங்கு அண்மையில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியுடன்
 அவர் வெகு நேரம் செலவிட்டார். அதைக் கையில் தூக்கி கொஞ்சியும் முத்தம் கொடுத்தும் மகிழ்ந்தார். பின்னர் அந்த செம்மறி ஆட்டுக்குட்டிக்கு புட்டிப்பாலும் புகட்டினார். ஆனால் கேமரூனின் பிராணிகள் பாசத்தை எதிர்க்கட்சியினர் தேர்தல் வருவதால் இந்த வேஷம் என்று 
கேலி செய்கிறார்கள
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வெள்ளி, 3 ஏப்ரல், 2015

வான் எல்லையில் பச்சை நிற வேற்று கிரகவாசிகள்???'

 ஜப்பானில் பாராளுமன்ற கூட்டம் நடந்து வருகிறது.நேற்றை கூட்டத்தில் பேசிய அன்டோனியோ இனோகி என்ற எம்.பி. நமது நாட்டின் வான் வெளியில்  வேற்று கிரக வாசிகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்டுகிரது இது மக்களுக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.பச்சை நிற  வேற்று கிரகவாசிகள்  ஒருவிதமான வாகனத்தில் பறந்து வந்தது உண்மையா? என கேள்வி எழுப்பினார். அதை தொடர்ந்து எம்.பி.க்கள் பலரும் அது குறித்து கேள்விகேட்டனர்.
அதற்கு ராணுவ மந்திரி ஜெனரல் நகட்டானி பதில் அளித்தார். ஏதோ ஒருவித மான ஒரு பொருள் நமது நாட்டு வான் எல்லையில் பறந்ததை போர் விமானங்கள் கண்டு பிடித்துள்ளன.
ஆனால் அதில் வேற்று கிரகவாசிகள் இருந்தனரா? என தெளிவாக கூறவில்லை. ஒருவேளை அவை பறவையாகவோ வேறு ஒரு பொருளாகவோ இருக்கலாம். னவே நமது விமான பாகாப்பு அது குறித்து தீவிரமாக கண் காணித்து வருகிறது. நமது வான்வெளியில் வேற்று கிரகவாசிகளோ அவர்களின் விண்கலங்களோ வர அனு மதிக்க மாட்டோம் என உறுதி அளித்தார்.
அன்டோனியோ இனோகி ஓய்வுப் பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 2 ஏப்ரல், 2015

நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் அபார வெற்றி

நைஜீரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் முகமது புகாரி அபார வெற்றி பெற்றார்.
அதிபர் தேர்தல்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, போகோ ஹரம் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மத அரசை நிறுவுவதற்காக ஆயுதம் ஏந்தி போராடி வருகிற அவர்கள், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளனர். அவர்களை தற்போதைய அதிபர் குட்லக் ஜோனத்தானால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் அங்கு கடந்த 28–ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் குட்லக் ஜோனத்தானுக்கும் (வயது 57), எதிர்க்கட்சி (அனைத்து முற்போக்கு காங்கிரஸ்) வேட்பாளர் முகமது புகாரிக்கும் (72) இடையே பலத்த போட்டி நிலவியது.

எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் கடந்த 2 தினங்களாக எண்ணப்பட்டு வந்தன. நேற்று தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போதைய அதிபர் குட்லக் ஜோனத்தான் தோல்வியை தழுவினார். எதிர்க்கட்சி வேட்பாளர் முகமது புகாரி அபார வெற்றி பெற்றார். முகமது புகாரிக்கு 1 கோடியே 54 லட்சத்து 24 ஆயிரத்து 921 ஓட்டுகள் கிடைத்தன. குட்லக் ஜோனத்தான் 1 கோடியே 28 லட்சத்து 53 ஆயிரத்து 162 ஓட்டுகளை பெற்றார்.
முதல் முறை
நைஜீரியாவில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடந்து, அதில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறை என்பது முக்கிய அம்சம்.

இப்போது வெற்றி பெற்றுள்ள முகமது புகாரி, 1984, 1985–ம் ஆண்டுகளில் அந்த நாட்டின் ராணுவ ஆட்சியாளராக திகழ்ந்தவர். போகோ ஹரம் தீவிரவாதிகளின் கொலை முயற்சியில் தப்பியவர். அந்த தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு இவர்தான் ஏற்றவர் என்றே மக்கள் பெருவாரியாக இவருக்கு வாக்களித்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

ஜோனத்தானுக்கு பாராட்டு
இந்த தேர்தலில் அதிபர் குட்லக் ஜோனத்தான் தன் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நாட்டு மக்களுக்கு அவர் டெலிவிஷனில் உரை ஆற்றினார். அப்போது அவர், ‘‘நேர்மையான, சுதந்திரமான முறையில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என வாக்குறுதி அளித்தேன். நான் சொன்னதை நிறைவேற்றி விட்டேன்’’ என கூறினார்.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முகமது புகாரி, ‘‘அதிபர் ஜோனத்தான் என் மதிப்புக்குரிய போட்டியாளர். அவருடன் கரம் கோர்க்கிறேன்’’என புகழாரம் சூட்டினார். மேலும், ‘‘ ஜனநாயகத்தை தழுவியுள்ள மக்கள் நாங்கள் என்று, உலகுக்கு நாங்கள் இருவரும் காட்டியுள்ளோம்’’ 
என்றும் கூறினார்.
தற்போதைய அதிபர் குட்லக் ஜோனத்தான், புதிய அதிபர் முகமது புகாரியிடம் அடுத்த மாதம் 29–ந் தேதி முறைப்படி அதிகாரத்தை ஒப்படைப்பார் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>