Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 27 மே, 2015

யாழ் விஜயம் இலங்கைக்கான லண்டன் உயர் ஸ்தானிகர்

இலங்கைக்கான லண்டன் உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டயுரிஸ் யாழிற்கு இன்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
அந்த சந்திப்பின் பின்னர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்  வேதநாயகனை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்து
 கலந்துரையாடினார்.
கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்னர் இலங்கைக்கான லண்டன் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட பின்னர், முதன் முறையாக யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலமைகளை அறிந்து கொள்வதற்கும், நட்பு ரீதியான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வியாழன், 14 மே, 2015

இலங்கை பெண் கணவனை காண கண்ணீர் மல்க சென்றர் (காணொளி )


தனது கணவரை காணச் சென்ற 23 வயது இலங்கை தமிழ்ப் பெண்ணையும், அவரது 3 வயது குழந்தையையும் நவ்ரு தீவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் அடைத்துவைத்துள்ளனர். 
இலங்கை தமிழ்ப்பெண்ணும் அவரது 3 வயது குழந்தையும், அவுஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் தனது கணவர் மைக்கேலுடன் இணைந்து கொள்வதற்காக ஒரு சட்டவிரோதமான படகில் பயணித்துக்கொண்டிருக்கையில், அவர்களை அவுஸ்திரேலிய கடற்படையினர் கைது செய்து நவ்ரு தீவிலுள்ள தடுப்பு முகாம்களில் வைத்து அந்த இலங்கை தமிழ்ப் பெண்ணிடம், நீ உனது கணவனை அவுஸ்திரேலியாவில் காண இயலாது. ஆகவே திரும்பி சென்றுவிடு என்று அச்சுறுத்தியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ருத் என்ற பெயருடைய இலங்கை தமிழ்ப்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


ஞாயிறு, 10 மே, 2015

சிறைக்குள் மோதல்!36 பேர் பலி, 40 பேர் தப்பியோட்டம்

ஈராக்கில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 36 பேர் கொல்லப்பட்டனர். தியாலா மாகாணத்தில் உள்ள காலிஸ் சிறைச்சாலையில் இன்று கைதிகளுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதுபற்றி சிறையின் பாதுகாப்பு வீரர்கள் விசாரிக்க சென்றபோது மீண்டும் பிரச்சினை உருவானது.
நிலைமை எல்லை மீறியதால் பாதுகாப்பு படையினர் ஆயுத பிரயோகத்தில் ஈடுபட்டனர். கைதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 6 போலீஸ்காரர்கள் மற்றும் 30 கைதிகள் இறந்தனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய 40 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களில் சிலர் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் என உள்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

 

தேர்தல் கண்காணிப்பு பணிகளில் முன்னாள் அமைச்சர்கள்

 
பிரிட்டனில் வரும் வாரம் நடைபெறவுள்ள  தேர்தல் கண்காணிப்பு பணிகளில் இலங்கை முன்னாள் அமைச்சர்கள் இருவர் பங்கேற்கவுள்ளனர்.
எதிர்வரும் 7ம் திகதி பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இலங்கையின் முன்னாள் அமைச்சர்களான இம்டியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு ஆகியோர் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக அவர்கள் நாளை லண்டன் புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

பொதுநல நாடுகள் அமைப்புச் செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய அரசாங்கம் கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்கவுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு பணிகளில் முன்னாள் அமைச்சர்கள்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>