Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 18 ஜூன், 2015

சீனர்கள் ருசிக்கும் நாய் கறி திருவிழா”களைகட்டுகிறது “

சீனாவில் ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படும் ‘நாய் கறி திருவிழாவில் சுமார் 10 ஆயிரம் நாய்களை ஒரே நேரத்தில் கொன்று சமைத்து ருசித்து உண்ணும் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.
சீனாவின் Guangxi என்ற மாகாணத்தில் Yulin என்ற சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
விநோத பழக்க வழக்கங்களை கொண்ட இந்த மக்கள் தங்களை ஆவிகள் கொடிய நோய்களிலிருந்து காத்துக்கொள்ள கடந்த 2010ம் ஆண்டிலிருந்து ‘நாய் கறி திருவிழா’ என்ற ஒரு விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
எதிர்வரும் யூன் 21ம் திகதி தொடங்க உள்ள இந்த திருவிழாவின்போது, அந்த மாகாணம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய்களை பிடித்து வந்து பூஜை செய்வார்கள்.
பின்னர், ஒவ்வொரு நாயையும் கும்பல் கும்பலாக கொன்று நெருப்பில் சுட்டு எரித்து துண்டுகளாகவும் முழு நாய்களாகவும் பொதுமக்களுக்காக விற்பனைக்கு வைக்கின்றனர்.
இந்த பகுதியில் வாழும் Yulin சமுதாய மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் அன்று நாய் கறி விருந்து அமோகமாக நடைபெறும். இந்த ஒரு நாளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் நாய்கள் கொல்லப்பட்டு இந்த திருவிழாவிற்கு பயன்படுத்துவார்கள்.
சில ஆண்கள் நாய்கறி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என நம்புவதால், அவர்கள் இந்த உணவை விரும்பி ருசித்து வருகின்றனர்.
சீனர்களின் இந்த காட்டுமிராண்டி தனமான செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருந்தாலும், Yang Xiaoyun(65) என்ற சமூக ஆர்வலர் இந்த திருவிழாவில் கொல்லப்படும் நாய்களை மீட்க பல வழிகளில் போராடி வருகிறார்.
இந்த திருவிழா தொடங்குவதற்கு சில தின்ங்களுக்கு முன்னர் தனது Tianjin நகரத்திலிருந்து 1.652 மைல்கள் பயணித்து Yulin நகரத்திற்கு சென்று, நாய்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் அவற்றை விலை பேசி வாங்கி வந்து வளர்த்து வருகிறார்.
தற்போது வரை சுமார் 15,178 பவுண்டுகள் செலவழித்து சுமார் 360 நாய்கள் மற்றும் பல பூனைகளை காப்பாற்றி தனது இடத்தில் பாதுகாப்பாக வளர்த்து வருகிறார்.
இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் இந்த பகுதியில் நாய் கறி திருவிழா உற்சாகமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பகுதிக்கு பல வகை நாய்களை அதிக எண்ணிக்கையில் கும்பல் கும்பலாக வாகனங்களில் அடைத்து கொண்டு வருவதால் ‘ராபிஸ்’ எனப்படும் நோய் அதிக அளவில் பரவி வருவது அந்த சமுதாய மக்களுக்கு பெரிதாக தெரியவில்லை
சீனாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 2 கோடி நாய்கள் கொல்லப்பட்டு உணவாக சமைக்கப்படுவதுடன் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ராபிஸ் நோய் தாக்கி சுமார் 338 பேர் இறந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 17 ஜூன், 2015

பனிப்போர் மூளுமா? புடின் அறிவிப்பால் பரபரப்பு (காணொளி இணைப்பு)

அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்ற விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
ரஷ்ய எல்லையின் அருகில் உள்ள நேட்டோ நாடுகளில் டேங்கர்கள் மற்றும் பாரிய அளவில் ஆயுதங்களை குவிக்கவேண்டும் 
என்று ரஷ்யாவுடன் ஏற்பட்ட பனிப்போர் காலத்தில் இருந்தே அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் உக்ரேன் விவகாரத்துக்கு பிறகு ரஷ்யாவை ஒட்டியுள்ள ஐரோப்பாவின் கிழக்கு பகுதிகளில் தங்களது ஆயுதங்களை சேமித்து வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 
ஆனால் அமெரிக்காவின் இந்த திட்டத்துக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நேற்று மாஸ்கோ அருகில் நடந்த ராணுவ தளவாடங்கள் கண்காட்சியில் பேசிய புடின் ”இந்த ஆண்டு புதிதாக 40-க்கு மேற்பட்ட அதிநவீன அணு ஆயுத ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும்.
இந்த ஏவுகணைகள் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன ஏவுகணை எதிர்ப்புகளை சமாளிக்கும் திறனுடன் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு மூலம் அமெரிக்கா - ரஷ்யா இடையே மீண்டும் பனிப்போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 16 ஜூன், 2015

லலித் மோடி மீது ரூ. 1700 கோடி அபராதம் விதிக்க முடிவு***

 சர்ச்சைக்குள்ளான பிரிமியர் லீக் கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது 16 வழக்குகளின் கீழ் ரூ. 1700 கோடி அபராதம் விதிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூதாகரமாக வெடித்துள்ளது.
சட்டவிரோத பணி பரிமாற்றம் ,வரிஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கிய லலித் மோடி தேடப்படும் குற்றவாளியாக மத்திய அமலாக்கத்துறை அறிவித்திருந்தது. லண்டனில் தலைமறைவாக உள்ளார்.போர்ச்சுகலில் சிகிச்சை பெற்று வரும் தனதுமனைவியை சந்திக்க பயண ஆவணங்களை சரி செய்ய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் லலித் மோடி மீதான வழக்குகள் அனைத்தையும் மத்திய அமலாக்கத்துறை தூசி தட்டியுள்ளது. விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மத்திய அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில்,
ரூ. 1700 கோடி அபாரதம்
லலித் மோடி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு பிரிமியர் லீக் கிரிக்கெட் தலைவராக இருந்த போது ரூ. 425 கோடி பண மோசடி தொடர்பாக பி.சி.சி.ஐ சார்பில் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது. 2010-ம் ஆண்டு இன்டர்போல் அமைப்பின் சார்பில் புளு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அந்த நோட்டீஸ் 
கெடு இன்றுவரை அமலில் உள்ளது. தவிர லலித் மோடி மீது இது போன்று பல்வேறு வழக்குகள் என 16 வழக்குகளில் லலித் மோடியிடம் ரூ. 1700 கோடி அபாரதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு மத்திய அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 4 ஜூன், 2015

வரலாற்றிலேயே மிகப்பெரிய அபராத தொகை: நீதிமன்ற தீர்ப்பு

புகையிலை நிறுவனங்கள், புகைப்பிடித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 12.4 பில்லியன் டொலர்களை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கியூபெக் மாகாணத்தில் 1998-ம் ஆண்டு, புகைப்பிடிப்பதால் வரும் உடல்நலக் கேடுகள் பற்றி விளம்பர வாசகம் மூலம் தனது தயாரிப்புகளில் சொல்லாத நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கியூபெக் பகுதியில் சிகரெட் பிடிப்பதால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயால், பாதிக்கப்பட்டுள்ளனர் என புகார் கூறப்பட்டிருந்தது.
பல ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், 12.4 பில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இம்பீரியல் டொபேக்கோ, ரோத்மன்ஸ் பென்சன் அண்ட் ஹைட்ஐஸ் மற்றும் ஜே.பி.ஐ. மென்டொனால்ட் ஆகிய சிகரெட் நிறுவனங்கள் மீது இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கியூபெக் மாகாணத்தில் புகைப்பிடித்ததால் பாதிக்கப்பட்டுள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த தொகையை பிரித்துக்கொடுப்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பினை ஏற்காத புகையிலை நிறுவனங்கள், மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளன.
கனடா வரலாற்றிலேயே ஒரு வழக்கில் இந்த அளவுக்கு பெரிய அபராத தொகை தண்டனையாக விதிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>