Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 31 அக்டோபர், 2015

திடீர் தீ விபத்து! கொண்டாட்டத்தின் போது 27 பேர் பலியான பரிதாபம்!!!

ருமேனியாவில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ருமேனியாவின் புக்கரெஸ்டில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று நள்ளிரவு வானவேடிக்கையுன் இசை நிகழ்ச்சி
 நடைபெற்றது.
இதில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் கூரை தீப்பிடித்து எரிந்ததுடன் மளமளவென பரவ தொடங்கியது.
இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறும் போது, பலர் தீயில் சிக்கி 
பரிதவித்தனர்.
இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர், 155 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் காயமடைந்த நபர்களுக்கு ரத்தம் தேவைப்படுவதால் பொதுமக்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தவும் துணை பிரதமர் காப்ரியேல் ஒப்ரியா தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





வியாழன், 22 அக்டோபர், 2015

65 லட்சம் கார்களை டொயோட்டோ நிறுவனம் திரும்ப பெறுகிறது

உலகம் முழுவதிலிருந்தும் உள்ள 65 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக டொயோட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
பவர் விண்டோ சுவிட்ச்கள் தேவைக்கும் அதிகமான சூடாகி அதன் காரணமாக உருகவும் தீ பற்றும் வாய்ப்பும் உள்ளதால் அவற்றை திரும்ப பெற்று, குறைப்பாட்டை சரி செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 17 அக்டோபர், 2015

அயர்லாந்து வெற்றிஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில்

ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில் அர்லாந்து வெற்றி பெற்றது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் போட்டியின் டீ அணிப் பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் மோதின.
போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் எதனையும் போடமுடியவில்லை, எனினும் 70 ஆவது நிமிடத்தில் அயர்லாந்து கோல் ஒன்றைப் போட்டு வெற்றியை 
தனதாக்கியது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டிகள் 9 பிரிவுகளாக நடைபெறுகின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 14 அக்டோபர், 2015

ஓபன் ஸ்குவாஷ்: கால் இறுதியில் தீபிகா பலிக்கல்?

அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ் போட்டி அங்குள்ள பிலடெல்பியா நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால் 
இறுதிக்கு
 முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல், இங்கிலாந்து வீராங்கனை ஆலிசன் வாட்டர்சை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தீபிகா பலிக்கல் 9–11, 11–5, 3–11, 11–1, 11–6 என்ற செட் கணக்கில் ஆலிசன் வாட்டர்சை சாய்த்து கால்
 இறுதிக்குள் 
நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 10–12, 6–11, 5–11 என்ற நேர்செட்டில் எகிப்து வீராங்கனை ஒம்னெயா அப்டெல் கவ்யிடம் தோல்வி கண்டு 
வெளியேறினார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


திங்கள், 12 அக்டோபர், 2015

டென்மார் கொல்பேக் தமிழர் ஒன்றிய கலை விழா 2015


டென்மார்கில் (10/10/2015) நேற்று சனிக்கிழமை கொல்பேக் தமிழர் ஒன்றிய கலை விழா 2015 இடம்பெற்ற கவியரங்கில் மெல்ல தமிழ் என்ற தலைப்பில் இடம்பெற்ற

அதில்இணுவை சக்திதாசன் கவிதை பாரதி இலக்கியச செல்வர் திரு. கருணானந்தராஜா (யுகசாரதி – இலண்டன்)தலைமையில் கவிஞர். பாரதிபாலன் கவிஞர் அம்பலவாணர் (ஜேர்மனி)
கவிஞர். பொன். புத்திசிகாமணி (ஜேர்மனி)அவர்களோடு இணுவை சக்திதாசன்கவியரங்கில் பங்கேற்றார்கள்,

மேற்குலகின் ஒரு நாடாம்
டென்மார்க் கரையின் சிறுதீவாம்
சேலண்டின் ஒரு நகராம் கொல்பேக் அதன் பெயராம்
வந்தேறு குடிகளாய் வந்தமர்ந்த
நம்குடிகள் பண்பாட்டைப் போற்றி
செம்பாட்டு மண் மறவா
செந்தமிழை போற்றி
ஒன்றியமாய் திசை எட்டும் கூடி
வந்தமர்ந்த பெரு விழாவில்
கவியரங்க திருவிழாவாம்
தாயே தமிழே ஊரே உறவே !
சேயாய் உந்தன் மடி மீதினிலே தவழ்ந்தேன் – எல்லை
தாண்டிய போதும் நாயாய் இருப்பேன் நின்
தமிழாய் வாழ அருள் தா! தாயே !
மெல்ல தாயை விட்டு கொல்லைப்புறமாய்
கொல்லக் கொல்ல ஓடினேன் எல்லை தாண்டி ஊரை விட்டு
சொல்லிக் கொள்ளாமல் சுந்தர தீவை விட்டு
அக்கம் பக்கம் சுற்றம் விட்டு மண்ணை கூட விட்டு
தமிழை மட்டும் காவிக் கொண்டு உயிரை கையில் கொண்டு
வானம் குடைந்து பறந்து மெல்ல மெல்ல தேடினேன் – புதிய
வானமெங்கும் தமிழை அள்ளித் தூவினேன்.
அள்ளிப் பருக ஆளில்லாட்டாலும் வெட்டவெளி எங்கும்
கொட்டிக் கிடக்கும் ஆதி மொழியாம் செந்தமிழ்
மெல்ல துளிர்த்திடும் சேதி சொல்லிப்போக வந்தேன்.
கவிக்கு ராஜா கருணைக்கும் ராஜா – இக்
கவி அரங்கிக்கும் ராஜா
தலைமைக் கவியே யுக பாரதியே
கருணானந்த ராஜாவே !
சிந்தைக்கு விருந்து தந்து சந்தங்களோடு
அரங்கில் கவிதை தந்து சென்ற
அண்டை நாட்டுடன் எம் நாட்டு கவிஞர்களே !
ரசிக்கும் பாங்குடன் கவி ருசிக்கும் சுவைஞர்களே !
வந்தனங்கள் கூறி பகருகின்றேன் எந்தன் கவிதனையே !
மெல்ல தமிழ் இனி ?
கவி எழுத கற்றுக் கொள்ள முன்னம்
காற்றள்ளி யெறிந்தது வானிலே – என்னை
புவியீர்த்ததோ புரியவில்லை
கண்டங்கள் தாண்டி விழுந்தேன் உன் முன்னே
செத்துப் போனதோ தமிலென்ரென்ன
ஏதேதோ பாசைகளில் அதட்டினான்
தமிழன்றி வேறேதும் தெரியாத என்னை
நகைத்தேன் புன்னகைத்தேன் – புது
மொழியில் கண்ணசைத்தேன் விலங்கிட்டான்
விடியும்வரை விளக்க மறியலில்
கண்ணயர முடியவில்லை என்னால்
கருவறையின் பின்னால்
நானிருந்த இருளறை முதல் சிறை
தனிமையிருளில் அடங்காத் தமிழில்
கத்தினேன் குளறினேன் – பின்
உயிலெழுதி வைத்தேன் சன்கோலமுகா சிறைக் கதவிலே
தமிலேனி சாகா தென்று திமிரிலே
விடிந்தும் விடியாப் பொழுதொன்றில்
விளக்கொளியில் தமிழ் கொண்டு வந்தானொருவன்
வணக்கமென்றபடி!
உயிர் வந்தது எனக்கும் தமிழுக்கும் !
அன்னை மண்ணை விட்டு
அகதித் தமிழனாய் விண்ணைத் தொட்டு
ஆங்காங்கே குதித்தோம்
திட்டு திட்டாய் மேற்குலக தட்டில்
இமயத்தில் இருக்கின்ற குளிர் காற்றினில் தமிழ்
இனிக்கின்ற சேதி தேன் வந்து பாயுது காதினிலே –
செந்தமிழ் நாடென்ற போதினிலே
தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாரதி கனா
இன்று உலாப் போகுது இதயத்தை வருடி
தமிலென்பது வெறும் மொழியல்ல – அது
உன்னை சிகரத்தில் ஏற்றும் ஏணி
கவனக் குறைவால் நீ தடக்கி விழுவாயானால்
தமிழ் இனி சாகாது – கவனி
கவலைக் கிடமாவது நீதான் இது நியதி
நம்பிக்கை கொண்டு விழித்தெழு
நடுக் கடலிலும் பிழைத் திட வழியுண்டு
தும்பிக்கை தான் பலம் யானைக்கு – பிறர்
துன்பத்தை துடைத்தேழு தமிழுக்கு அழிவில்லை
கம்பன் வடித்த தமிழ் காணமல் போவதா ?
வள்ளுவன் குடித்த தமிழ் வற்றிப் போவதா ?
பாரதி கண்ட கனா மண்ணாகிப் போவதா ?
எங்கள் தமிலேனி விண்ணளா வேண்டாமா ?
விண்ணைக் குடைந்தொரு விதியொன்று செய்தோம்
முண்டங்கள் போல முடங்கா – பனி
முகட்டுக்குள் நின்றொரு
கண்டங்கள் தாவும் தமிழ் வித்தையை கண்டோம்
தளங்களில் தேர் போலொரு ரதம்
இணையத் தளங்களில் ஊருது – தமிழ்
இதயத் தளங்களிலும் ஊறுது தேன்
இமயத்தை மிஞ்சும் மொழிகளிலே – தமிழ்
இங்கிலீசை விஞ்சுது பார்
உலக மொழிகளிலே – தமிழ்
உன்னதம் கொள்ளுது பார்
எந்த மொழி அழிந்தாலும்
பத்து மொழி அழியாதாம் – அந்த பத்தில்
ஒன்று என் தமிழ்
மெல்ல தமிழ் இனி புவி மிசை யாழும்
காலத்துக்கு காலம் ஆடை மாற்றினாலும்
கலாச்சார பண்பாட்டுக்குள் வேரை மாற்றாத மொழி
பேஸ்புக் முகங்களின் முகத்தை மாற்றினாலும்
காட்சிக்கு காட்சி உரு ஏற்றும் மொழி
மெல்ல பேசும் மனசு – தமிழில்
செல்லம் பேசுது
செல்லம் பேசும் பொழுதில் – தமிழ்
வெல்லம் போலினிக்குது
மெல்ல தமிழினி உலகை
வெல்லப் போவதுறுதி
தமிழ் எனக்கு தெரியாது – அனால்
தமிழ் எனக்கு உயிர்
கவிதை எனக்கு தெரியாது – என்
உணர்வுகளை கிறுக்கி வைத்தேன் – அது
உங்கள் உள்ளங்களில் கோலம் போடுமானால்
அது போதுமெனக்கு
இணுவை சக்திதாசன்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வெள்ளி, 9 அக்டோபர், 2015

புதிய பிரதமர் ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்படுகிறார்

நேபாளத்தில் புதிய பிரதமரை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாததால், வரும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் நேபாள பிரதமரை தேர்வு செய்யும் நடமுறைகளுக்கு அந்நாட்டு அதிபர் ராம்நரன் யாதவ் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு இடையேயான ஒருமித்த கருத்தில் பிரதமரை தேர்வு செய்வதற்கான காலக்கெடு 
நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, பெரும்பான்மை வாக்கெடுப்பு அடிப்படையில்  தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்துமாறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற பிரநிதிகளை ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான தகவல் ஜனாதிபதி அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று நேபாள பாராளுமன்ற சபாநாயகர் சுபாஸ் நெம்பங் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவிக்கான பெயர்களை அங்குள்ள கட்சிகள் நாளை சமர்பிக்கவுள்ளன. நேபாளத்தில் 
புதிய அரசியல் சாசனம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து கடந்த வாரம் பிரதமராக பதவி வகித்த சுஷில் கொய்ராலா பதவி விலகியது நினைவிருக்கலாம். இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் துவங்கியுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வியாழன், 8 அக்டோபர், 2015

வான்வழித் தாக்குதல் திருமண நிகழ்வின் போது : 13 பேர் பலி?

யேமனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரில் திருமண நிகழ்வொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவமானது, யேமன் தலைநகர் சனாவில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சன்பன் எனும் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலின் பின்னணி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில், ஹெளதி கிளர்ச்சியாளர்களை தோற்கடிக்கும் முயற்சியில் சவூதி அரேபியா மற்றும் அதன் வளைகுடா 
அரேபிய நட்பு நாடுகள் கடந்த மார்ச் மாதம் முதல் யேமனில் வான் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். எனினும் இந்த தாக்குதலை சவூதி தலைமையிலான கூட்டணி மறுத்துள்ளது.
அதேவேளை, தென்-மேற்கு யேமனில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றின் போது கடந்த செப்டம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 135 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இவ்வாறாக ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும், 
சவூதி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடந்த மார்ச் மாதம் தொடரும் மோதலில் 2 ஆயிரத்து 355 பொதுமக்கள் உட்பட சுமார் 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 


இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

சனி, 3 அக்டோபர், 2015

சோதனைச்சாவடியில் தற்கொலைப்படை தாக்குதல்?

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
காதிமியா பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் இன்று ஈராக் போலீசார் வழக்கமான சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தற்கொலைப்படை தீவிரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். 

இதில், பொதுமக்கள் தரப்பில் 4 பேர் மற்றும் 6 போலீஸ்காரர்கள் என மொத்தம் 10 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 35 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஈராக் மற்றும் சிரியாவில் முக்கிய பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ். அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>