siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 21 டிசம்பர், 2015

குர்திஷ் போராளிகள் குறைந்தது102 பேர் கொல்லப்பட்டுள்ளர்?

துருக்கியின் தெற்கிழக்குப் பகுதியில், துருக்கி இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளின் காரணமாக, குர்திஷ் போராளிகளில் குறைந்தது 102 பேர் கொல்லப்பட்டுள்ளதாதக அறிவிக்கப்படுகிறது. தவிர, 2 படையினரும் 5 பொதுமக்களும்
, இதன்போது
 கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. தாங்கிகளின் உதவியோடு, சுமார் 10,000 துருக்கித் துருப்புகள், இந்தப் படைநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. நகரப் பகுதிகளிலிருந்து குர்திஷ் போராளிகளை 
விரட்டுவதே, 
இதன் நோக்கமென அறிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள், கடந்த புதன்கிழமை ஆரம்பித்துத் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக,
 தென்கிழக்கு 
நகரங்களில், ஊரடங்கைப் பிரகடனப்படுத்திய அரசாங்கம், அதற்கெதிராகப் போராடிய போராட்டக்காரர்களை, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்ப்பாய்ச்சி, விரட்டியிருந்தது 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 19 டிசம்பர், 2015

நேர்மையாக 32,000 டொலர் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஒருவர்


அமெரிக்காவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் சாப்பிட வந்த குடும்பத்தினர் 32,000 டொலர் பணத்தை மறந்து விட்டு சென்றதை தொடர்ந்து, அதனை உரியவரிடம் ஒப்படைத்த அந்த ஹொட்டல் சர்வரின் நேர்மைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மத்திய கலிபோர்னியா நகரில் Applebee என்ற உயர்தர ஹொட்டல் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த ஹொட்டலில் Brian Geery(33) என்ற நபர் கடந்த 10 ஆண்டுகளாக சர்வராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அந்த ஹொட்டலுக்கு ஒரு குடும்பத்தினர் உணவருந்த வந்துள்ளனர். அவர்களுக்கு Brian Geery தான் உணவுகளை பரிமாரியுள்ளார்.
உணவை முடித்துவிட்டு அந்த குடும்பத்தினர் ஹொட்டலை விட்டு வெளியே சென்றுள்ளனர்.
அப்போது, மேசையை சுத்தம் செய்ய வந்த Brian Geery, அங்கு ஒரு ஓரத்தில் சிறிய பை ஒன்று இருந்ததை கண்டு வியப்படைந்துள்ளார்.
அதனை உடனடியாக எடுத்துக்கொண்டு தனது மேலாளரிடம் காட்டியுள்ளார். ‘அதற்குள் ஏதாவது மருந்து மாத்திரைகள் இருக்கலாம்’ என மேலாளர் கூறியுள்ளார்.
ஆனால், சந்தேகம் அடைந்த Brian Geery, மேலாளரின் சம்மதம் பெற்று அந்த பையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார். உள்ளே கட்டுக்கட்டாக டொலர் அடுக்கி 
வைக்கப்பட்டுள்ளது.
அதன் மொத்த தொகையானது 32,000 டொலர் ஆகும். அதாவது அந்த சர்வரின் ஆண்டு வருமானத்திற்கு சமமான டொலர்.
பணத்தை கண்ட சர்வர் உடனடியாக தனது முதலாளியிடம் தெரிவித்து விட்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
உடனே ஹொட்டலுக்கு வந்த பொலிசார், சர்வரிடம் இருந்த பணத்தை பெற்று சென்றனர். பின்னர், பணத்தை காணவில்லை என அந்த குடும்பத்தினர் பொலிசாருக்கு புகார் அளித்தபோது அதனை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து பேசிய ஹொட்டல் இயக்குனர் Carrie Hellyer, பணத்தை விட்டு சென்ற அறையில் கண்காணிப்பு கமெராக்கள் எதுவும் இல்லை. சர்வர் அந்த பணத்தை எடுத்திருந்தாலும், அதனை கண்டுபிடித்திருக்க
 முடியாது.
ஆனால், சர்வருக்கு கர்மா மீது அதிக நம்பிக்கை உள்ளது. தான் மற்றவருக்கு செய்யும் துன்பம் தனக்கும் ஒரு நாள் ஏற்படும் என்பதை
 ஆழமாக நம்புகிறார்.
பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சர்வருக்கு குடும்பத்தினர் சன்மானம் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அதனை சர்வர் மறுத்துவிட்டது அவரது நல்ல குணத்திற்கு எடுத்துக்காட்டு’ 
என கூறியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்கவும் விரும்பாததால், நான் தான் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக Carrie Hellyer தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>>



புதன், 16 டிசம்பர், 2015

இடம்பெற்ற விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞன் சாவு!!


சவுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு எருவில் பாரதிபுரத்தினை பிறப்பிடமாகக் கொண்ட 30 வயதுடையஇ ராஜன் என்பவர் தொழில் நிமிர்த்தம் சவுதிக்குச் சென்றுள்ள நிலையில் இன்று விபத்துக்குள்ளாகி 
உயிரிழந்துள்ளார்.
சவுதியில் இருந்து கடந்த மாதம் இலங்கை வந்து தனது குடும்பத்துடன் தங்கியிருந்து, மீண்டும் தொழில் நிமிர்த்தம் 22 நாட்களுக்கு முன்பு சவுதிக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை, விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.   விபத்தில் உயிரிழந்த நபர் பெண் குழந்தையொன்றின் தந்தை என்பது 
குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 11 டிசம்பர், 2015

சிறுமியுடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கமான பாகிஸ்தான் தூதரக அதிகாரி மகன் கைது

அமெரிக்காவுக்கான, பாகிஸ்தான் நாட்டின் கம்யூனிட்டி வெல்பேர் கவுன்சிலர் என்ற பதவியில் இருப்பவர், முகமது முகீத் ரஹீமூன்.ஸ்கார்ஸ்டேல் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது உர் ரகுமான் ரஹிமூன்( வயது 20)
இந்நிலையில், 'விஸ்பர்' எனப்படும், சமூக வலைத்தளத்தின் மூலமாக, ப்ரோன்க்ஸ் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியுடன், ரகுமானுக்கு பழக்கம் ஏற்பட்டது. பிறகு அவ்வப்போது இருவரும் சந்தித்து பேச
 தொடங்கினர்.
டிசம்பர் 1ம்தேதி, இவ்விருவரும் மூன்றாவது முறையாக சந்தித்தனர். இந்த சந்திப்பு ஒட்டல் ஒன்றில் நடந்தது. அப்போது, இருவரும் உறவு கொண்டுள்ளனர். அதேநேரத்தில், சிறுமியை அழைத்துச் செல்ல பள்ளிக்கு வந்த அவரது தந்தை சிறுமியின் செல்போனுக்கு தொடர்புகொண்டு
 ஏங்கே இருக்கிறாய் 
என கேட்டுள்ளார். அப்போது போனை எடுத்து பேசிய ரகுமான், உங்கள் மகளுடன் உடற்பயிற்சி செய்துகொண்டுள்ளேன். உடற்பயிற்சி செய்ததும் கொண்டு வந்துவிட்டுவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில், சந்தேகமடைந்த சிறுமியின் தந்தை, சிறுமி வீட்டுக்கு வந்த பிறகு துருவி துருவி கேட்டுள்ளார். அப்போது நடந்ததை சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், போலீசார் ரகுமானை கைது செய்துள்ளனர்.தற்போது அவர ஜாமினில் விடுவிக்கபட்டு உள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் அதிகாரி கூறும் போது எனது மகன் நல்லவன் இது அனைத்தும் ஜோடிக்கபட்டது என கூறி உள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 8 டிசம்பர், 2015

மக்களின் மனங்களை பிரதிபலிக்கிறதா அகதிகளுக்கு எதிரான பிரச்சார பிரான்ஸ் தேர்தல்?

பிரான்ஸ் தேர்தலில் வலதுசாரி தேசிய முன்னணி கட்சி முன்னிலை பெற்றிருப்பது ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈரத்துள்ளது.
பிரான்சில் 13 மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்தல் கடந்த 6ம் திகதி நடந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வலதுசாரி தேசிய முன்னணி கட்சி முன்னிலை பெற்றுள்ளது
கடந்த மாதம் 13ம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 132 பேர் உயிரிழந்தனர், இதற்கு பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே தேசிய முன்னணி கட்சியின் தலைவரான மேரி லீ பென், அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பிரான்சில் இடமில்லை என்றும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களை வெளியேற்றுவதாகவும் பிரச்சாரம்
 செய்தார்.
இந்நிலையில் தற்போது அந்த கட்சி முன்னிலை பெற்றிருப்பது ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதுமட்டுமின்றி அவரது கருத்துக்கு ஆதரவாகவே பிரான்ஸ் மக்களும் வாக்களித்திருப்பதாக 
கருதப்படுகிறது,
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



புதன், 2 டிசம்பர், 2015

தமிழ் இளையோர்களை காட்டி கொடுக்கும் முயற்சியில் ஆ.த.கா !

ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ் அமைப்பும் , ஒரு சில தனிநபர்களை கொண்டு இயங்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆஸ்திரேலியா கிளையினரும் சேர்ந்தே சுமந்திரனுக்கான மக்கள் 
சந்திப்பை ஒழுங்குசெய்தனர் . இந்நிலையில் இச் சந்திப்புக்கு சென்ற தமிழின உணர்வாளர்கள் சுமந்திரனுக்கு எதிர்ப்பு காட்டி போராட்டத்தில் 
ஈடுபட்டனர் .
ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ் அமைப்பின் தமிழ்த் தேசிய விரோத செயற்பாடு அம்பலத்துக்கு வந்த பின்னர் , அவ் அமைப்பு சுமந்திரனுக்கு எதிர்ப்பு காட்டிய தமிழ் இளையோர்களை காட்டி கொடுக்கும் 
முயற்சியில் 
ஈடுபட்டு வருகின்ற தகவல் கசிந்துள்ளது . அத்தோடு தமிழின உணர்வுள்ள இளையோர்களை , காட்டுமிராண்டிகள் ,காடையர்கள் , கடைசியாக கப்பலில் வந்தவர்கள் , என கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர் .
 ஆஸ்திரேலியா 
தமிழ் காங்கிரஸ் அமைப்பின் தமிழ்த் தேசிய விரோத போக்கை கண்டித்த அவ்வமைப்பின் ஒரு சில தேசியவாத உறுப்பினர்களும் அவ்வமைப்பின் நிர்வாகத்தில் இருந்து ஒதுக்கப்படுவதாக தகவல் 
கிடைத்துள்ளது .
தாயகத்தில் தமிழ்த் தேசிய தளத்தை சிதைக்க நினைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளையும் , புலத்தில் அதற்கு வலுச்சேர்க்க துடிக்கும் உலகத் தமிழர் பேரவையின் தலைமைகளையும் இனம் கண்டு உலகத் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதே காலத்தின் தேவையாக உள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>