ஈராக்கில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 36 பேர் கொல்லப்பட்டனர். தியாலா மாகாணத்தில் உள்ள காலிஸ் சிறைச்சாலையில் இன்று கைதிகளுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதுபற்றி சிறையின் பாதுகாப்பு வீரர்கள் விசாரிக்க சென்றபோது மீண்டும் பிரச்சினை உருவானது.
நிலைமை எல்லை மீறியதால் பாதுகாப்பு படையினர் ஆயுத பிரயோகத்தில் ஈடுபட்டனர். கைதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 6 போலீஸ்காரர்கள் மற்றும் 30 கைதிகள் இறந்தனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய 40 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களில் சிலர் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் என உள்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
ஞாயிறு, 10 மே, 2015
தேர்தல் கண்காணிப்பு பணிகளில் முன்னாள் அமைச்சர்கள்
பிரிட்டனில் வரும் வாரம் நடைபெறவுள்ள தேர்தல் கண்காணிப்பு பணிகளில் இலங்கை முன்னாள் அமைச்சர்கள் இருவர் பங்கேற்கவுள்ளனர்.
எதிர்வரும் 7ம் திகதி பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இலங்கையின் முன்னாள் அமைச்சர்களான இம்டியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு ஆகியோர் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக அவர்கள் நாளை லண்டன் புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
பொதுநல நாடுகள் அமைப்புச் செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய அரசாங்கம் கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்கவுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு பணிகளில் முன்னாள் அமைச்சர்கள்
