Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 30 ஜனவரி, 2016

சிகிச்சையின்போது கருவி விழுந்து உடல் நசுங்கி நோயாளி பலி

ஜேர்மனி நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக வந்த மூதாட்டியின் மீது பல டன் எடையுள்ள மருத்துவ பரிசோதனை கருவி தவறி விழுந்ததில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஜேர்மனியில் உள்ள Osnabuck என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் திசு சிதைவு நோய் காரணமாக 77 வயதான மூதாட்டி ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார்.
மூதாட்டியை பரிசோதனை செய்வதற்காக அவரை மருத்துவ கட்டிலில் படுக்க வைத்துள்ளனர்.
மூதாட்டியின் உடலை பரிசோதனை செய்யக்கூடிய காமா கமெரா என்ற பல டன் எடையுள்ள கருவி அவரது தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருந்துள்ளது.
அப்போது திடீரென அந்த கருவி உடைந்துக்கொண்டு மிக வேகமாக கீழே வந்த மூதாட்டியின் தலை மீது விழுந்து நசுக்கியுள்ளது.
சற்றும் எதிர்பாராத இந்த சம்பவத்தில் மூதாட்டி படுக்கையிலேயே தலை, உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பரிசோதனை கருவியில் சில தொழில்நுட்ப காரணமாக தான் அது உடைந்து விழுந்துள்ளதாகவும், அந்த கருவியை இயக்கிய ஊழியர் மீது எந்த தவறும் இல்லை என கூறப்படுகிறது.
அதே சமயம், இந்த கருவியில் குறைபாடுகள் உள்ளனவா என சில நாட்களுக்கும் முன்னர் தான் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டது.
ஜேர்மன் நாட்டு மருத்துவ வரலாற்றில் இதுபோன்ற ஒரு துயர சம்பவம் தற்போது தான் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்திருந்தாலும், நேற்று தான் ஊடகங்களுக்கு தெரியவந்துள்ளது என்பது
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 28 ஜனவரி, 2016

ஓர் அபாரமான நற்செய்தி சுவிஸ் நாட்டு குடிமக்களுக்கு???

சுவிட்சர்லாந்து நாட்டில் பணிக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிரந்தரமாக மாத வருமானத்தை அளிக்கும் அபாரமான புதிய திட்டத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
உலகளவில் எந்த நாடும் அறிமுகப்படுத்தாத அபாரமான திட்டத்தை சுவிஸ் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் பணிக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் மாதந்தோறும் 2,500 பிராங்க் ஊதியத்தை அரசே வழங்கும்.
ஒவ்வொரு இளைஞருக்கும் 2,500 பிராங்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் 625 பிராங்க் பணமும் மாதந்தோறும் வழங்கப்படும்.
இதன் மூலம், எந்தவிதமான நிபந்தனையும் இன்றி அனைத்து குடிமக்களும் நிரந்தரமான மாத ஊதியம் பெற வழி வகை 
செய்யப்படும்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தியில், இந்த திட்டம் அறிமுகமானதும், அரசுக்கு ஆண்டுதோறும் 208 பில்லியன் பிராங்க் செலவாகும்.
இந்த 208 பில்லியன் பிராங்க் பணத்தை பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து 153 பில்லியன் பிராங்க் நிதியையும், காப்பீடு மற்றும் சமூக நல உதவிகளுக்கு செலவிடப்படும் 55 பில்லியன் நிதியையும் கொண்டு இந்த புதிய திட்டம் நிறைவேற்றப்படும்.
புதிதாக அறிமுகமாகமுள்ள இந்த திட்டத்திற்கு நேற்று சுவிஸ் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும், சுவிஸ் குடிமக்கள் பணிக்கு செல்லாமலேயே மாதந்தோறும் நிரந்தர ஊதியம் அளித்தால், ஏற்கனவே பணிக்கு சென்றுக்கொண்டு இருப்பவர்கள் திடீரென வேலையை விட்டு விடுவார்களா என்பது குறித்து ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், ’வேலைக்கு செல்லாமல் தங்களுக்கு வருமானம் வந்தாலும் கூட நாங்கள் தொடர்ந்து வேலைக்கு செல்வோம் என பெரும்பாலான நபர்கள் வாக்களித்துள்ளனர்.
இவர்களில் 2 சதவிகித நபர்கள் மட்டுமே வேலைக்கு செல்வதை நிறுத்தி விடுவோம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டில் எந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும், அதற்கு பொதுமக்களின் ஒப்புதல் அவசியம்.
எனவே, இந்த புதிய சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் யூன் 5ம் திகதி நடைபெற உள்ளதாகவும், பெரும்பான்மையான மக்கள் இதற்கு ஆதரவு அளித்தால், இந்த சட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



சனி, 23 ஜனவரி, 2016

பாரிய வாகன கார் வுிபத்தில் ஈழ தமிழர் ஒருவர் சாவு!

யாழ்ப்பாணத்தில் சுதுமலையை சேர்ந்த 02 பெண் பிள்ளைகளின் தந்தையானஈழ தமிழர்  நல்லையா பத்மநாதன் – வயது 48 என்பவரே ஜேர்மனியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு காஸல் நகரத்தில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்து அனர்த்தத்தில்  உயிர் 
இழந்து உள்ளார்.
சுமார் 28 வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்து வந்து இருந்த காஸலில் பீஸா உணவகம் ஒன்றை நடத்தி வந்து உள்ளார்.
சம்பவ தினம் வாடிக்கையாளர் ஒருவருக்கு பீஸா விநியோகிக்க மனைவி சகிதம் காரில் சென்று கொண்டிருந்தபோதே விபத்து 
நேர்ந்தது.
இவர் மிக நிதானமாக வாகனத்தை செலுத்தி சென்று கொண்டிருந்தபோதிலும் பின்னால் நவீன ரக காரில் வந்த 18 வயது இளைஞன் ஒருவர் இடித்து விட்டார். இதனால் பத்மநாதனின் கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் இன்னொரு காருடன் மோதி மரத்துடனும் இடிபட்டது.
ஸ்தலத்திலேயே பத்மநாதன் இறந்து போனார். மனைவிக்கு பலத்த உட்காயங்கள்.
பிரஸ்தாப இளைஞன் அடங்கலாக இவ்விபத்தில் மொத்தம் 07 பேர் காயப்பட்டு இருக்கின்றனர்.
இளைஞன் புதிதாக சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றவர் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்து உள்ளது.
பத்மநாதனின் மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில் மரணச் சடங்கை நடத்துவதற்காக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்..குடும்பத்தினரிடம் சடலத்தை கையளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ள.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 15 ஜனவரி, 2016

ஒபாமா பாராளுமன்றத்தில் இறுதி உரை நிகழ்வு ?

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஒபாமா பதவியேற்று 8 வருடங்கள் நிறைவடைகிறது.
இரு அவைகளும் கூடிய கூட்டு பாராளுமன்றத்தில் ஜனாதிபதியாக, ஒபாமா  இறுதி உரையை ஆற்றினார்.
துப்பாக்கி வன்முறைகளிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பது அவசியம் என ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்காக பரக் ஒபாமா ஆற்றும் அரச இறுதி உரையில்  இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொழிலுக்கேற்ற ஊதியம் வழங்குவதிலும், பணியாளர்களுக்கான உரிய விடுமுறைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளிடையே வல்லமையுடைய நாடாக அமெரிக்கா விளங்குவதாகவும் ஒபாமா தனது 8 ஆவதும் இறுதியுமான உரையில் கூறியுள்ளார்.
அனைத்து பிரஜைகளுக்கும் கல்வி அவசியமானது என்பதை இதன் போது அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.எஸ் ஆயுததாரிகளுடனான மோதலானது ஒருபோதும் 3 ஆவது உலகப்போராக உருவெடுக்காது எனவும் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தனது இறுதி உரையில் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 5 ஜனவரி, 2016

தள்ளாடி ஒரு சக்கரத்தில் தரையிரங்கிய தள்ளாடிய விமானங்கள்

பிரித்தானிய நாட்டில் உள்ள விமான நிலையத்தில் சூறைக்காற்று வீசியதை தொடர்ந்து பல விமானங்கள் ஓடுபாதையில் இறங்க முடியாமல் போராடிய அதிர்ச்சி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தில் உள்ள Birmingham என்ற விமான நிலையத்தில் தான் இந்த அதிர்ச்சி காட்சிகள் நிகழ்ந்துள்ளன. ல தினங்களுக்கு முன்னர் வடக்கு இங்கிலாந்தை ஈவா மற்றும் பிராங்க் என பெயரிடப்பட்ட இரண்டு புயல்கள் சூழ்ந்து மழையை வாரி அடித்துச்சென்றுள்ளது.
எனினும், இந்த இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னதாகவே Birmingham விமான நிலையத்தில் கடுமையான வேகத்தில் காற்று வீசியுள்ளது.
இவ்வாறு சூழ்நிலையில் ஓடுதளத்தில் இறங்க வந்த பல விமானங்கள் பெரும் போராட்டத்தை சந்தித்தன.
குறிப்பாக, பிரஸ்சல்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க முயற்சித்தபோது, காற்று சுமார் 50 கி.மீ வேகத்தில் வீசியதில் விமானம் தரையிறங்க முடியாமல் தள்ளாடியவாறு
 வந்துள்ளது.
ஓடுதளத்தை அடைந்தபோது விமானத்தின் வலதுப்பக்க சக்கரம் மட்டுமே தரை மீது இறங்கியுள்ளது. சில நொடிகள் அந்த விமானம் ஒரு பக்க சக்கரங்களின் உதவியால் ஓடுதளத்தில்
 சென்றுள்ளது.
சிறிய ரக விமானம் ஒன்று இறங்க முயற்சித்தபோது காற்றின் போக்கில் பறந்து ஓடுதளத்தை விட்டு விலகி செல்லும் நிலை ஏற்பட்டும் விமானி கடுமையாக போராடி விமானத்தை பத்திரமாக 
தரையிறக்கியுள்ளார்.
இதற்கு அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு விமானிகளும் பெரும் போராட்டத்துடன் விமானங்களை ஓடுபாதையில் இறக்கியுள்ளனர். சில விமானங்கள் தரையிறங்க முடியாமல் மீண்டும் மேல் எழும்பி பறந்த துயர சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 4 ஜனவரி, 2016

மருத்துவ அதிகாரி விடுத்துள்ள தீவிர குளிர் காலநிலை எச்சரிக்கை?

கனடா- ரொறொன்ரோவின் சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி தீவிர குளிர் காலநிலை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஞாயிற்றுகிழமை இரவு இரட்டை இலக்க எதிர்மறை வெப்பநிலை காணப்படும் என முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை
 இரவு -15 C ஆக 
காணப்படும் என கனடா சுற்றுசூழல் பிரிவினர் அறிவித்துள்ளனர். இதயம் அல்லது சுவாசம் சம்பந்தமான நிலைமை உள்ளவர்கள், வயோதிபர், சிறுவர்கள் மற்றும் வெளிக்கள பணியாளர்களை இரவு 
வீடுகளின் உள்ளே
 இருக்கும் படியும் அல்லது முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் டாக்டர் டேவிட் மெக்யோன் எச்சரிக்கின்றார். குடியிருப்பாளர்கள் மேலதிக ஆடைகளை அணிந்து கொள்ளுமாறும் வெளிச்சத்திற்குட்படும் தோல் பகுதிகளை மூடுமாறும் மதுபானம் அருந்துவதை
 நிறுத்துமாறும்
 கேட்டுக்கொள்ள படுகின்றனர். மதுபானம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். ஆனால் சிலருக்கு உடலை வெப்பமாக உணரவைக்கும் எனவும் கூறப்படுகின்றது. 24-மணித்தியால உட்புகல் மையங்கள் மேலதிக படுக்கைள் கொண்ட தங்குமிடங்கள் போன்றன திறந்திருக்கும் 
எனவும் மெக்யோன்
 தெரிவித்தார். எச்சரிக்கை காரணமாக தங்குமிடங்களிற்கு செல்பவர்களிற்கு உதவுவதற்கு TTC ரோக்கன்கள் வழங்கப்படும். திங்கள்கிழமையும் வெப்பநிலை -11 C காணப்படும் என கனடா சுற்றுசூழல் பிரிவு தெரிவிக்கின்றது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>