Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 30 மார்ச், 2016

தண்ணீர் குடித்தவரை ரயிலில் கட்டிவைத்து அடித்த சம்பவம்

மத்திய பிரதேசத்தில் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்த ஒருவரை ரயிலில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மத்திய பிரதேசத்தின் இடர்சி ரயில் நிலையத்தின் அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரை சேர்ந்தவரான சுமித் என்பவர், லோக் மான்ய திலக் ரயிலில் சென்று கொண்டிருந்த போது எதிரே அமர்ந்திருந்தவர்களின் தண்ணீரை எடுத்து பருகியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து சுமித்தை ரயிலில் கட்டி வைத்து அடித்துள்ளனர். 
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் 
சுமித்திற்கு உதவ முன்வரவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக சுமித் அளித்த புகாரை தொடர்ந்து பீகாரை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் சம்பவம் நிகழ்ந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை 
என கூறப்படுகிறது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 27 மார்ச், 2016

இலங்கைக்கு வந்துள்ளது சவுதியில் கொல்லப்பட்ட பெண்ணின் உடலம்

சவுதி அரேபியாவில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாத்தளை, உக்குவளை பரகாவெலயைச் சேர்ந்த இராமையா கிருஸ்ணகுமார் உதயகுமாரியின் உடல் நான்கு மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு பிள்ளையின் தாயாரான உதயகுமாரி கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி தொழிலுக்காக சவுதி அரேபியாவிற்குச் 
சென்றிருந்தார்.
தனது கணவரான தங்கராஜ் யோகராஜா, சவுதி அரேபியா சென்று 15 நாட்களில் இவரும் அங்கு சென்றதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.
இருவரும் ஒரே உரிமையாளரின் ஹோட்டல் மற்றும் வீட்டில் தொழில் புரிந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி இரவு, உதயகுமாரி சவுதி அரேபியாவில் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாக உறவினர்களுக்குத் தகவல் 
கிடைத்திருந்தது.
எனினும், உதயகுமாரியின் உடலை இலங்கைக்குக் கொண்டு வருவதில் நிலவிய தாமதம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உதயகுமாரியின் கணவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கைக்கான சவுதி தூதரகம் 
அறிவித்திருந்தது.
சவுதி அரேபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட உதயகுமாரியின் பூதவுடல் மாத்தளையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக்கிரியை இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 22 மார்ச், 2016

றொப் போட் ( Rob Ford) முன்னாள் மேயர் காலமானார்.!

கனடிய தமிழ் தமிழ் மக்களிற்கு நன்கு அறிமகமான முன்னாள் ரொரன்ரோ மேயர் றொப் போட் அவர்கள் ரொரன்ரோவில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் தனது 46 வது வயதில் இன்று காலமானார்.என்பதை மிகுந்த கவலையுடன் அறியத் தருகிறோம்.அவரின் ஆத்மா சாந்தியடைவதற்காக அனைவரும் 
பிராத்திக்கின்றோம்க
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 1 மார்ச், 2016

மூன்று பெண்கள் இளைஞரை வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்திய முறைப்­பாடு?

இளைஞர் ஒரு­வரை பெண்கள் மூவர் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி அந்த இளை­ஞரின் விந்­த­ணுக்­களை திரு­டி­ய­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்­பாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஸிம்­பாப்வே பொலிஸார் 
தெரி­வித்­துள்­ளனர்.
வீதி­யோ­ரத்தில் வாக­னத்­துக்­காக காத்து நின்ற மேற்­படி இளை­ஞரை கார் ஒன்றில் வந்த பெண்கள் மூவர் ஏற்­றிச்­செல்­வ­தற்கு முன்­வந்­தனர். 
அதை­ய­டுத்து அந்த இளைஞர் வாக­னத்தில் ஏறிக்­கொண்டார்.
சிறிது தூரம் சென்­றபின், அப்­ பெண்கள் மூவரும் மேற்­படி இளை­ஞரை கட்­டா­யப்­ப­டுத்தி பாலியல் உறவு கொண்­டனர் எனக் கூறப்­ப­டு­கி­றது.
ஸிம்­பாப்­வேயின் புல­வாயோ நகரைச் சேர்ந்த பொலிஸ் பேச்­சாளர் ஒருவர் இது தொடர்­பாக கூறு­கையில், வெள்ளை நிற டொயோட்டா கிறெஸ்டா ரக காரில் வந்த பெண்­களே தமது இலக்­கான மேற்­படி இளை­ஞரை காரில் ஏற்றிச் சென்­றுள்­ளனர்.
அந்த இளை­ஞரை கட்­டா­யப்­ப­டுத்தி பாலியல் உறவில் ஈடு­பட்ட அப்­ பெண்­களில் ஒருவர் மாத்­திரம் கருத்­தடை உறையை பயன்­ப­டுத்­தினார்.
ஏனைய மூவரும் பாது­காப்­பற்ற வகையில் பாலியல் உறவில் ஈடு­பட்­டனர்.
அந்த நபரின் விந்­துகள் கொண்ட சுக்­கி­லத்தை பெற்­றுக்­கொண்­டபின் அவரை பாதை­யோ­ரத்தில் தள்­ளி­விட்டு அப்­ பெண்கள் தப்பிச் சென்­று­விட்­டனர்” எனக் கூறினார்.
மேற்­படி இளை­ஞரின் விந்­துக்­களை எதற்­காக இப்­ பெண்கள் திரு­டினர் என்­பதை அப்­ பொலிஸ் பேச்­சாளர் தெரி­விக்­க­வில்லை.
ஆனால், ஜூஜூ எனும் ஒரு மாந்­தி­ரீக நட­வ­டிக்­கைக்­காக இவ்­வாறு விந்து திரு­டப்­பட்­டி­ருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.
ஸிம்­பாப்­வேயில் ஆண்­களை பெண்கள் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்கி விந்து திரு­டப்­பட்­ட­தாக தகவல் வெளி­யா­கு­வது இது முதல் தட­வை­யல்ல.
2011 ஆண்டு இவ்­வாறு ஒரு சம்­பவம் இடம்­பெற்­றது. இதன்­போது ரோஸ்­மேரி சக்­வி­ஸிரா (28), சோபி நோக்­வாரா, (26), நெட்சாய் நோக்­வாரா (24) ஆகிய சகோ­த­ரிகள் மூவர் கத்­திகள் மற்றும் உயி­ருள்ள பாம்­பு­களைக் காட்டி மிரட்டி இளைஞர் ஒரு­வரை வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி விந்­த­ணுக்­களை திரு­டிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டனர்.
இவர்­களின் கார் விபத்தில் சிக்­கி­ய­தை­ய­டுத்தே அக் ­காரை பரி­சோ­தித்த பொலிஸார் பயன்­ப­டுத்­தப்­பட்ட சுமார் 30 ஆணு­றை­களை கண்­டனர். அதன்­பின்­னரே இவர்கள் கைது செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.
எனினும், மர­பணு பரி­சோ­த­னைக­ளை­ய­டுத்து, 2012 ஆம் ஆண்டு இவர்கள் மீதான குற்­றச்­சாட்டை அதி­கா­ரிகள் வாபஸ் பெற்­றுக்­கொண்­டனர்.
இவர்கள் தவ­றாக கைது செய்­யப்­பட்­டனர் என இச் சகோதரிகளின் சட்டத்தரணி துமிசனி எம்தோபெனி 
தெரிவித்திருந்தார்..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>