Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 31 மே, 2016

மீனுக்கு :அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த மருத்துவர்கள்

பிரித்தானிய நாட்டில் தங்க நிற மீன் ஒன்றின் கழுத்தில் கட்டி இருந்ததை தொடர்ந்து அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள Buckinghamshire நகரில் ரோய் ஹேண்ட்ஸ்(59) என்ற நபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் தங்க நிறத்தில் 5 வயதான நீமோ என்ற மீன் வளர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மீன் மிகவும் சோர்வுற்று காணப்பட்டதால், அதனை தூக்கிக்கொண்டு 200 மைல்கள் கடந்து பிரிஸ்டோல் நகரில் உள்ள கால்நடை மருத்துவர்களிடம்
 காட்டியுள்ளனர்.
மீனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அதன் கழுத்து பகுதியில் கட்டி ஒன்று இருந்ததை கண்டு பிடித்தனர்.
மேலும், மீனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றாவிட்டால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட உரிமையாளர் அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், மீனுக்கு அறுவை சிகிச்சை செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
தண்ணீரை விட்டு மீனை வெளியே எடுத்தால் அது இறந்து விடும் என்பதால் மாற்று வழியை பயன்படுத்தியுள்ளனர்.
அதாவது, மீனை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து அதன் வாய் வழியாக காற்றை செலுத்தி கூர்மையாக கவனித்து அறுவை சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சையின் இடையில் திடீரென மீனின் இதயத்துடிப்பு நின்றுள்ளது.
ஆனால், சாமர்த்தியமாக செயல்பட்ட மருத்துவர்கள் உடனடி சிகிச்சை அளித்து இதயத்தை மீண்டும் துடிக்க வைத்துள்ளனர்.
சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற சிகிச்சைக்கு பிறகு, மீனின் கழுத்தில் இருந்த கட்டி வெற்றிக்கரமாக நீக்கப்பட்டது.
இரண்டு மணி நேரம் மருத்துவமனையில் இருந்த அந்த மீன் பின்னர் உரிமையாளரிடம் திரும்ப கொடுக்கப்பட்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாசமாக வளர்த்த மீனின் அறுவை சிகிச்சைக்காக அதன் உரிமையாளர் 200 பவுண்ட்(43,246 இலங்கை ரூபாய்) செலவிட்டார் என்பது 
குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 27 மே, 2016

ஜனாதிபதி மைத்திரிக்கு ஜப்பானில் அமோக வரவேற்பு!

ஜி - 7 நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் சென்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. ஜப்பானில் நடைபெறும் ஜி - 7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக
 நேற்று பிற்பகல் கொழும்பிலிருந்து 
பயணத்தை ஆரம்பித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை முற்பகல் தெற்கு ஜப்பானின் நகோயா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். இலங்கை ஜனாதிபதியையும்
 அவருடன் வந்த
 தூதுக்குழுவினரையும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஜி முத்தோ, மாவட்ட ஆளுநர் ஹீதேகி ஒமோரா ஆகியோர் உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினர் மிக விமர்சையாக வரவேற்றனர். இந்த வரவேற்பையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால தங்கியிருக்கும் நகோயா ஹில்டனில் அவருக்கு சம்பிரதாயபூர்வமான வரவேற்பு நிகழ்வும்
 வழங்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 13 மே, 2016

லண்டன் மிச்சம் பகுதியில் தமிழ் பெண் விபத்தில் பலி!

இடம்பெற்ற விபத்தில் லண்டன் மிச்சம் பகுதியில் தமிழ் பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் இறந்த நடுத்தர வயதுடைய சுகந்தி என்ற பெண்மணி மூன்று பிள்ளைகளின் தாயார் என் 
அறியவருகிறது.
ஜேர்மனியில் இருந்து பிள்ளைகளின் கல்விக்காக அண்மையில் இவர் லண்டனுக்கு இடம்பெயர்ந்திருந்தார். உயிரிழந்த சுகந்தி விபத்து இடம்பெற்ற பிரதேசத்தில் உள்ள டட்லியா பல்பொருள் அங்காடியில் 
பணியாற்றியுள்ளார்.
பாதசாரிகளின் நடைபாதையில் பஸ் குறுக்கிட்டபோதே இவ்விபத்து நடைபெற்றுள்ளது. மேலும் காலையில் உருவாகியிருந்த பனிப்புகாரே இவ்விபத்துக்கு காரணமாயிருக்கலாம் என விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்து இடம்பெற்ற ஸ்தலத்திலேயே மரணம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் விபத்து நடந்த மிச்சம் – லண்டன் வீதி மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



திங்கள், 2 மே, 2016

தற்கொலைப்படை தீவிரவாதி- நடுவானில் பரபரப்பை கிளப்பிய பெண்

பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடும் பொருட்டு விமான பயணம் மேற்கொண்ட இளம்பெண் ஒருவர் தாம் தற்கொலைப்படை தீவிரவாதியென கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரம் நோக்கி இளம்பெண்கள் இருவர், தங்களில் ஒருவரது பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு பயணம்
 மேற்கொண்டிருந்தனர்.
விமானம் புறப்பட்டதில் இருந்தே இருவரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் பல முறை சக பயணிகள் எரிச்சலுற்று எச்சரிக்கையும் செய்துள்ளனர்.
பல முறை விமான ஊழியர்களிடம் மோதல் போக்கையும் கடைபிடித்து வந்துள்ளனர். சத்தமாக பாட்டு வைத்து சக பயணிகளின் கோபத்திற்கு ஆளானார்கள், மட்டுமின்றி விமானத்தில் அதிக மது வழங்க கேட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் 
ஈடுபட்டு வந்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>