siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 27 ஆகஸ்ட், 2016

கடற்கரையில்தமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி! பாதுகாப்பு அதிகரிப்பு


பிரித்தானிய கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரையில் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடற்கரை பகுதியில் ஐந்து இலங்கைத் தமிழ் இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன் கிழமை குறித்த கடற்கரைக்குச் சென்ற கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோர் புதைமணலில் சிக்கி 
உயிரிழந்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் குறித்த கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ராதர் கவுன்சில் அறிவித்துள்ளது.
அங்கு வரும் மக்களுக்கு உறுதியளிக்கும் நோக்கிலும், அவர்களுக்கு பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கவும் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் அங்கு நிறுத்தப்படுவதாக அந்தக் கவுன்சில்
 தெரிவித்துள்ளது.
இதேவேளை, கேம்பர் கடற்கரையில் போதிய உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் இல்லை என உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் விமர்சனம் செய்துள்ளன.
குறித்த கடற்கரை பாதுகாப்பானது என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என ராதர் கவுன்சில் உறுப்பினர் சாலி ஆன் ஹார்ட் 
கூறுகிறார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

கோட்டை புகையிரத நிலையத்தில் நெதர்லாந்தின் இளம் தம்பதிகள்! கைது

நெதர்லாந்தின் இளம் தம்பதிகள் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் வகுப்பு டிக்கட்டுடன் சிலாபம் கோட்டை புகையிரத முதலாம் வகுப்பில் பயணம் செய்தமைக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முதலாம் வகுப்பு சொகுசு உறங்கும் அறையை கொண்ட இவர்கள் பொலிஸார் பல முறை முயற்சித்தும் கூட அறையை திறக்காதமையால் புகையிரதம் தாதமானது.
இந்த நிலையிலேயே குறித்த தம்பதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

சட்டத்தை மீறி ஆஸி செல்லமுற்பட்ட இலங்கை யர்கள் கைது


குடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறி அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சி 17 இலங்கை யர்களை, மட்டக்களப்பு வடக்குக் கடற்பிராந்தியத்தில் வைத்து, நேற்று திங்கட்கிழமை (15) கடற்படையினர் 
கைதுசெய்துள்ளனர்.
நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்திலிருந்து புற ப்பட்ட குறித்த நபர்கள், நீண்ட நாட்களாகப் படகில் தங்கியிருந்ததாகத் தகவல்கள் 
தெரிவிக்கி ன்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

6 ஆண்டுகள் 10 வயது சிறுமியை மிரட்டி தொடர் பாலியல் பலாத்காரம்!

இங்கிலாந்தில் 16 வயது சிறுமியை 6 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 19 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது.
இங்கிலாந்தில் லண்டன் அருகேயுள்ள படோபில் பகுதியை சேர்ந்தவர் கெய்த் டவுனென்டு. இவர் 10 வயது சிறுமியை 6 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
இது குறித்து அந்த சிறுமி பொலிஸில் செய்த முறைப்பாடினை தொடர்ந்து, அவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட கெய்த்துக்கு 19 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியை பல்வேறு காரணங்களை கூறி மிரட்டி தினசரி இருமுறை அந்த நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார்.
சிறுமி 10 வயதாக இருக்கும் போதே அந்த நபர் தமது கட்டுப்பட்டுக்குள் சிறுமியை கொண்டு வந்துள்ளதாகவும் இது 16 வயது வரை தொடர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கூறிய இளம் பெண், தமது குழந்தை பருவத்தை அந்த நபர் சூறையாடியதாக கூறிய அவர், தினசரி இருமுறை தம்மை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமது வாழ்க்கையின் முக்கிய காலகட்டம் அத்தனையும் நரகத்தில் கழிந்துள்ளதாகவே தாம் தற்போது உணர்வதாகவும், அந்த நபர் சிறையில் இருப்பதால் இனி தமது எதிர்காலம் குறித்து சிந்திக்கலாம் என தெரிவித்துள்ளார்
வேலை நிமித்தமாக அந்த நபரின் மனைவி பெரும்பாலும் வெளியே சென்று விடுவதால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி 10 வயதேயான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
சில சமயங்களில் நள்ளிரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் தம்மை வலுக்கட்டாயமாக எழுப்பி உறவு வைத்துக்கொள்ள நிர்பந்தித்துள்ளதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 3000 முறை தம்மை அவர் பலாத்காரம் செய்திருப்பார் எனவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
தமக்கு நேர்ந்த கொடுமைகள் பலவும் வெளியே சொல்ல முடியாதது எனவும், அந்த நினைவுகளில் இருந்து மீண்டு புது வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதே தமது குறிக்கோள் என தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

ஆயுதங்களுடன் மர்ம நபர் ஜேர்மனி உணவகத்தில் பதற்றம்!

ஜேர்மனி நாட்டில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்குள்ளவர்களை பணையக்கைதிகளாக வைத்துள்ளதால் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியில் உள்ள Saarbruecken நகர் உணவகம் ஒன்றில் சற்று முன்னர் ஆயுதம் ஏந்திய மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்குள்ளவர்களை சிறை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், உணவகத்தில் இருந்து சில ஊழியர்கள் தப்பி வெளியேறியுள்ளனர்.
மேலும், எந்த நேரத்திலும் உணவகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இச்செய்தி உறுதி செய்யப்பட்டதும் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் பொலிஸார் உணவகத்தை சுற்றி குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், பொலிஸார் உணவகத்திற்குள் நுழைந்தபோது, அங்கு கீழ்த்தளத்தில் ஆயுதம் ஏந்தியதாக கூறப்பட்ட நபர் தூங்கிக்கொண்டு இருந்ததை பொலிஸார் கண்டு அவரை கைது செய்தனர்.
மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், உணவக உரிமையாளரின் உறுவினர் என்றும் தெரியவந்துள்ளது. ஜேர்மன் நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இவ்விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>