Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 29 டிசம்பர், 2016

பாலியல் குற்றங்கள் உலகிலேயே அதிகம் நடைபெறும் நாடு எது?

உலகில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அக்கறை
 காட்டும் அரசு, பாலியல் தொடர்பான வன்முறை சம்பவங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதும், ஆண்களின் மாறுபட்ட மனப்போக்கும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதற்கு காரணமாக இருக்கின்றன.
பலாத்கார சம்பவங்களின் அடிப்படையில், உலகில் அதிகமாக பலாத்கார சம்பவங்கள் நடக்கும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அமெரிக்கா
வல்லசு நாடான அமெரிக்காவில் 91 சதவீத பெண்களும், 9 சதவீதன ஆண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என U.S Bureau புள்ளியல் தகவலை வெளியிட்டுள்ளது. 6 பெண்களில் ஒருவர் மற்றும், 33 ஆண்களில் ஒருவர் என வாழ்நாள் முழுவதும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதில் அதிகமாக கல்லூரி மாணவிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அமெரிக்காவில் பொது இடங்களில் பாலியல் சம்பவங்கள் நடைபெற்றாலும், வீடுகளிலும் அதிகமாக பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன.
தென் ஆப்பிரிக்கா
அதிகமாக பலாத்கார குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் தென் ஆப்பிரிக்காவும் ஒன்று. கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 65,000 பாலியல் குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன என புகார்கள் பதிவாகியுள்ளன. உலகிலேயே இளம் வயது குழந்தைகள் அதிகமாக பலாத்காரத்திற்கு உள்ளாகும் நாடு தென் ஆப்பிரிக்கா நாடு என்பது 
குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்நாட்டில் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படுவதால் இக்குற்றங்கள் அதிகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
ஸ்வீடன்
ஐரோப்பிய நாடுகளில் பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஸ்வீடன் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2009 ஆம் ஆண்டில் தான் அதிக வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. அதாவது 7,590 புகார்கள் பதிவாகியுள்ளது. 58 சதவீதமாக குற்ற எண்ணிக்கை 
அதிகரித்துள்ளது.இந்தியா
பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில், 24,470 பெண்கள், தங்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என புள்ளியல் விபரங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியா
இங்கிலாந்து நாட்டிற்கு வருடந்தோறும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். எந்த அளவுக்கு சுற்றுலா பயணிகளை இந்த நாடு கவர்ந்திழுக்கிறதோ, அதே போன்று பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுகின்றன.
குறிப்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் தான் அதிக குற்றங்கள் நடைபெறுகின்றன. இந்த இரண்டு பகுதிகளில் மட்டும் ஒரு வருடத்திற்கு சுமார் 85,000 பெண்கள் பாலியல்
 பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர், ஒட்டுமொத்த பிரித்தானியாவில் மட்டும் வருடத்திற்கு 400,000 பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். சராசரியாக 16 வயது பெண்கூட தான் பாலியல் 
பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டேன் என்று சமூகத்தின் முன்னிலையில் வெட்ட வெளிச்சமாக தெரிவிக்கும் நிலையில் உள்ளது
ஜேர்மனி
ஜேர்மனியில் 240,000 பெண்கள் பாலியல் குற்றங்களால் இறந்துபோயுள்ளனர். இந்நாடு தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிக்கொண்டிருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பிரான்ஸ்
1900 ஆம் ஆண்டு காலம் வரை பிரான்சில் பலாத்காரம் செய்வது என்பது ஒரு குற்றம் கிடையாது. ஆனால் அந்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்த காரணத்தால் 1980 ஆம் ஆண்டுக்கு பிறகு பாலியல் குற்றத்திற்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட்டது. பிரான்சில் 75,000 பாலியல் குற்றங்கள் நடந்தாலும், 10 சதவீதம் புகார்களே பதிவு செய்யப்பட்டுள்ளன.
கனடா
கனடாவில் 2,516,918 பாலியல் குற்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது. 3 இல் 1 பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாவதாக புள்ளியல் விபரங்கள் தெரிவிக்கின்றன. 62 சதவீத பெண்கள் உடல்ரீதியாகவும், 9 சதவீத பெண்கள் தாக்கப்பட்டு உருக்குலைந்து போயுள்ளனர் எனவும் விபரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை
இலங்கையில் போர் முடிந்து 7 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஐநா ஆய்வின்படி, 1.6 சதவீதம் பேர் கும்பலாக சேர்ந்து
 பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். 96.5 சதவீதம் பேர் தொடர்ச்சியாகவே பாலியல் குற்றங்களில்
 ஈடுபட்டு வருகின்றனர். 64.9 சதவீதம் பேர் ஒன்றுக்கும் அதிகமான முறையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். 11.1 சதவீதம் பேர் 4 பெண்கள் அல்லது அதற்கும் அதிகமான பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
எத்தியோப்பியா
பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை சம்பவங்கள் எத்தியோப்பாவில் வருடத்திற்கு 60 சதவீதம் நடைபெறுகிறது. இந்நாட்டில் அதிகமான பெண்கள் கடத்தல் முறையில் பலாத்காரம் 
செய்யப்படுகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 26 டிசம்பர், 2016

பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய 26 வயதான நபர் கைது!

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணொருவரை ஹூங்கம கடற்கரையில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்து 24 மணி நேரத்திற்குள் இந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
61 வயதான நெதர்லாந்து பெண்ணே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 26 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வெளிநாட்டு பெண் பொலிஸ் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமான 119 தொடர்பு கொண்டு தெரியப்படுத்தியதை அடுத்து, ஹூங்கம பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை கைது 
செய்துள்ளனர்.
சந்தேக நபர் அடிக்கடி கடற்கரையில் உலாவும் நபர் என தெரியவந்துள்ளது. பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 2 டிசம்பர், 2016

ஊழியர் ஐபோன்களை திருடி 15 லட்சம் டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளார்!

ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முன்னாள் மூத்த மேலாளர் கிட்டத்தட்ட 5700 ஐபோன்களை திருடி அவற்றை 15 லட்சம் டாலர்களுக்கு விற்பனை செய்திருக்கிறார்.
ஐபோன்களை திருடி விற்பனை செய்த சம்பவத்தில் தைவானைச் சேர்ந்த சாய் என்பவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது சீனாவின் ஷென்சென் பகுதியில் அமைந்திருக்கும் ஃபாக்ஸ்கான் ஆலைகளில் நடந்திருக்கிறது. 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5எஸ் கருவிகளை தயாரிப்பு ஆலைகளில் இருந்து வெளியே எடுத்துச் செல்ல
 எட்டு பேரை நியமனம் செய்து, பின் அவற்றை பல லட்சங்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மொபைல் போன்களை தயாரிப்பதில் பிரபல நிறுவனமாக அறியப்படும் ஃபாக்ஸ்கான் ஆப்பிள் நிறுவன கருவிகளையும் தயாரித்து வருகிறது. கிட்டத்தட்ட 13 லட்சம் பணியாளர்களை கொண்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அந்நிறுவனத்தின் கடுமையான பணி நிபந்தனைகளுக்காக குற்றம்சாட்டப்பட்டது.
ஐபோன்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து ஆப்பிள் நிறுவனம் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 29 நவம்பர், 2016

நியூயோர்க் மற்றும் லண்டன் நகரங்கள் கடலில் மூழ்கும் ஆபத்தில்!

உலகின் பிரபலமான நகரமாக கருதப்படும் லண்டன் மற்றும் நியூயோர்க் எதிர்வரும் சில வருடங்களில் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அன்டார்டிகாவில் உள்ள Pine island glacier தற்போது சேதமடைய ஆரம்பித்துள்ளதாகவும் அது வெகு விரைவில் உருகிடும் எனவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதற்கமைய லண்டன் மற்றும் நியூயோர்க் ஆகிய இரண்டு நகரங்களுக்கு மேல் கடல் நீர் அதிகரிப்பதனால், குறித்த நகரங்கள் இரண்டும் கடலில் மூழ்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அது மாத்திரமின்றி இலங்கை உட்பட உலகின் கடல் மட்டத்தில் குறைவான நிலையில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்த நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் மாத்திரம் அன்டார்டிகாவில் 225 சதுர மைல் பனிப்பாறைகள் கரைந்துள்ளதாக ஒஹியோ அரச பல்கலைக்கழக தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
2013ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரையில் glacier கரைதல் வேகமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 18 நவம்பர், 2016

அதிரடி சோதனையில் 12-வயது பெண் மற்றும் 6வாலிபர்கள் மீது குற்றச்சாட்டு!

கனடா-ரொறொன்ரோவின் வடபகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற  அதிரடி துப்பாக்கி சோதனையில் ஆறு இளவயதினர் மற்றும் 12-வயது பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. பொலிசாரின் அதிரடி 
சோதனையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தமாக 111 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.
 ரொறொன்ரோ பொலிசார் பிறப்பித்த ஒரு தேடுதல் ஆணையுடன் விஞ்ச் அவெனியு கிழக்கு பகுதியில் விக்டோரியா பார்க்கில் அமைந்துள்ள வீடொன்றில் செவ்வாய்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. 12-வயதுடைய பெண் ஒருவர் மீது ஒன்பது துப்பாக்கிகள் குற்றச்சாட்டுக்கள் தடை செய்யப்பட்ட சாதனங்கள் வைத்திருந்தமை
 குற்றச்செயல்கள் மூலம் சொத்துக்களை பறிமுதல் செய்தமை போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. ரொறொன்ரோவை சேர்ந்த 16-வயது பெண் மீது 19-ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்களும் குற்றச்செயல்கள் மூலம் சொத்துக்கள் பறிமுதல் செய்த
 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் இரு 17-வயது வாலிபர்கள் 39-வயதுடைய பெண் ஒருவர் இரண்டு 16வயது பையன்கள் ஆகியோர் மீதும் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. 18-வயதிற்குட்பட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 10 நவம்பர், 2016

கனடா யாழ் இளைஞர்-யுவதிகளுக்குத் தொழில் வாய்ப்பைப் கொடுக்க தயார்.!

கனேடிய வெளிவிவகார அமைச்சின் ஐவாத் குரேசி தலைமையிலான உயர் மட்ட அதிகாரிகளைச் சேர்ந்த மூவரடங்கிய குழுவினர் இன்று(11) யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.
குறித்த குழுவினர் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு விஐயம் மேற்கொண்டு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் அண்மையில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுத் தருவதற்குக் கனேடிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்புக்களை எதிர்காலத்தில் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கூறினார்.
மேலும், இச்சந்திப்பில் யாழ் மாவட்டத்தில் கனேடிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்திச் செயற் திட்டங்கள் மற்றும் யாழ் மாவட்டத்தின் தற்போதைய தேவைப்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 8 நவம்பர், 2016

மது பாவனையில் தென் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம் !

தென் ஆசிய நாடுகளில் அதிகளவு மது பயன்படுத்தும் நாடுகளில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையர்களின் தலா மது பாவனை 3.03 லீற்றர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, உலகில் அதிகளவில் மது அருந்துவோர் வரிசையில் பெலரஸ் பிரஜைகள் முதலிடம் பெற்றுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு அடுத்த படியாக இந்தியா 2ஆம் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக அளவில் மது பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இலங்கை 115ஆம்
 இடத்திலுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 4 நவம்பர், 2016

கிணற்றில் விழுந்த 2 வயது சிறுமியை காப்பாற்றிய இளம் பெண்!

ரஷ்யாவில் 2 வயது குழந்தை ஒன்று எதிர்பாராத விதாமாக ஆழ்துளை கிணற்றில் விழந்துள்ளது. இதை அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சிடைந்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் 
தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் குழந்தையை காப்பாற்றுவதற்காக அருகில் பள்ளம் தோண்டி காப்பாற்ற முயற்சி செய்தும் அது பலன் அளிக்கவில்லை.
இதன் காரணமாக தீயணைப்பு படையினர் அருகில் இருந்த 17 வயது சிறுமியை ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.
அதன் பின் முதன் முறையாக ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுமி இறக்கப்பட்ட சில நிமிடங்களில் மூச்சுத்திணறல் காரணமாக, மேலே கொண்டு வரப்பட்டார். அதைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் அச்சிறுமி உள்ளே இறக்கப்பட்டார்.
ஆனால் இம்முறை அச்சிறுமி, ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவித்த 2 வயது குழந்தையை மேலே தூக்கி கொண்டுவந்து மீட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் அடங்கிய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 24 அக்டோபர், 2016

இலங்கையரும் நூறு பணக்காரர்களில் பிரித்தானியாவின் இணைவு?

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
லண்டனில் பிரபல உணவகங்களை நடத்தி வரும் 53 வயதான டேஸ் குணவர்தன என்பவரே பணக்காரப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள 100 பணக்காரர்களில் இவரும் 
ஒருவராவார்.
லண்டனில் உயர் வகையான உணவகத்தின் 34 கிளைகள் 
மற்றும் நியூயோர்க், பாரிஸ், டோக்கியோ ஆகிய நாடுகளில் பல கிளைகளையும் இவர் நடத்தி வருவதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.
டேஸ் குணவர்தன இலங்கையில் பிறந்த, இங்குள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆரம்ப கல்வியை மேற்கொண்டு பின்னர் பிரித்தானியா சென்று அங்கு வசித்து வருகின்றார்.
பிரித்தானியாவில் மேலதிக கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்ட டேஸ் 1981ம் ஆண்டு கணக்காளராக தொழில் வாழ்க்கை ஆரம்பித்தார்.
அதன் பின்னர் 1991ம் ஆண்டு கொன்ரன் ஹோல்டிங்ஸ் என கூட்டு வர்த்தகத்திற்கு தொடர்புபட்டுள்ளார்.
லண்டனின் கோடீஸ்வர வர்த்தகரான ஸ்ரீமத் டேரன்ஸ் கொன்ரன் என்பவருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில் 11 வருடங்கள் சேவை செய்ததன் பின்னர் உணவகம் ஒன்றின் பகுதியை கொள்வனவு செய்ததனை தொடர்ந்து அதில் இருந்து விலகியுள்ளார்.
டேஸ் குணவர்தன மேலும் ஒரு நண்பருடன் D&D என்ற பெயரில் ஹோட்டல் மற்றும் உணவக வர்த்தகம் ஒன்றை நடத்தி செல்கின்ற நிலையில் உலக புகழ் பெற்ற Pont De La Tour, Blue Pring, Lavceston Place, Sky Low Meea ஆகிய அனைத்து உணவகங்களுக்கும் உரிமையாளர் அவர் என
 தெரியவந்துள்ளது.
அவருக்கு கீழ் 2300 ஊழியர்கள் வேலை செய்யும் நிலையில் அவரது வருடாந்த வருமானம் கிட்டத்தட்ட 100 மில்லியன் பவுன்ட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டில் பிரித்தானியாவின் 100 பணக்காரர்களின் பட்டியலில் டேஸ் குணவர்தனவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக லண்டன் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 18 அக்டோபர், 2016

எலும்புக்கூடுகளுடன் ஒரு விமானத்தின் பாகம் கண்டறியப்பட்டுள்ளது.

தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தெற்கு உபியான் டாவி-டாவி அருகே கடற்கரையோரமாக அமைந்துள்ள காட்டுப்பகுதியில் மலேசிய நாட்டு கொடி வரையப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகளுடன் ஒரு விமானத்தின் பாகம் கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் 8-ம் தேதி கடலில் விழுந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேர் என்ன ஆனார்கள்? என்பது பற்றிய தகவல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. ஆனால், விமானத்தின் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதற்கிடையில் பிரான்ஸின் லா ரீயூனியன் தீவில் கிடைத்த விமானத்தின் வால் பகுதி மாயமான விமானத்தினுடையதுதான் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மின்டானோ தீவில் தெற்கு உபியான் டாவி-டாவி என்ற இடத்தின் அருகே கடற்கரையோரமாக அமைந்துள்ள காட்டுப்பகுதியில் 70 அங்குல நீளமும், 35 அங்குல அகலமும் கொண்ட மலேசிய நாட்டுக் கொடியுடன் கூடிய ஒரு விமானத்தின் பாகம் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த விமான பாகத்தில் பல எலும்புக்கூடுகள் இருப்பதாகவும், சீட் பெல்ட்டுடன் விமானி எலும்புக்கூடாக இருக்கையில் அமர்ந்திருப்பதாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
பறவைகளை வேட்டையாட அந்த பகுதிக்கு சென்ற இருவர் இந்த விமானத்தின் பாகம் கிடைத்த தகவலை உள்ளூர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு விரைந்துசென்ற போலீசார் விமானத்தின் பாகம் விழுந்துகிடக்கும் பகுதியைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி 
வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக, மலேசியா நாட்டில் உள்ள சபா மாகாண போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் பரிமாறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கவனித்து விசாரணை நடத்துமாறு அவர்களுக்கு மலேசிய நாட்டின் போக்குவரத்துத்துறை மந்திரி லியோவ் ஐயாங் லாய் 
உத்தரவிட்டுள்ளர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 17 அக்டோபர், 2016

ஆளில்லா சிறியரக விமானங்கள் மூலம் மருந்து பொருட்கள் விநியோகம்?

ஆளில்லா சிறியரக விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் மருந்து பொருட்களைக் கொண்டுசேர்க்கும் புதிய திட்டமொன்று ருவாண்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மோசமான வீதிகளால் நாட்டின் பலபகுதிகளுக்கு ரத்தம், பிளாஸ்மா உள்ளிட்ட அவசர மருத்துவத் தேவைகள் மற்றும் மருந்து பொருட்களைக் கொண்டு சேர்ப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து ருவாண்டா அரசு இந்த முடிவை 
எடுத்துள்ளது.
ஆனால், தற்போது குறித்த ஆளில்லா சிறியரக விமானங்கள் மூலம், வீதி மார்க்கமாக 4 மணி நேரத்தில் கொண்டுசேர்க்கப்படும் மருந்துப் பொருட்கள் 15 நிமிடத்தில் கொண்டுசேர்க்கப்படுவதாகவும் 
கூறப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த ஜிப் லைன் எனும் சிறியரக ஆளில்லா விமான சேவைகள் வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் இந்த சேவை செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு 
தெரிவித்துள்ளது.
உலக அளவில் வர்த்தகரீதியாக மருந்துபொருட்களை வழங்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையென்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 13 அக்டோபர், 2016

சட்டவிரோதமான பிரான்ஸ் செல்ல முயன்ற தமிழரொருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் பிரான்சுக்கு செல்ல முயன்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சுமார் ஒருவாரத்துக்கு முன்னதாக தனது சொந்த கடவுச்சீட்டில் துருக்கி சென்றடைந்திருந்தார்.
அதன் பின்னர் அங்குள்ள இலங்கை தரகர் ஒருவர் மூலமாக போலி கடவுச்சீட்டில் பிரான்ஸ் செல்ல முயன்ற போது துருக்கிய அதிகாரிகள் அவரைக் கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.
பின்னர் குறித்த நபர் இன்று துருக்கியிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் அவர் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 30 செப்டம்பர், 2016

பாக்., இந்தியா. இடையேஉள்ள பதற்றத்தை தணிக்க சீனா முயற்சி?

பீஜிங்:இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க தொடர்ச்சியாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இரு நாடுகளுடனும் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் சீன வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் கெங் சாங் பீஜிங் நகரில் நிருபர்களிடம் 
தெரிவித்தார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகளை மேம்படுத்தி கருத்து வேறுபாடுகளை களைந்து தெற்கு ஆசிய பிராந்தியத்தின் அமைதியையும், பாதுகாப்பையும் 
உறுதி செய்ய பாடுபடும்
 என்று சீனா நம்புவதாகவும் , இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு சீனா நட்பு ரீதியான அண்டை நாடு. அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் மற்றும் இந்தியா உடன் சீனா தொடர்ச்சியாக பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்றார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஜெர்மனில் அரசியல்வாதி குடியிருப்பிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது !

ஜேர்மன் அரசியல்வாதி ஒருவர் அவரது பர்லின் குடியிருப்பிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை அங்கிருந்து மற்றொருவரது சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரை கொலை செய்து மற்றையவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் 
வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த பைரேட் கட்சியை சேர்ந்த 44 வயதுடைய ஜேர்வோட் க்ளோஸ் புரூன்னர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக பிரதே பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புரூன்னர் குணப்படுத்த முடியாத ஒரு நோயினால் பீடிக்கப்பட்டு இருந்ததாக கட்சி தகவல்கள் தெரிவித்துள்ள போதிலும் இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியிடவில்லை. எனினும் உயிரிழந்த மற்றைய நபர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பர்லின் மாநிலத் தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் பர்லின் நாடாளுமன்றத்திற்கான 15 ஆசனங்களையும் பைரேட் கட்சி இழந்திருந்தது.
இந்நிலையில் குறித்த அறிவிப்பிற்கு முன்னரா அல்லது தோல்விக்கு பின்னரா இந்த உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன என்பது தொடர்பில் தெளிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 12 செப்டம்பர், 2016

பிரான்ஸ்- பிரித்தானியா இடையே அகதிகளை தடுக்க பெருஞ்சுவர்!

அகதிகளை தடுக்கும் முகமாக பிரான்ஸின் வடக்கு பகுதியான கலேவில் பெருஞ்சுவர் கட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
கலே காட்டுப்பகுதிக்குள் தங்கியிருக்கும் அகதிகள், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்கவே இந்த பெருஞ்சுவர் கட்டப்படுவதாக பிரித்தானியா 
குறிப்பிட்டுள்ளது.
4 மீற்றர் உயரமும் 1 கி.மீ நீளமும் கொண்ட மாபெரும் சுவர் எழுப்புவதற்கு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்தே இப்பணிகளை பிரித்தானிய அரசு ஆரம்பித்துள்ளது என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்காக, பிரித்தானிய அரசு சுமார் 2.7 மில்லியன் யூரோக்கள் வரை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டப்பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு பெறுமென 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாட்டிற்கு விரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்
இந்த வருடம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாடு செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் பாரிஸ் நகரில்
 நடைபெற உள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, சி. சிறிதரன், சீ.யோகேஸ்வரன், ஈ.சரவணபவன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்காக பிரான்ஸ் நோக்கி பயணமாக உள்ளனர்.
இன்றைய சூழலில் தமிழ் மொழியும் கலாச்சாரமும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்கும் முகமாக இந்த மாநாடு 
நடாத்தப்படவுள்ளது.
தொடர்ச்சியாக தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கானல் நீராக மாற்றப்பட்டு கொண்டு வருகின்ற இக் காலகட்டத்தில் தமிழ் இளைஞர் இடையே கலாச்சார சீரழிவை உருவாக்கி கொண்டு வரும் இக் காலப்பகுதியில் இம் மகாநாடு மிகவும்
 பிரதானமானதாகும்.
இம்முறை பாரிஸ் 17 La Fourche க்கு அண்மையில் உள்ள சர்ச் மண்டபத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு வெகு சிறப்பாக இடம் பெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள்
 தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, மொறிசியஸ், றியூனியன், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தரும் தமிழ்ப் பேராளர்கள் பலர் குறித்த மாநாட்டில் கருத்துரை வழங்கவுள்ளனர்.
மேலும் தமிழரின் வரலாற்றுத் தொன்மைகள் பற்றிய ஆய்வரங்கம், பிரபல கவிஞர்கள் பங்கு கொள்ளும் கவியரங்கம், அரங்கமும் அதிர்வும் எனும் பல்சுவை நிகழ்வுகள் போன்றவற்றுடன் நடனம், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், நாட்டுக்கூத்துகள் என தமிழர் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணக் கண்காட்சியுடன் விழாவின் சிறப்புமலர் வெளியீடும் இடம்பெறவுள்ளது.
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் துரை. கணேசலிங்கம், தலைவர் வி. சு. துரைராஜா, மாநாட்டு செயலாளர் ம. இரவீந்திரநாதன், மாநாட்டின் தலைவர் இ. க அரியரத்தினம் போன்றோர் உட்பட உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து இந்த மாநாட்டிற்கு அனைவரையும் அழைக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 6 செப்டம்பர், 2016

இருபத்தொரு கய்திகள் எத்தோப்பிய சிறைச்சாலையில் தீவிபத்து பலி!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோபியாவின் தலைநகர் அருகில் குயிலிண்டோ சிறைச்சாலையில் ஆயிரக்கணக்கான கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சிறையில் இருக்கும் கைதிகள் அரசுக்கு எதிராக போராட்டம் மற்றும் சிறைக்குள் பல்வேறு கலவரங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று சிறைச்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இத்தீவிபத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பி விட்டனர். இவ்விபத்தில் சிக்கி 21 கைதிகள் உடல் கருகி பலியாகியுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இறந்தவர்களின் உடல்களை இதுவரை வெளிப்படையாக அதிகாரிகள் காட்டவில்லை என தகவல்கள்
 வெளியாகியுள்ளது.
மேலும், சிறையில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக கைதிகளை அதிகாரிகளே துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டதாகவும் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், சிறையில் தீவிபத்து ஏற்பட்டது போல் அங்கிருந்து கரும்புகை வெளியாவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் பரவி வருகிறது என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 27 ஆகஸ்ட், 2016

கடற்கரையில்தமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி! பாதுகாப்பு அதிகரிப்பு


பிரித்தானிய கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரையில் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடற்கரை பகுதியில் ஐந்து இலங்கைத் தமிழ் இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன் கிழமை குறித்த கடற்கரைக்குச் சென்ற கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோர் புதைமணலில் சிக்கி 
உயிரிழந்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் குறித்த கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ராதர் கவுன்சில் அறிவித்துள்ளது.
அங்கு வரும் மக்களுக்கு உறுதியளிக்கும் நோக்கிலும், அவர்களுக்கு பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கவும் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் அங்கு நிறுத்தப்படுவதாக அந்தக் கவுன்சில்
 தெரிவித்துள்ளது.
இதேவேளை, கேம்பர் கடற்கரையில் போதிய உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் இல்லை என உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் விமர்சனம் செய்துள்ளன.
குறித்த கடற்கரை பாதுகாப்பானது என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என ராதர் கவுன்சில் உறுப்பினர் சாலி ஆன் ஹார்ட் 
கூறுகிறார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

கோட்டை புகையிரத நிலையத்தில் நெதர்லாந்தின் இளம் தம்பதிகள்! கைது

நெதர்லாந்தின் இளம் தம்பதிகள் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் வகுப்பு டிக்கட்டுடன் சிலாபம் கோட்டை புகையிரத முதலாம் வகுப்பில் பயணம் செய்தமைக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முதலாம் வகுப்பு சொகுசு உறங்கும் அறையை கொண்ட இவர்கள் பொலிஸார் பல முறை முயற்சித்தும் கூட அறையை திறக்காதமையால் புகையிரதம் தாதமானது.
இந்த நிலையிலேயே குறித்த தம்பதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

சட்டத்தை மீறி ஆஸி செல்லமுற்பட்ட இலங்கை யர்கள் கைது


குடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறி அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சி 17 இலங்கை யர்களை, மட்டக்களப்பு வடக்குக் கடற்பிராந்தியத்தில் வைத்து, நேற்று திங்கட்கிழமை (15) கடற்படையினர் 
கைதுசெய்துள்ளனர்.
நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்திலிருந்து புற ப்பட்ட குறித்த நபர்கள், நீண்ட நாட்களாகப் படகில் தங்கியிருந்ததாகத் தகவல்கள் 
தெரிவிக்கி ன்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

6 ஆண்டுகள் 10 வயது சிறுமியை மிரட்டி தொடர் பாலியல் பலாத்காரம்!

இங்கிலாந்தில் 16 வயது சிறுமியை 6 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 19 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது.
இங்கிலாந்தில் லண்டன் அருகேயுள்ள படோபில் பகுதியை சேர்ந்தவர் கெய்த் டவுனென்டு. இவர் 10 வயது சிறுமியை 6 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
இது குறித்து அந்த சிறுமி பொலிஸில் செய்த முறைப்பாடினை தொடர்ந்து, அவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட கெய்த்துக்கு 19 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியை பல்வேறு காரணங்களை கூறி மிரட்டி தினசரி இருமுறை அந்த நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார்.
சிறுமி 10 வயதாக இருக்கும் போதே அந்த நபர் தமது கட்டுப்பட்டுக்குள் சிறுமியை கொண்டு வந்துள்ளதாகவும் இது 16 வயது வரை தொடர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கூறிய இளம் பெண், தமது குழந்தை பருவத்தை அந்த நபர் சூறையாடியதாக கூறிய அவர், தினசரி இருமுறை தம்மை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமது வாழ்க்கையின் முக்கிய காலகட்டம் அத்தனையும் நரகத்தில் கழிந்துள்ளதாகவே தாம் தற்போது உணர்வதாகவும், அந்த நபர் சிறையில் இருப்பதால் இனி தமது எதிர்காலம் குறித்து சிந்திக்கலாம் என தெரிவித்துள்ளார்
வேலை நிமித்தமாக அந்த நபரின் மனைவி பெரும்பாலும் வெளியே சென்று விடுவதால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி 10 வயதேயான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
சில சமயங்களில் நள்ளிரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் தம்மை வலுக்கட்டாயமாக எழுப்பி உறவு வைத்துக்கொள்ள நிர்பந்தித்துள்ளதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 3000 முறை தம்மை அவர் பலாத்காரம் செய்திருப்பார் எனவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
தமக்கு நேர்ந்த கொடுமைகள் பலவும் வெளியே சொல்ல முடியாதது எனவும், அந்த நினைவுகளில் இருந்து மீண்டு புது வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதே தமது குறிக்கோள் என தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

ஆயுதங்களுடன் மர்ம நபர் ஜேர்மனி உணவகத்தில் பதற்றம்!

ஜேர்மனி நாட்டில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்குள்ளவர்களை பணையக்கைதிகளாக வைத்துள்ளதால் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியில் உள்ள Saarbruecken நகர் உணவகம் ஒன்றில் சற்று முன்னர் ஆயுதம் ஏந்திய மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்குள்ளவர்களை சிறை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், உணவகத்தில் இருந்து சில ஊழியர்கள் தப்பி வெளியேறியுள்ளனர்.
மேலும், எந்த நேரத்திலும் உணவகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இச்செய்தி உறுதி செய்யப்பட்டதும் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் பொலிஸார் உணவகத்தை சுற்றி குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், பொலிஸார் உணவகத்திற்குள் நுழைந்தபோது, அங்கு கீழ்த்தளத்தில் ஆயுதம் ஏந்தியதாக கூறப்பட்ட நபர் தூங்கிக்கொண்டு இருந்ததை பொலிஸார் கண்டு அவரை கைது செய்தனர்.
மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், உணவக உரிமையாளரின் உறுவினர் என்றும் தெரியவந்துள்ளது. ஜேர்மன் நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இவ்விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 30 ஜூலை, 2016

தமிழர்வளத்த நாய்க்கு கனடாவில் மரண வீடு நடத்தியுள்ளார்.!

குழந்தைகளைப் போல நாய், பூனை, மீன்கள் என வீட்டு மிருகங்களையும், செல்லமாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் பலர் .அதிலும் குறிப்பாக, நாய்கள், பல வீடுகளில் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே வலம் வருவதைப் பார்க்க முடிகிறது.
தமிழர்களும் இதில் குறைந்தவர்கள் அல்ல , நாய் நன்றியுள்ள மிருகம் ,போன்ற அடைமொழிகளிலிருந்து பல குழந்தை கதைகளும் நாய்கள் பற்றி தமிழில் உள்ளன. தமிழர்களுக்கு ஒரு நாடு ஓன்று இல்லை தவிர , தமிழர்கள் புலம் பெயர்ந்தாலும் அந்த நாய் பாசம் குறையவே 
இல்லை
இவற்றுக்கு சிகரம் வைத்தால் போல் நேற்று கனடியத் தமிழர் ஒருவர் தனது செல்லப் பிராணியான வளர்ப்பு நாய்க்கு அதன் ஈமைக் கிரிகைகளை இந்து முறைப்படி, அதற்கு வெட்டி உடுத்து ,ஈமைக் கிரிகைகள் நடத்தும் ஐயரை அழைத்து அதன் மரணச்சடங்கு நிகழ்வை நடத்தியுள்ளார்,அதன் ஆத்மா சாந்திக்காக நிகழ்த்திய மரணச்சடங்கு நிகழ்வுகள் 
நடத்தப் பட்டதாம்… 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




வெள்ளி, 29 ஜூலை, 2016

வெளியேற்றப்படுவார்கள்.தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள்

ஜெர்மனிக்கு வந்து தஞ்சம் கோரி, அக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால், விண்ணப்பித்த குடியேறிகள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படவேண்டும் என்று ஜெர்மனியின் மாகாணமான, பவேரியாவின் உள்துறை அமைச்சர், ஜோச்சிம் ஹெர்மான் கூறியிருக்கிறார்.
தஞ்சம் கோரிகளின் சொந்த நாடுகளில் போர் நடந்து கொண்டிருந்தால் கூட , அவர்கள் வெளியேற்றப்படவேண்டும் என்று 
அவர் கூறினார்.
தனது பவேரியா மாகாணத்தில் நடந்த பல இஸ்லாமியவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் பேசிய ஹெர்மன், தேவைப்பட்டால், இதைச் செய்ய ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை மாற்ற வேண்டும் என்றார். இந்த சட்டங்கள் ஒரு சில அகதிகளை நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதிலிருந்து தடுக்கின்றன.
பவேரியா மாகாணத்தின் பிரதமரும், ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்க்கலின் நீண்ட கால விமர்சகருமான, ஹொர்ஸ்ட் சீஹோஃபர் , ஜெர்மனியின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவேண்டும் என்று 
கூறியுள்ளார்.
ஜெர்மனியில் கடந்த வாரம் நடந்த நான்கு தாக்குதல் சம்பவங்களில் மூன்று தஞ்சம் கோரிகளால் நிகழ்த்தப்பட்டவை என்பது
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>