Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 30 அக்டோபர், 2018

நியூசிலாந்தில் 6.2 ரிச்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


..நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நியூசிலாந்தின் டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 சுமார் 165 கிலோமீற்றர் பூமிக்கு அடியில் குறித் நிலநடுக்கம் 6.2  ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டன் பகுதி சுமார் 30 வினாடிகள் வரை  அதிர்ந்ததாகவும் நாட்டின் பாராளுமன்ற நடவடிக்கைகள் இதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாகவும் நியூசிலாந்து ஊடகங்கள்  தெரிவித்துள்ளன. 

 இதேவேளை நியூசிலாந்தின் வடக்கு தீவு மற்றும் தெற்கு தீவு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ள போதிலும் இதனால்  எவ்விதானமான உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை.

 குறித்த நிலநடுக்கத்தால் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




திங்கள், 29 அக்டோபர், 2018

இந்தோனேசியாவில் 188 பேருடன் காணாமல்போன பயணிகள் விமானம்

ஜகார்த்தாவில் இருந்து இன்று காலை புறப்பட்ட இந்தோனேசிய பயணிகள் விமானம் கடலில் விழுந்தது என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் 178 பெரியவர்கள், 1 குழந்தை, இரண்டு கைக்குழந்தைகள், 2 விமானிகள், 5 விமானப் பணியாளர்கள் உட்பட 188 பேர்
 இருந்துள்ளனர்.
ஜெடி-610 என்ற எண்ணுடைய இந்த விமானம் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பன்ங்கால் பினாங் நகரத்துக்கு சென்று கொண்டிருந்தது.
இது பாங்கா பெலீடூங் தீவின் முக்கிய நகரம்.
இழுவைப் படகு ஒன்று விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பதைப் பார்த்ததாக இந்தோனீசிய துறைமுக அதிகாரி சுயாதி என்பவர் கூறியதாக இந்தோனீசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை 6.20க்கு (கிரீன்விச் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை 23.30) இந்த புறப்பட்ட இந்த விமானம் 'போயிங் 737 மேக்ஸ் 8' வகையைச் சேர்ந்தது. இந்த மாடல் விமானங்கள் 2016-ம் ஆண்டு முதல்தான் பயன்பாட்டில் உள்ளன.
விமானம் விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமையின் செய்தித் தொடர்பாளர் யூசூஃப் லத்தீஃப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.விமானத்துக்கு என்ன ஆனது என்பது குறித்து தங்களுக்கு இன்னும் தெரியவில்லை என 'லயன் ஏர்' விமான நிறுவன அதிகாரி ஒருவர் முன்னர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த நிறுவனம் இந்தோனீசியாவை மையமாக வைத்து
 செயல்படும், குறைந்த கட்டண விமான 
நிறுவனம் ஆகும்.
எல்லா தகவல்களையும் திரட்டிவருவதாகவும், தற்போது எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது என்றும் அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எட்வார்ட் சிரய்ட் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் 
தெரிவித்துள்ளா
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>