Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

இந்திய பெண் சர்வதேச நிதியத்தின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக நியமனம்

ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியத்தின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது, சர்வதேச நிதியத்தில் 2-வது இடத்தில் உள்ள உயர் பதவியாகும்.
உலகப் பொருளாதாரத்துக்கு உதவுவதில் கீதா கோபிநாத்தின் அறிவுபூர்வமான தலைமையை அங்கீகரிக்கும் வகையிலும், பொருளாதார 
மந்த நிலையில் இருந்து உலகத்தை விடுவிக்க பாடுபட்டதற்காகவும் அவருக்கு இந்த பதவி அளிக்கப்படுவதாக ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.
கீதா கோபிநாத் ஏற்கனவே சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக 3 ஆண்டாக பணியாற்றியவர். இவர் அமெரிக்கா வாழ் இந்திய பெண்மணி ஆவார். அப்பதவியை வகித்த முதலாவது பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




செவ்வாய், 16 நவம்பர், 2021

டோக்கியோவில் செயற்கையாக பூமிக்கடியில் நீர் சேமிப்பு தொட்டிகள்

உலகெங்கும் நகரங்கள் உருவானபோது பல நாடுகளிலும் இதுபோன்ற இயற்கை அழிப்புகள் நடந்து இருக்கின்றன. அதற்கு அந்த நாடுகள் தற்போது தீர்வும், பரிகாரமும் தேடிக்கொண்டு இருக்கின்றன. இயற்கையை அழித்து விட்டு, அவற்றை செயற்கையாக தற்போது உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்.
பூமிக்கடியில் நீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ராட்சத சுரங்கப்பாதை அதற்கு உதாரணமாக ஜப்பான் நாட்டை எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் மழையால் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ நகரம் மிகுந்த பாதிப்பு அடைந்து வந்தது. அங்குள்ள வீடுகள் எல்லாம் பல நாட்கள் நீரில் மிதக்கும். அதற்கு அவர்கள் கண்ட தீர்வுதான் பூமிக்கடியில் நீர் வெளியேற்றும் வாய்க்கால் திட்டம்.
டோக்கியோவின் மேல்பரப்பில் இருந்த வாய்க்கால், நீர்நிலைகள் எல்லாம் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் எழும்பி விட்டன. அதனால் அவர்கள் செயற்கையாக பூமிக்கடியில் 50 மீட்டர் ஆழத்தில் மழை நீர் செல்லும் மிகப்பெரும் சுரங்கத்தை (செயற்கை வாய்க்கால்) உருவாக்கினர். இந்த சுரங்கத்தின் முடிவில், பூமிக்கடியில் மிகப்பெரும் நீர் சேமிப்பு 
தொட்டிகளை கட்டினர்.
இந்த தொட்டிகள் 6 கால்பந்து மைதானம் அளவு கொண்டது. சுரங்கத்தின் வழியாக வரும் மழை நீர், சேமிப்பு தொட்டியில் வந்து சேருகிறது. பின்னர் இந்த சேமிப்பு தொட்டியில் இருக்கும் நீர், ராட்சத குழாய்கள் மூலம் பம்பிங் செய்யப்பட்டு அதன் அருகில் உள்ள எடவா ஆற்றில் 
வெளியேற்றப்படுகிறது.
சேமிப்பு தொட்டிகளில் இருந்து ஒரு நிமிடத்திற்கு 7 ஆயிரம் கன அடி நீரை ஆற்றில் வெளியேற்றுகிறார்கள்.ர் சேமிப்பு தொட்டியில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் காட்சி
இந்த திட்டத்தின் மூலம் தற்போது மழை வெள்ள பாதிப்பில் இருந்து டோக்கியோ நகரம் முழுமையாக தன்னை காத்து கொள்கிறது. வெள்ள பாதிப்பில் இருந்து தப்பித்தல் மற்றும் மழை நீரை முழுவதுமாக சேகரித்தல் என ஒரே கல்லில் இரண்டு மாங்காயை இந்த திட்டத்தின் மூலம் செய்து வெற்றி பெற்று இருக்கிறது ஜப்பான்.
நீர் சேமிப்பு தொட்டிக்கு செல்லும் நுழைவுவாயில் இந்த திட்டம் 1992-ம் ஆண்டு தொடங்கி 2006-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதற்காக செலவான தொகை இந்திய மதிப்பில் ரூ.15 ஆயிரம் 
கோடி ஆகும்.
மழை வெள்ளத்தில் இருந்து பூமிக்கடியில் கட்டப்பட்ட சேமிப்பு தொட்டி தங்களை காப்பதால் ஜப்பான் மக்கள் அதனை பூமிக்கடியில் ஒரு கோவில் என்றுதான் சொல்கின்றனர்.  ஜப்பானின் இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்கா உள்பட பல நாடுகளும் பின்பற்றி வருகின்றன.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வியாழன், 4 நவம்பர், 2021

கொவிட்டுக்கு பலனளிக்கிறது மன நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து

மனநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மலிவான மற்றும் பரவலாகக் கிடைக்கும் மருந்தான Fluoxetine, கொவிட்-19 வைரஸால் ஏற்படும் மரண அபாயத்தையும், தீவிர மருத்துவ சிகிச்சையின் அவசியத்தையும் குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
‘தி லான்செட்’ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவர் ஜீவந்தர இத்தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆய்வில் பங்கேற்றவர்களிடையே கொவிட்-19 இறப்பு வீதம் 90ஆகக் குறைந்துள்ளது மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சையின் தேவை 65 வீதம் குறைந்துள்ளது.
மனச்சோர்வு மற்றும் பிற உளக்கோளாறு நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க Fluoxetine பயன்படுத்தப்படுகிறது.
பிரேஸிலில் கொவிட்-19 நோயை உருவாக்கும் அதிக ஆபத்துள்ள 1,497 பேர் இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 8 அக்டோபர், 2021

ஒரு நாள் பிரதமராக பின்லாந்து நாட்டில் பதவி வகித்த 16 வயது சிறுமி

பின்லாந்து நாட்டில் 16 வயதான சிறுமி ஒரு நாள் பிரதமராக பதவி வகித்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான பின்லாந்தில் கடந்த புதன்கிழமை 16 வயதான சிறுமி நெல்லா சால்மினென் (Nella Salminen) ஒரு நாள் பிரதமராக 
பதவி வகித்துள்ளார்.
உலகிலுள்ள இளம்பெண்களை ஒருநாள் அரசு அல்லது வியாபாரத்தில் தலைமை பொறுப்பை ஏற்க வைக்கும் பிரசார திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நெல்லா சால்மினென், காலநிலை மாற்றங்கள், மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதேபோல் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி 
ஐ.நா மகளிர் தினத்தை முன்னிட்டு, உகண்டாவின் 
கல்வி அமைச்சர், சுவிஸர்லாந்து மத்திய ஆலோசகர் மற்றும் பல 
முக்கிய இந்தோனேசிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் தமது பொறுப்புகளை இளம்பெண்களுடன் பகிர்ந்து 
கொள்ள உள்ளனர்.
மேலும் பின்லாந்து அரசாங்கத்திற்கு 36 வயதான பிரதமர் சன்னா மரின் தலைமை தாங்கி வருகிறார். அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது 34 வது வயதில் ஆட்சி பொறுப்பை ஏற்ற உலகின் மிக இளைய பெண் அரசியல்வாதி என்ற பெருமையை பெற்றார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 28 செப்டம்பர், 2021

அடுக்குமாடித் தொடரில் சுவீடன் நாட்டில் திடீர் வெடிவிபத்து

 சுவீடன் நாட்டின் தென்மேற்கு நகரான கோத்தன்பர்க்கில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 பேர் வரையில் காயடைந்துள்ளனர்.
அடுக்குமாடி மற்றும் ஜன்னல்களிலிருந்து சாம்பல் புகை வெளியேறியதால் தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்திலிருந்து மக்களை வெளியேற்றி 
வருகின்றனர். 
இந்த சம்பவத்தில் 20 முதல் 25 பேர் வரை காயமடைந்துள்ளனர்.  3 பேர் வரை பலத்த காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
குண்டுவெடிப்பினை தொடர்ந்து பல்வேறு கட்டிடங்களுக்கும் தீ பரவியுள்ளது.  இதனை தொடர்ந்து 100 முதல் 200 பேர் வரை அந்த கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இந்த வெடிவிவத்தில் குண்டு வைத்து வெடிக்கப்பட்டதா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை 
நடத்திவருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>


வியாழன், 16 செப்டம்பர், 2021

வெளிநாட்டு வேலைவாய்ப்பு இலங்கை வாழ் இளைஞர்களுக்கு

ஜப்பானிய அரசாங்கம் இலங்கை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க உடன்பட்டுள்ளது.ஜப்பானில் விவசாயப் பண்ணைகளில் ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க ஜப்பானிய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சு
 தெரிவித்துள்ளது.
அடுத்த இரு வாரங்களுக்குள் இது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் குணசேகர தெரிவித்தார். இன்று காலை விவசாய அமைச்சுடன் ஸூம் கலந்துரையாடலில் பேசும் போது அவர் இதைத் தெரிவித்தார்.
ஜப்பானில் 1,000 இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தலையிட்டமைக்காக ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவருக்கு விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நன்றி 
தெரிவித்துள்ளார்.
இந்த வேலை வாய்ப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து தேவையான மொழிப் பயிற்சி மற்றும் பிற தொடர்புடைய பயிற்சித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 26 ஜூன், 2021

அவுஸ்ரேலியாவில் நடேசன் - பிரியா தம்பதிக்கு இணைப்பு வீசா

 அவுஸ்ரேலியாவில் நிர்கதியாகியுள்ள இலங்கைத்தீவைச் சேர்ந்த நடேசன் - பிரியா தம்பதிக்கு அந்நாட்டின் இணைப்பு வீசா வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லேண்ட் - பிலோயிலா (BILOELA) நகரில் வசித்து வந்த இவர்களை, வீசா காலம் நிறைவடைந்த நிலையில் 2018ம் ஆண்டு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் அதற்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் நிமித்தம் வழக்கு விசாரணை வரையில் கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஏதிலிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களது இளைய மகள் சுகவீனமற்று பேர்த் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே பிரியா - நடேஸ் குடும்பத்தின் 4 பேரும் 
3 மாதங்களுக்கு பேர்த் நகரில் தங்கி இருப்பதற்கான இணைப்பு வீசா வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீசாவின் மூலம் சுகாதாரம், வீடு, தொழில் வசதிகள் அவர்களுக்கு வழங்கப்படும். அவர்களது வீசா உரிமை தொடர்பான நிலைப்பாட்டில் இன்னும் எந்த மாற்றமும் 
செய்யப்படவில்லை.
அவர்கள் அங்கிருந்த படி வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர்
 தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

வியாழன், 3 ஜூன், 2021

வேலிகளுக்கு அடியே குழித்தோண்டி செல்லும் புலம்பெயர்ந்தவர்கள்

தாய்லாந்து- மலேசிய எல்லையில் தாய்லாந்தின் Songkhla  மாகாணத்தில் உள்ள Sadao மாவடத்தில் 7 சட்டவிரோத வழிகளை தாய்லாந்து எல்லை ரோந்து படையினர் கண்டறிந்துள்ளனர். 
மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் நுழையும் தாய்லாந்து நாட்டவர்களும் புலம்பெயர்ந்தவர்களும் இவ்வழிகளை பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகின்றது. 
Sadao மாவட்டத்தில் உள்ள 85 கி.மீ. எல்லையில் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கக்கூடிய 7 இடங்களை தாய்லாந்து அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக Songkhla மாகாண ஆளுநர்  Jaruwat Kliangkla
o தெரிவித்திருக்கிறார். 
கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக எல்லையில் தொடர்ந்து ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பலர் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கக்கூடிய நிலை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எல்லைப்புற வேலிகளைக் கடக்கும் விதமாக வேலிகள் மீது ஏணிகள் அல்லது மரக்கட்டைகளை பயன்படுத்தியும் இன்னும் சில இடங்களில் வேலிகளை வெட்டியும் சில இடங்களில் வேலிகளுக்கு அடியில குழித்தோண்டியும் பலர் எல்லைகளை கடந்திருப்பதிருப்பதாக தாய்லாந்தின் Songhkla மாகாண ஆளுநர்  Jaruwat Kliangklao 
தெரிவித்துள்ளார்.  

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>


ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

தடுப்பு முகாமிலிருந்து தப்ப சுரங்கப்பாதை:ஆஸ்திரேலிய அகதி

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் சுமார் 5 ஆண்டுக்காலம் வைக்கப்பட்டிருந்த நிலையினால் இன்றும் மன நலச் சிக்கல்களுக்கு ஆளாகி வருவதாக ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள ஈரானிய அகதி Payam Saadat தெரிவித்திருக்கிறார். இதனால் சுரங்கப்பாதைத் தோண்டி தடுப்பிலிருந்து தப்பிக்க அவரும் பிற அகதிகளும் முயன்றிருந்தாக நீதிமன்றத்திடம் அவர் தெரிவித்திருக்கிறார். 
இவர்கள் சுரங்கப்பாதைத் தோண்டியது பின்னர் கண்டறியப்பட்ட போதிலும், அதற்கு முன்னதாக 4 வாரங்கள் வரை சுரங்கப் பாதைத் தோண்டியதை நீதிமன்றத்திடம் ஈரானிய அகதி 
குறிப்பிட்டிருக்கிறார். 
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவை வந்தடைந்த ஈரானிய அகதியான Payam Saadat, ஆஸ்திரேலிய தடுப்பில் வைக்கப்பட்டிருந்த 5 ஆண்டுக்காலத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாகவும் அதன் தொடர்ச்சியாக மனநலச் சிக்கல்களை இன்றும் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். 
29 நாட்கள் படகு வழிப் பயணம் மூலம் ஆஸ்திரேலியாவை அடைந்த அவர், 2000 முதல் 2002 வரை மேற்கு ஆஸ்திரேலியாவின் Curtin குடிவரவுத் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். பின்னர் சுமார் 3 ஆண்டுக்காலம் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Baxter தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார். 
இவ்வாறான சூழலில், ஆஸ்திரேலிய அரசு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களை நிர்வகித்த வந்த 2 தனியார் நிறுவனங்கள் மீது தற்போது ஈரானிய அகதியான Payam Saadat வழக்குத் தொடுத்திருக்கிறார். அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் மட்டத்தில் முக்கியமானதாக அணுகப்படும் இவ்வழக்கின் தீர்ப்பு, ஈரானிய அகதிக்கு ஆதரவாக வரும் பட்சத்தில் மேலும் பல அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர நேரிடும் எனக் கருதப்படுகின்றது. 
ஈரானிய அகதி தொடர்ந்த வழக்கின் விசாரணை அடுத்த 12 வாரங்களுக்கு நடைபெறும் என எண்ணப்படுகின்றது. 
“நாங்கள் மிகுந்த கவலையுடன் இருந்தோம். மோசமான உடல்நிலையுடன் இருந்தோம். எதாவது நல்லது நடக்கும் என்ற வாய்ப்பே இல்லாமல் இருந்தது. அதனால் சுரங்கப்பாதைத் தோண்டி தப்பிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்,” எனத் தெரிவித்திருக்கிறார் Paayam Sadaat 
எனும் ஈரானிய அகதி. 
இவ்வாறு சுரங்கப்பாதைத் தோண்டி தப்புவது கடுமையானது என்பதை அறிந்திருந்தாகக் கூறும் ஈரானிய அகதி, நாங்கள் எதிர்கொண்ட மோசமான நிலை மற்றும் வலிக் காரணமாகவே இவ்வாறு செய்தோம் எனக் கூறியிருக்கிறார். 
நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 27 பிப்ரவரி, 2021

அழகை மெருகூட்ட ஊசி போடச் சென்ற இளம் யுவதிக்கு நடந்த கதி

தனது சரும அழகை மெருகூட்ட ஊசி ஏற்றிக் கொள்ள சென்ற யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு 5 திம்பிரிகஸ்யாய பகுதியை சேர்ந்த வைத்தியர் ஒருவரே பொலிசாரால் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் கொழும்பு மேலதிக நீதிவான் சலனி பெரேரா முன்னிலையில் அவர் முற்படுத்தப்பட்டார்.நாரஹேன்பிட்டியை சேர்ந்த 26 வயதான யுவதியே இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.ஜனவரி 15 பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடளித்துள்ள யுவதி, சரும அழகை
 மெருகூட்டும் ஊசியை ஏற்றுவதற்காக வைத்தியரிடம் சென்றுள்ளார். இதன்போது ஊசியின் விலை தொடர்பில் விசாரித்த போது,அது 10,000 ரூபா தொடக்கம் 35,000 ரூபா வரை உள்ளதாக 
வைத்தியர் தெரிவித்துள்ளார்.ஊசியின் விலையை குறைப்பது பற்றி வைத்தியருக்கும் யுவதிக்குமிடையில் தொடர்ந்து பேச்சு நடந்துள்ளது.
இதன்போது, இருவருக்குமிடையில் தொலைபேசியில் தொடர்பு ஏற்பட்டது.இதையடுத்து, குறைந்த விலையில் ஊசியை செலுத்துவதாக தெரிவித்த வைத்தியர், யுவதியை வீட்டுக்கு 
அழைத்துள்ளார்.வீட்டில் வைத்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் 2,000 ரூபா கொடுத்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.இதன் பின்னர், சுமார் 15 தடவைகள் வைத்தியர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், 5 இலட்சம் ரூபா வீதம் இரண்டு சந்தர்ப்பங்களில் 10 இலட்சம் ரூபாவை தனக்கு தந்துள்ளதாகவும் யுவதி குறிப்பிட்டுள்ளார்.தன்னை
 துஷ்பிரயோகம் செய்த காட்சிகள், சிசரிவி கமராவில் பதிவாகியுள்ளதாகவும், அவை தவறான வழியில் பயன்படுத்தப்படும் அபாயமுள்ளதால், யுவதி முறைப்பாடு செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்.வைத்தியரை 2 இலட்சம் ரூபா சரீர பிணையில் நீதிமன்றம்
 விடுவித்தது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 22 ஜனவரி, 2021

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் தீ விபத்து!

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவன கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டு உள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி வெளியாவதில் எந்தவித சிக்கல்களும் இல்லை என அந்நிறுவனம் 
தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசி நாடு முழுவதும் 
போடப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிற்காக கட்டப்படும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இந்த தீ விபத்தினால் கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தியை பாதிக்காது என்று தடுப்பூசி நிறுவனத்தின் நெருக்கமான வட்டாரம் 
தெரிவித்துள்ளது.
புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் முனைய வாயில்-1 க்குள் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டு மள மள வெனபரவியது.
10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 4 ஜனவரி, 2021

அபாயகரமான கொடிய வைரஸ். எபோலாவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்

கடந்த ஒரு வருடமாக சீனாவில் உருவான கொரோனா வைரஸால் உலகமே பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வந்தது. வாழ்வாதாரம், பொருளாதாரம் என பல கட்டங்களாக இழப்பை சந்தித்த மனிதர்கள், பலர் தங்களுக்கு பிரியமானவர்களையும் கொரோனாவால் இழந்தனர்.
இதனால், தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி 
பல்வேறு சிரமங்களைக் கடந்து தற்போது சாத்தியமாகி தடுப்பூசிகள் போடப்பட தொடங்கியுள்ளன. இப்படி தற்போது அனைவரும் மெல்ல மெல்ல மீண்டும் வரும் நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக வெளியான தகவலும், மேலும் கிறுகிறுக்க வைத்தது. 
இதனிடையே அண்மையில் ஆந்திராவில் எபிலெப்ஸி, கேரளாவில் ஷாகில்லா முதலான வைரஸ்கள் மீண்டும் பரவத் தொடங்கி மக்களை பதற்றத்துக்குள்ளாகினர்.இந்த நிலையில் தான், 1976ல் எபோலா தொற்று நோயை கண்டறிவதில் முக்கிய பங்காற்றிய 
மருத்துவர் மற்றும் பேராசியர் Dr Jean-Jacques Muyembe Tamfum மனிதகுலம் அபாயகரமான புதிய வைரஸை மீண்டும் எதிர்கொள்ள 
இருப்பதாக கூறி இருக்கிற தகவல் அனைவரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் இருந்து புதிய மற்றும் மனித குலத்துக்கு 
அபாயகரமான விளைவுகளை உண்டு செய்யக்கூடிய வைரஸ்கள் உருவாகி உள்ளதாக கூறிய இவர் இந்த வைரஸ்கள் மனிதகுலத்திற்கு மொத்தமாக பேரழிவை உண்டாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா பெருந்தொற்றை விடவும் இப்போது உருவாகி 
உள்ள இந்த வைரஸ் மிகவும் அபாயகரமானது என்று கூறிய இவர் மிக விரைவில் இந்த வைரஸ் பரவக் கூடியது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் விசித்திரமான அறிகுறிகளுடன் விலங்குகளிடம் இருந்து பரவியிருக்கலாம் என 
கருதப்படும் இந்த நோயால் காங்கோ நாட்டில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், முதலில் அவருக்கு எபோலா பாதிப்பு இருக்கலாம் என்று கருதி 
அவருக்கு பரிசோதனையை மேற்கொண்ட போது, அவருக்கு எபோலா இல்லை என்பது உறுதியாகியதாகவும், அதேசமயம் மருத்துவ
 உலகம் அஞ்சுவது போன்ற ஒரு நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.இதனை அடுத்து, அவருக்கு 
அபாயகரமான தொற்று இருக்கலாம் என்றும் கருதப்பட்டது.எனவே இந்த நோயாளி பாதிக்கப்பட்டுள்ளது பெயரிடப்படாத அந்த அபாயகரமான தொற்று நோயால்தான் என்றும், இது ஒரு 
அனுமானம் மட்டுமே என்றாலும் கூட , அது நிகழ்ந்தால் உலகம் முழுவதற்கும் பெரிய அழிவுக்கு அது வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுவதாகவும் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>