Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 25 ஜூலை, 2022

நாட்டிலிருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து

நாட்டிலிருந்து லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு செல்லும் சில விமானங்களை தொடர்ந்தும் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 
அறிவித்துள்ளது.
 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்

விமான நிலையத்தில் பணியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து லண்டனுக்கான இரண்டு விமானங்களும், லண்டனிலிருந்து கொழும்புக்கான இரண்டு விமானங்களும் கடந்த மூன்று வாரங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாளாந்தம் லண்டனுக்கு ஒரு விமானம் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த ரத்துகளின் விளைவாக, ரத்து செய்யப்பட்ட விமான பயணிகளுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாகவும், அவர்களுக்காக வேறு விமானங்களை தயார்படுத்தி வருவதாகவும் அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 1 ஜூலை, 2022

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் அமெரிக்காவில் சாதனை

அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸ் தொகுதியில் ஜனநாயகக் கட்சியின் பிரைமரியில் வெற்றி 
பெற்றுள்ளார்.
இந்திய வம்சாவளி அமெரிக்க காங்கிரஸின் ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸில் இருந்து ஜனநாயகக் கட்சியின் பிரைமரியில் ஒரு தீர்க்கமான ஆணையை வென்றார், அவரது எதிர் வேட்பாளரான அகமது நடத்திய பிரசாரத்தை வெற்றிகரமாக முறியடித்தார்.
இல்லினாய்ஸின் எட்டாவது காங்கிரஸ் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கிருஷ்ணமூர்த்தி (48), ஜுனைத் அகமதுவை (71) சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் தோற்கடித்தார்.
இந்நிலையில் “எனது தொகுதி மக்கள் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பை விரும்புகிறார்கள். காங்கிரசில், நான் நடுத்தர வர்க்கத்தினருக்காகவும், பெண்களின் இனப்பெருக்க உரிமைகளுக்காகவும், பணவீக்கம் மற்றும் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராகவும் இருக்கிறேன். வரும் முக்கியமான மாதங்களில் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க நான் தொடர்ந்து அயராது உழைப்பேன்” 
என்று கூறினார். 
அவர் 2017 முதல் இல்லினாய்ஸின் 8-வது காங்கிரஸ் மாவட்டத்திற்கான அமெரிக்கப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். புது டெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை ராஜபாளையம். தாயார் தஞ்சாவூர். இவருடைய மனைவியும் தமிழ்நாடு தான். இவருடைய தந்தைக்கு அமெரிக்காவில் பேராசிரியர் பணி கிடைக்க,
 அங்கு சென்றனர்.
பின்னர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். மருத்துவமனை பொறுப்பாளராக இருந்த போது ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. ராஜா கிருஷ்ணமூர்த்தி 2004-ஆம் ஆண்டு ஒபாமாவின் செனட் பிரசார ஆலோசகராக பணியாற்றினார்.
2008-ல் ஒபாமாவின் தனி ஆலோசகராக இருந்தார். 2007 – 2009 காலகட்டத்தில் இல்லினாய்ஸ் மாகாணத்தின் துணை நிதியமைச்சராக இருந்தார்.
அவர், வரும் நவம்பர் 8-ஆம் திகதி பொதுத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் கிறிஸ் டர்கிஸை எதிர்கொள்கிறார். கடந்த மாதம்,
 அவரது சிறந்த தொழில் மற்றும் பொது சேவைக்கான அர்ப்பணிப்பை பாராட்டி அவருக்கு சிறப்புமிக்க தலைமைத்துவ விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>