24.07.2012.மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டியார்
கட்டையடம்பன் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 162 மில்லி மீற்றர் ரக ஆட்லறி
குண்டொன்றை இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் முருங்கன் பொலிஸார்
மீட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஏ.கமல் குணவர்தன
தெரிவித்தார்.
முருங்கன் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத்
தகவலையடுத்து முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் சென்ற பொலிஸ்
குழுவினர் குறித்த ஆட்லறி குண்டை மீட்டுள்ளனர்.
பின் குறித்த குண்டு
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு செயலிழ க்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் முருங்கன்
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஏ.கமல் குணவர்தன தெரிவித்தார் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக