Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

தண்டப்பணம் செலுத்த முடியாத நிலையில் 15,000 சிறைக் கைதிகள்!



வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012,


இலங்கையில் தண்டப்பணம் செலுத்த முடியாத 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிறைவாசம் அனுபவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகள் துறை அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் பல்வேறு சிறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தினால் தண்டப்பணம் விதிக்கப்பட்டவர்கள் பலரால் அதனை செலுத்தமுடியவில்லை.

அவ்வாறான 15, 336 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது சிறையில் உள்ள மொத்த கைதிகளில் அறைவாசி பங்கு என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான குற்றச்சாட்டின் கீழேயே இலங்கையில் அதிகமான சிறைக்கைதிகள் சிறையில் இருப்பதாகவும் சுட்டிக்காப்பட்டுள்ளது.