Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 4 ஆகஸ்ட், 2012

தல அஜித்குமார் தனது 20 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார்.

04.08.2012.
அஜித்குமார்- 20.
திரையுலகில் அஜீத் குமார் தனது 21வது வயதில் தெலுங்கு திரைப்படமான பிரேம புஷ்டகம் என்ற படத்தில் அறிமுகமானார்.
இந்த திரைப்படம் 1993ம் ஆண்டு யூலை 15ம் திகதி திரைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து கொலிவுட் வாய்ப்புகள் வர அமராவதி என்ற திரைப்படத்தில் நடித்தார்.
பின்னர் தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்திய அஜீத், ஆசை, வாலி என பல வெற்றிப்படங்களை தந்தார்.
அஜித்குமார் இது வரை 51 படங்கள் தமிழில் நடித்துள்ளார். அவரது 50வது படமான மங்காத்தா சூப்பர் ஹிட்டானது. இது தவிர வரலாறு, சிட்டிசன், வாலி, வில்லன் போன்ற படங்கள் அஜித்தின் நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவையாக அமைந்தன.
தமிழ் திரையுலகில் இன்று முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் அஜீத், திரையுலகிற்கு அடியெடுத்து வைத்து 20 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக