Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

யாழ்ப்பாணத்தைப் பார்க்கப் போனவர்களின் எண்ணிக்கை 12.5 மில்லியன்

31.08.2012.BY.rajah
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர் 12.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
2009 ஜுலை மாதத்துக்குப் பின்னரே, 12.5 மில்லியன் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.
இந்த மாதத்தில் [ஓகஸ்ட்] மட்டும் சுமார் 1இலட்சம் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.
கடந்த வாரம் வரையில் யாழ்.நகருக்குள் 10 ஆயிரம் வாகனங்கள் நுழைந்துள்ளன.
இந்த மாதம் யாழ்ப்பாணத்துக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்ததற்கு பாடசாலை விடுமுறை, நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழா என்பனவே காரணம் என்று சிறிலங்கா இராணுவம் கூறியுள்ளது.
உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் காரைநகர் கசூரினா கடற்கரை, கீரிமலை, யாழ் நூலகம். யாழ்.கோட்டை, யாழ்.தொடருந்து நிலையம் ஆகியவற்றை பார்வையிடுவதற்கு விரும்புகின்றனர் என்றும் சிறிலங்கா இராணுவம் கூறியுள்ளது.
அதேவேளை, வெளிநாட்டுக் கடவுச்சீட்டைக் கொண்டுள்ள 31,500 பேர் இந்த ஆண்டில் மட்டும் வடபகுதிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அண்மையில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்கிலீஷ் விங்கிலீஷ் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ஸ்ரீதேவி

 Friday, 31 August 2012, BY-rajah.
பாலிவுட்டில் உருவான இங்கிலீஷ் விங்க்லீஷ் படம் இந்தி, தமிழ் இரு மொழிகளில் விரைவில் வெளியாகிறது.
இந்தியாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி இதில் இல்லத்தரசியாக நடித்துள்ளார்.
கொலிவுட் பட நடிகை ப்ரியா ஆனந்த் முக்கிய வேடத்தில் வருகிறார். பாலிவுட் நட்சத்திர நாயகன் அமிதாப் பச்சன், தல அஜித் இருவரும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்கள்.
படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். கெளரி ஷிண்டே படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் சென்னை பிவிஆர் திரையரங்கில் இங்கிலீஷ் விங்கிலீஷ் பட ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் படத்தயாரிப்பாளர்- பாலிவுட் இயக்குனர் பால்கி, ஸ்ரீதேவி, படத்தின் இயக்குனர் கௌரி ஷிண்டே, ப்ரியா ஆனந்த் ஆகியோர் படத்தை பற்றி பேசினர்.
ஆங்கிலம் தெரிந்தவர்களை சமூகம் மேலானவர்களாக பார்க்கிறது. ஆங்கிலம் தெரியாதவர்களை சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை படத்தில் சொல்லியிருக்கிறோம். ஆங்கிலம் தெரியவில்லையே என்று நினைப்பவர்களை பற்றிய படம் இது என்று குறிப்பிட்டார் தயாரிப்பாளர் பால்கி.
ப்ரியா ஆனந்த் கூறுகையில், நான் ஸ்ரீதேவி அம்மாவின் ரசிகை. அவருடைய நடிப்பை பார்த்து வியந்துள்ளேன். அவருடன் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன் என்றார்.
படத்தின் நாயகி ஸ்ரீதேவி கூறுகையில், பல வருடங்களுக்கு பிறகு நான் நடித்த படம் இந்தி, தமிழ் மொழிகளில் வெளியாகிறது. பால்கியின் தயாரிப்பில் முதன் முதலாக பெண் இயக்குனர் கெளரி ஷிண்டே உடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இந்தப்படம் எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும்.
நான் தொடர்ந்து தமிழ் படங்களை ரசித்து வருகிறேன். தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்ததை என்னால் எப்போது மறக்க முடியாது.
தமிழில் நல்ல கதை, பொருத்தமான கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன். ரஜினி, கமல்ஹாசன் இருவருடனும் இணைந்து நடிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

14 வயது சிறுவனுடனான உறவின் மூலம் குழந்தை பெற்ற 20 வயது பெண்

31.08.2012.BY-rajah.
அமெரிக்காவில் 14 வயதுப் சிறுவனுடன் உறவு வைத்தது மட்டுமன்றி அவன் மூலம் குழந்தையும் பெற்றெடுத்த 20 வயதுப் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த பெண்ணின் பெயர் பிரிட்டானி வெயன்ட். பென்சில்வேனியாவின், கிளேஸ்பர்க் பகுதியைச்சேர்ந்தவர். இவர் தற்போது குறைந்த வயதுடையவருடன் உறவு கொண்ட குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரிட்டானி தற்போது பிளேர் கெளன்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பிறந்த குழந்தையை தற்போது பிரிட்டானியின் தாயார் பராமரித்து வருகிறார்.
ட்ந்
சம்பந்தப்பட்ட சிறுவனின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அந்தப் பையனுடன் பிரிட்டானி கடந்த டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் உறவு வைத்து வந்துள்ளார். இருவரும் விருப்பத்துன்தான் உறவு கொண்டுள்ளனர். தனது வீட்டுக்கு அருகில்தான் இருவரும் தனிமையில் சந்தித்து உறவு கொண்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது அந்தப் பையன் கூறுகையில்,எனது சம்மதத்துடன்தான் இந்த உறவு நீடித்தது. இருவரும் மனம் ஒத்துப் போய்தான் இதில் ஈடுபட்டோம். பிரிட்டானி கர்ப்பமடைந்தது எனக்குத் தெரியும். அவர் வைத்தியரிடம் சென்றபோது நானும் உடன் போனேன் என்று கூறியுள்ளான்.

சம்மதத்துடன் நடந்த உறவு என்றாலும் கூட பென்சில்வேனியா சட்டப்படி சிறுவனுக்கு 14 வயதுதான் ஆகிறது என்பதால் இதை சட்டப்படி ஏற்க முடியாது என்பதால் பிரிட்டானி கைது செய்யப்பட்டுள்ளார்

கடந்த வாரத்தில் மட்டும் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 468 பேர் சிறிலங்காக் கடற்படையினரால் கைது

31.08.2012.BY-rajah.கடந்த வாரத்தில் மட்டும் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 468 பேர்கள் சிறிலங்காக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 25ம் நாள் முதல் நேற்று வரையான காலப்பகுதியில், சிறிலங்காக் கடற்படையினரால் 468 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கடற்படையின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கடந்த 25ம் திகதி, திருகோமலைக் கடற்பரப்பில் வைத்து 65 தமிழர்கள் 36 சிங்களவர்களும், வடக்கு கடற்பரப்பில் மணற்காடு பகுதியில் 19 தமிழர்கள், இரண்டு சிங்களவர்கள் என மொத்தமாக 122 பேர்களும்,

26ம் திகதி கிழக்கு கடற்பரப்பில் வைத்து 52 தமிழர்களும், 28ம் திகதி பேருவள கடற்பரப்பில் 64 தமிழர்களும் 02 சிங்களவர்களும் சிலாபம் கடற்பரப்பில் 59 தமிழர்களும், 22 சிங்களவர்களுமாக மொத்தம் 147 பேர்களும்,

நேற்றுமுன்தினம் வடக்கில் சுண்டிக்குளம் கடற்பரப்பில் 60 தமிழர்களும் ஒரு சிங்களவரும், அதேநாள் கிழக்கு கடற்பரப்பில் வைத்து 57 தமிழர்களும், 4 சிங்களவர்களும், ஒரு முஸ்லிமுமாக மொத்தம் 123 பேர்களும்,

நேற்றையதினம், மட்டகக்ளப்பில் 24 பேருமாக இதுவரை கடந்த வாரத்தில் மட்டும் 468 பேர்கள் தம்மால் கைது செய்யப்பட்டிருப்பதாக சிறிலங்கா கடற்படை குறிப்பிட்டுள்ளது

இராணுவத்திடம் சிக்கிய கிளிநொச்சி முருகன்! தீர்த்தோற்சவத்தில் ஏற்பட்ட சங்கடத்தால் மக்கள் விசனம் { புகை படங்கள் இணைப்பு

 
 

வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY-rajah.

 
கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இன்று தீர்த்தோற்சவம். இராணுவ ஆக்கிரமிப்பு அற்ற முன்னான காலங்களில் கந்தப்பெருமான் தீர்த்தம் ஆடுவதற்கு பரிவாரமூர்த்திகள் சூழ, பிரதான வீதியூடாக புறப்பட்டு கரடிப்போக்கு சந்தியில் மூன்றாம் வாய்க்கால், புரவிப்பாஞ்சான் ஊடாக சென்று கிளிநொச்சி குளத்தில் தீர்த்தம் ஆடுவது வழக்கம்.

தற்போது பரவிப்பாஞ்சான் கிராமம் முற்றுமுழுதாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த நிலையில் இன்று கிளிநொச்சி கந்தப்பெருமான் பரவிப்பாஞ்சான் ஊடாக சென்று
தீர்த்தம் ஆடுவதற்கு இராணுவத்தோடு கலந்துரையாடப்பட்டு ஏற்பாடாகியது.
ஆனால் தீர்த்தோற்சவத்திற்கு கந்தப்பெருமான் கோவில் வாசலில் புறப்பட்டு பொழுதிலேயே எங்கும் இராணுவப் பச்சையே நிறைந்திருந்தது. முருகப்பெருமான் இராணுவத்தால்
சூழப்பட்டிருந்தார்.
பார்க்க மிகவும் அசிங்கமான தோற்றமாக காணப்பட்டது. இந்து சமய கோவில் பண்பாடுகளையே அசிங்கப்படுத்துவதாக அமைந்தது. எண்ணற்ற எமது மக்களை கொன்ற கொலை பாதகர்கள் முருகப்பெருமானின் திருத்தலத்தையும் அசிங்கப்படுத்தினர்.
ஏராளம் பேர் இன்று முருகப்பெருமானின் பின்னால் சென்ற தீர்த்தமாட செல்வதற்கு தயாராக இருந்தபோதும் தங்கள் பெண் பிள்ளைகளின் நலன்கருதி செல்லாது தவிர்த்துக் கொண்டனர்.
கந்தப்பெருமான் முன்பு பல தடவை பல்வேறு காரணங்களுக்காக கோவில் கிணற்றில் தீர்த்தமாடியதை சிலர் நினைவு கூர்ந்தனர். பல பக்தர்கள் விசனப்பட்டனர்.
இந்து சமயம் தொடர்பாக இருக்கின்ற அமைப்புகள் இந்து ஆலயங்களில் இராணுவத்தரப்பால் செய்யப்படுகின்ற அசிங்கங்கள் பற்றி கண்டனங்களோ, நடவடிக்கைகளோ எதுவுமற்று கோவில் பண்பாடு சீரழிந்து வருகின்றது.
கிளிநொச்சி முருகன் ஆலயத்திலும் கோவிலுக்கு நமது பெண்கள், ஆண்கள் எப்படி வரவேண்டுமென்று பிரசங்கம் பண்ணியவர்களுக்கும் ஆறுமுகநாவலரைப் பற்றி வரலாறு சொல்கின்றவர்களும் கந்தப்பெருமானின் தீர்த்தோற்சவத்தில் இராணுவ சீருடையுடன் நிரம்பி வழிந்த படையினர் தொடர்பாக என்ன சொல்லப் போகிறார்கள்.
புத்த கோவிலுக்குள் இவர்கள் இப்படி நாகரிகமற்ற முறையில் செல்வார்களா! என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க இந்திய கடலோர கண்காணிப்பு

 
 வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY-rajah.
இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு புதிதாக ராஜ்கிரன் என்ற கண்காணிப்பு கப்பல் அறிமுக விழா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கடல் வழியாக கடத்தல், அன்னிய நாட்டு மோசடிகளை தடுத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் இலங்கை கடற்படையிடமிருந்து இந்திய மீனவர்கள் நலன் காத்தல் போன்ற பணிகளில் கடலோரகாவல் படை ஈடுபட்டு வருகிறது.
இந்த பணிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் புதிய கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
ராஜ்கிரண் என்ற பெயர் கொண்ட புதிய கப்பலை கொல்கத்தாவை சேர்ந்த கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனம் உலக தரத்துக்கு வடிவமைத்துள்ளது.
50 மீட்டர் நீளமும், 300 டன் எடையும் கொண்ட ராஜ்கிரண் கப்பல் மூலம் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலையிலும் பணி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
பொதுவாக, 16 கடல் மைல் வேகத்தில் பயணிக்கும் இந்த கண்காணிப்பு கப்பல் இலங்கை கடல் எல்லை உள்ளடங்கலாக, 1500 கடல்மைல் பரப்பளவு உள்ள பகுதியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு

 வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY.rajah.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலையில் புகுந்த மர்ம மனிதன் திடீரென அங்கிருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலையில் புகுந்த மர்ம மனிதன் திடீரென பொதுமக்களை நோக்கி சுடத் தொடங்கினான். இதனால் மக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.
மேலும் தோட்டாக்கள் தாக்கியதில் சூப்பர் மார்க்கெட்டின் ஜன்னல்கள் நொறுங்கின. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான பொலிசார் சூப்பர் மார்க்கெட்டை சுற்றி நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் துப்பாக்கியுடன் வந்த மர்ம ஆசாமி உள்ளிட்ட 3 பேர் இறந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

செவிப்பறை வெடித்து இளைஞன் பலி : ஹெட் போனால் வந்த வினை

31.08.2012.BY-rajah.
நற்பிட்டிமுனையில் கடந்த புதன்கிழமை (29.08.2012) இரவு ஹெட் போனில் பாடல் கேட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் செவிப்பறை வெடித்து உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவத்தில் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அகமட் லெப்பை ரிப்னாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இளைஞன் தனது லெப்டொப்பில் ஹெட்போனூடாக பாடல் கேட்டுக்கொண்டு வேலை செய்துகொண்டிருந்துள்ளார். பின்னர் ஹெட் போனுடேயே உறங்கியிருக்கிறார்.

மறுநாள் காலையில் சில மணிநேரம் கழித்தும் அறையிலிருந்து எழுந்து வெளியே வராமையினால் சந்தேகம் கொண்ட உறவினர்கள் அறைக்குள் சென்று பார்த்த போது காதில் இரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்

அடியவர்களின் குறை தீர்க்கும் சந்நிதியான்[ புகை படங்கள் இணைப்பு ]

31.08.2012.BY-rajah.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ செல்வச்சந்நிதி முருகன் தேரேறி வந்தான்!  
வரலாற்றுப் புகழ்மிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் 14ம் நாளான நேற்று வியாழக்கிழமை தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோஹரா கோசத்துடன் வடம்பிடித்திழுக்க ஆற்றங்கரையான் தேரேறி வலம்வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அடியார்களின் இன்னல்களை அழிக்கும் அன்னதானக் கந்தன் அலங்காரத்துடன் ரதோற்சவத்தில் வலம்வந்த காட்சிகள் இதோ!
என்றும் நின்மதி தரும் சந்நிதி முருகன் அனைவர்க்கும் என்றும் அருள் புரிவர் ஓம் சரவணபவ ஓம் சாந்தி நவட்கிரிஇணையம்



வியாழன், 30 ஆகஸ்ட், 2012

செப்டம்பர் 7ஆம் திகதி வெளியாகிறது அரக்கோணம்

30.08.2012.BYrajah.
ரமணா குடிபதியின் தயாரிப்பில் உருவான அரக்கோணம் படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
இந்த படம் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாகும். இதில் ஸ்ரீமன் கதாநாயகனாக நடிக்க, பிராச்சி கதாநாயகியாக நடித்துள்ளார்.
பொன்னம்பலம் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் சுமன் செட்டி, வாகினி, வெங்கல் ராவ் ஆகியோரும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளரான ரமணா குடிபதியும் சிறு கதாபாத்திரத்தில் வருகிறார்.
இசை: அர்ஜீன்.
சண்டை: பஞ்ச் பரத்.
நடனம்: கருண்.
தயாரிப்பு: ரமணா குடிபதி.
கதை, இயக்கம்: சிங்கம் சுதாகர்.
எடிட்டிங்: உட்டம்

முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய மிருகபலி பூஜையைக்கு ஹெல உறுமய விளக்கம்


 
30.08.2012.BY.rajah,வடமேல் மாகாணத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் கௌத்தம புத்தரின் தாதுக்கள் மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படவுள்ளது அதனால் அதே தினத்தில் மிருகபலி பூஜையை நடத்தப்படுவது என்பது பாவச் செயலாகும் அதனால் குறித்த பூஜையினை நிறுத்துவதற்கு ஜனாதிபதி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 2ஆம் திகதி முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள மிருகபலி பூஜையை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளாரh. இந்த மிருகபலி பூஜையில் அரசியல் தலைவர்கள் தலையிடக் கூடாது என்றும் இந்தப் பூஜையினை நஜறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிடுவார் என்றால் மட்டுமே இப்பூஜை நிறுத்தப்படும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.
இவர்களுடைய இக் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டே ஜாதிக ஹெல உறுமய இந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் எதிர்வரும் முதலாம் திகதி கௌத்தம புத்தரின் தாதுக்கள் வடமேல் மாகாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படவுள்ளது அதே தினத்தில் இந்த மிருகபலி பூஜையை நடத்தப்படுவது, பாவச் செயல் எனவும் தேரர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதேவேளை கடந்த முறையும் பலிபூஜை நடாத்துவதற்காக கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட மிருகங்களை அமைச்சர் மேர்வின் சில்வா தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்ததனையடுத்து பலிபூஜை நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் குறித்த மிருகங்களுக்கு என்ன நடந்தது என்று, ஆலய நிர்வாகத்தினருக்கே தெரியாத நிலையே உள்ளது அதன்படி குறித்த ஆலயத்தின் பிரதம குரு காளிமுத்து சிவபாதசுந்தரம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதேவேளை குறித்த மிருகபலி பூஜையினை நிறுத்துமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றதுடன் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டு வந்தனர் ஆனால் அவ்வாறான செயற்பாடுகளை கோயில் வளாகத்தில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆலய பூசகரை மேர்வின் சில்வா மிரட்டியதாகவும் பூசகர் தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து இந்த ஆலய வருடாந்த விலங்கு வேள்விக்கு இடைக்கால உத்தரவு வழங்குமாறு பௌத்த குருமார்களால் மேல் முறையீட்டு நீதிமன்றில் முறையீடு செய்யப்பட்டது எனினும் மேல் முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவினை வழங்க நேற்று முன்தினம் மறுப்புத் தெரிவித்திருந்தது.
குறித்த தேரர் கூறுவது போல புத்தரின் தாதுக்களை மக்கள் தரிசிக்கும் போது பாவச்செயல்கள் செய்யக் கூடாது என்றால் இந்த தாதுவை 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு இந்தியா வழங்கியிருக்கலாம் அவ்வாறு நடந்திருந்தால் பல இலட்சம் உயிர்கள் காக்கப்பட்டிருக்கும் ? என்ற சிந்தனையும் நம்முள் பலரிடம் எழுத்தான் செய்கின்றது.

தனி மனித அபிவிருத்தி என்பது யாழில் இல்லாத ஒரு பொருளாகிவிட்டது; யாழ்.பல்கலைக்கழக நூலகர்

30.08.2012.BY.rajah.
 
சமூக மேம்பாடு என்பது தனி மனித அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளது. ஆனால் யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தனி மனித அபிவிருத்தி என்பது பேசப்படாத ஒரு பொருளாகவே காணப்படுகின்றது என யாழ்.பல்கலைக்கழக நூலகர் காந்தலட்சுமி அருளானந்தம் தெரிவித்தார்.
ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய டாவட்டங்ககைச் சேர்ந்த 46 நூலகங்களுக்கு ஒரு தொகுதி நூல்கள் கையாளிக்கும் நிகழ்வும் நூலகர்களுக்கான பயிற்சி பட்டறை வழங்கும் நிகழ்வும் இன்று காலை 9 மணிக்கு யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
சமூகம் சார்ந்த சில செய்திகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தவகையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு தனி மனித அபிவிருத்தி என்பது சுய கற்றலில் தான் தங்கியுள்ளது. இந்த சுய கற்றல் வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்திக் கொள்வதனால் மட்டுமே ஏற்படும்.
அதன்படி இன்றைய நிலையினை எடுத்து நோக்கினால் இன்று நுலகங்களை பார்க்கும் போது வாசிப்பு பழக்கம் என்பது அருகி போய் விட்டதனைக் காணலாம்.
அத்துடன் இன்று நூல் நிலையங்களைப் பார்க்கும் போது தனி மனித அபிவிருத்தியில் கவனம் செலுத்தவில்லை. எங்களுடைய அறிவை நாங்கள் வளர்த்துக் கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
இன்று யாழ். பல்கலைக்கழக நூலகம் மற்றும் யாழ்.பொது நூலகம் ஆகியன போதியளவிலான வளங்களுடன் மக்களது பாவனைக்கு ஏற்றதாக உள்ளது.
அத்துடன் எங்களுடைய சமூகம் மொழி ஆற்றலை வளர்த்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு சுயமாக கற்கின்ற ஆற்றல் இல்லை இவை மனித மேம்பாட்டுக்கு அவசியமானது.
எனவே இவற்றை எமது சமூகத்தில் மேம்படுத்துவதற்கான அவசியம் நுலகத்திற்குண்டு. அத்துடன் ஏசியா பவுண்டேசன் போன்ற அன்பளிப்பாளர்கள் சிறுவர் நூலகங்களிலும் தமது பங்களிப்பை செய்வது இன்றைய காலகட்டத்தின் அவசியமாகும்.
எனவே அவற்றையும் ஏசியா பவுண்டேசன் நிறுவனம் கவனத்திற் கொண்டு தமது பங்களிப்பை செய்யும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

யாழ்.நகரில் சுகாதார நடவடிக்கை புதிய திட்டங்களால் சீரமைப்பு; மாநகர சுகாதாரக் குழுத் தலைவர் தகவல்

30.08.2012.BYrajah.
யாழ்.நகரின் சுகாதார நடவடிக்கைகள் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்திச் சீரமைக்கப்படவுள்ளது என்று யாழ்.மாநகர சபை சுகாதாரக் குழுவின் தலைவர் எஸ்.விஜயகாந்த் நேற்றுப் புதன்கிழமை யாழ்.மாநகர சபையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.
சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் ஒரு கட்டமாக எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை முதல் குப்பைகளை அகற்றும் பணி தினமும் காலையிலும் பிற்பகல் 2 மணியில் இருந்தும் இரு தடவைகள் இடம்பெறும். நகரின் மையப் பகுதியில் மூன்று கட்டமாக இடம்பெறும்.
குப்பை எடுப்பதற்கென முன்னர் எட்டு டிராக்டர்கள் இருந்தன. இப்போது இருபத்தி ஐந்துவரை உள்ளன. குப்பை எடுக்கவரும் வாகனங்கள் சமிக்ஞை ஒலிகள் எழுப்பிவரும். பொதுமக்கள் வீதிகளில் குப்பைகளை வைக்காமல் வாகனங்கள் வரும்போது கொடுக்க முடியும். காலையும் மாலையும் என இரண்டு தடவைகள் ஓடு வீதிக்கு குப்பை அகற்றும் வாகனங்கள் வரும்.
பொதுமக்கள் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கி வீதிச் சுத்தத்துக்கு உதவ வேண்டும். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் மட்டும் ஆயிரத்து 386 மெற்றிக் தொன் திண்மக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
தைமாதம் தொடக்கம் ஆறுமாதம் வரை 8,604 மெற்றிக் தொன் திண்மக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது எனவும் ஆடி மாதம் வரை மலக்கழிவு ஏழு லட்சத்து 33 ஆயிரத்து 200 லீற்றர் வரை அகற்றப்பட்டுள்ளது.
குப்பைகளை அகற்ற பெக்கோ இயந்திரம் தேவைப்படுகிறது. ஒரு இயந்திரம் ஒரு கோடி 50 லட்சம் ரூபாவரையானது. அப்படி ஒரு இயந்திரத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி மாநகர சபையிடம் தற்சமயம் இல்லை. அதுதொடர்பாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் என நம்புகின்றோம் என்று அவர் மேலும் கூறினார்

மட்டக்களப்பில் பஸ் விபத்து: 14 பேர் காயம்

30.08.2012.BYrajah.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டியொன்று கிரான்குளம் பகுதியில் பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் 9 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆரையம்பதி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் ரமேஸ் தெரிவித்தார்.
இதேவேளை, ஆரையம்பதி வைத்தியசாலையில் 5 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்

சுன்னாகத்தில் குடிநீர்க் கிணறுகளில் எண்ணெய்க் கசிவுகள்!-ஆய்வின் மூலம் வெளியான அதிர்ச்சித் தகவல்

 
 வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2012, BY.rajah.
யாழ்.சுன்னாகத்திலுள்ள பொது மக்களது பல குடிநீர்க் கிணறுகளில் உள்ள நீரில் எண்ணைக்கசிவுகள் கலந்துள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
சுன்னாகத்திலுள்ள இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி நிலையம்; மூலமே இக்கசிவு ஏற்பட்டுள்ளதாகத் ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களின் குடிநீர்க் கிணறுகளில் எண்ணைக்கழிவுகள் கலந்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் இதற்கான ஆய்வுகளை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை மேற்கொண்டது. இவ்ஆய்வின் போது காணியொன்றின் கழிவு எண்ணை பாரிய அளவில் தேங்கி நின்றதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மின் உற்த்தி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட எண்ணையினாலேயே இக்கசிவு ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டள்ளது
மேலும் இது தொடர்பில் இரண்டாம் கட்ட ஆய்வுகளை வலி.தெற்கு பிரதேச சபையின் கோரிக்கையில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்டு வருகின்றது.
 

திருட்டு டிவிடியில் என் படத்தை பாருங்கள் – இயக்குனர் மிஸ்கின்!

30.08.2012.BYrajah.மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா,பூஜா ஹெக்டே நடித்திருக்கும் படமான முகமூடி ஆகஸ்டு 31-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.முகமூடி படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குனர் மிஸ்கின் “முகமூடி படத்தில் எம்.ஜி.ஆர் பாணியைத் தான் பின்பற்றியிருக்கிறோம்.
எவ்வளவு அடி வாங்கினாலும் மறுபடியும் எழுந்துவந்து தர்மத்தை காப்பவர் தான் எம்.ஜி.ஆர். அதே போல் தான் முகமூடி படத்தின் கதாநாயகனும் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அதைப் பொருட்படுத்தாது மக்களைக் காப்பாற்றுவதே குறிக்கோளாய் இருப்பார்.
இந்த படத்தை ரசிகர்கள் திருட்டு டிவிடியில் பார்த்தால் கூட எனக்கு கவலையில்லை. திருட்டு டிவிடியில் பார்த்தாலும் இப்படி ஒரு நல்ல படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் தியேட்டருக்கு தானாக வருவார்கள். 50 ரூபாயை வீணாக்க வேண்டாம் என நினைத்தால் முதலிலேயே தியேட்டருக்கு வந்து பாருங்கள்” என்று கூறினார்

எதிர்ப்புகளை மீறி சாதித்துக்காட்டிய ஈரான்

30.08.2012.BYrajah.
அணுஆயுத திட்டத்தால், ஈரானை மற்ற நாடுகளிடமிருந்து தனித்துவைக்க அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், 120 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள அணிசேரா நாடுகளின் மாநாடு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இன்று ஆரம்பமாகின்றது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பல தலைவர்கள் ஈரான் சென்றுள்ளனர்.

ஈரானில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று சர்வதேச நாடுகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம், அமெரிக்காவை வெற்றி கொள்ளும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இதேவேளை இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் அண்மையில் அறிவித்திருந்தார். அவரின் அறிவிப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்களது கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தன.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஈரான் இம்மாநாட்டை நடத்தவுள்ளமையை உலகநாடுகள் பல பாராட்டியுள்ளன.

உயிருக்கு எமனான கையடக்கத்தொலைபேசி

By.rajah.
திருட்டினால் ஏற்படும் பின்விளைவுகள் விபரீதமாகிய பல சம்பவங்களை நாம் கேள்விப்பட்டுள்ளோம்.
ஆனால் உகாண்டாவில் நபரொருவர் திருட்டினால் மிகவும் மோசமான பின்விளைவுக்கு முகங்கொடுத்துள்ளார்.
ஆம் கொடிய நோய்த்தொற்றுக்குள்ளாகியிருந்த நோயாளியிடமிருந்து கையடக்கத்தொலைபேசியொன்றைத் திருடிய நபரொருவரும் அதே நோய்க்கு ஆட்பட்டுள்ளார்.
உகாண்டாவின் பின் தங்கிய பகுதியொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கையடக்கத்தொலைபேசியைக் குறித்த நபர் வைத்தியசாலையொன்றில் இருந்தே திருடியுள்ளார்.
அக்கையடக்கத்தொலைபேசியின் உரிமையாளர் ' இபோலா' எனப்படும் கொடிய வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தவர்.
இவர் தனது கையடக்கத்தொலைபேசியைக் காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பின்னர் நோயின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் திருடியவரைத் தேடிக்கொண்டிருக்கும் வேளையில் அவர் அதே நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்துள்ளார்.
மேலும் கையடக்கத்தொலைபேசியினை திருடியதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது நோயின் தாக்கத்தால் அவதியுற்றுவரும் அந்நபர் திருடிய கையடக்கத்தொலைபேசியின் விலை வெறும் 24 அமெரிக்க டொலர்கள் மட்டுமே.
ஆனால் அவரின் உயிருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளதென்பதனைத் திருடியவர் அறிந்திருக்கவில்லை.
இபோலா வைரஸானது இபோலா காய்ச்சலை ஏற்படுத்தக்கூடியது. தொற்றும் இக்காய்ச்சலானது அரிப்பு, வயிற்றோட்டம், வாந்தி, இரத்தப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன் உயிராபத்தையும் ஏற்படுத்தக்கூடியது.

ஆஸி செல்லமுற்பட்ட 39 பேர் ஒரு கோடியே 95 இலட்ச ரூபா பிணையில் விடுதலை

30.08.2012.BY.rajah.
சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலமாக அவுஸ்திரேலியா செல்லமுற்பட்ட போது கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 43 பேரில் 39 பேரை நீர்கொழும்பு பிரதான நீதிவான் ஏ.௭ம்.௭ன்.பி. அமரசிங்க தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய நேற்று உத்தரவிட்டார்.

பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களை சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்ப உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் ஏனைய நால்வருக்கும் பிணை வழங்க மறுத்த நீதிவான், அவர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு பணித்தார். நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்தவர்களே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களாவர்.

39 பேருக்கும் வழங்கப்பட்ட சரீரப் பிணைகளின் மொத்தப் பெறுமதி ஒரு கோடியே 95 இலட்சம் ரூபாவாகும். இந்த வழக்கை ௭திர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்

அமெரிக்காவை மிரட்டும் ஐசக் சூறாவளி

30.08.2012.BYrajah.பிந்திய செய்தி
அமெரிக்காவில் மையம் கொண்டுள்ள ஐசக் சூறாவளிப் புயலின் காரணமாக லூசியானா மாகாணம் இருளில் மூழ்கியுள்ளது. அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மிசிசிப்பி, லூசியானா மற்றும் அலபாமா உள்ளிட்ட மாகாணங்களில் ஐசக் புயல் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாபிந்திய க 130 கி.மீ வேகத்தில் கடும் சூறைகாற்று வீசி வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி கத்ரினா புயல் தாக்கியதில் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் 18 ஆயிரம் பேர் பலியாயினர்.
கத்ரினாவை போன்ற சக்தி வாய்ந்த புயல் மீண்டும் அமெரிக்காவை தாக்கியுள்ளதால், இம்மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
லூசியானாவின் கவர்னரான பாபி ஜிண்டால் குடியரசுக் கட்சி மாநாட்டு வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பல மில்லியன் டொலர்களுடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓடிய அதிகாரி

30.08.2012.BY.rajah.
சீனாவில் ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரி ஒருவர், அமெரிக்காவுக்கு தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் தற்போது சீனா கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்குள்ள லியோனிங் மாகாணம் பெங்க்செங்க் நகரத்தில் அக்கட்சியின் செயலாளராக வேலை பார்த்து வந்தவர் வேங் குவாங்கியாங். அவர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு விசாரணை நடந்து வந்ததால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் 31.5 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் தனது மனைவியுடன் அமெரிக்கா தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. வெளிப்படையாக விமானம் மூலம் அமெரிக்காவிற்கு தப்பி ச்சென்ற அவரை நிர்வாகம் பிடிக்க தவறியது குறித்து கண்டனம் எழுந்துள்ளது.
அவர் மீது பல மில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
அவருடன் வேலை பார்த்தவர்கள் இது குறித்த செய்திகளை மறைத்து விட்டதாகவும், இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்தக்கூடாது என்றும் அந்நாட்டு ஊடகங்களில் பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது

தனது சக தோழியை சீப்பால் குத்திக் கொலை செய்த பெண்

30.08.2012.BY.rajah.
லண்டனில் பரபரப்பான கடைத் தெருவில் 15 வயது இளம் பெண், சக தோழியை சீப்பால் கத்திக் கொலை செய்தார். மத்திய லண்டனில் உள்ள பிம்லிகோ பகுதியைச் சேர்ந்தவர் ரெபேக்கா டோக்லாஸ்(வயது 15). கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னி பகுதியை சேர்ந்தவர் ராவுப்பின் மகள் ஜூலி.
இவர்கள் கடந்த 2006ஆம் ஆண்டு மேற்கு ஆப்ரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தனர்.
கடந்தாண்டு மே 7ஆம் தேதி தெற்கு லண்டனில் பாட்டர்சீ பகுதியில் உள்ள பால்கன் சாலையில் ஒரு கடை முன்பு நின்றிருந்த ஜூலியுடன், ரெபேக்கா டோக்லாசும் ஆவேசமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற ரெபேக்கா, தன் தலையில் சொருகியிருந்த உலோக சீப்பை எடுத்து கைப்பிடி பகுதியில் இருந்த இரும்புக்கம்பியால் ஜூலியின் தலையில் சரமாரியாக குத்தினார்.
இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த ஜூலிக்கு ரத்தம் தொடர்ந்து வெளியேறியது. இதனால் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஜூலியை சீப்பால் குத்துவதற்கு முன்பாக தனது பிளாக்பெரி போனையும், பையையும் அருகில் உள்ள தனது நண்பரிடம் கொடுத்துள்ளார் ரெபேக்கா டோக்லாஸ். பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் வீட்டில் இருந்த அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். ரெபேக்கா டோக்லாஸ் ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக ஜூலி அவதூறு பரப்பியதாகவும், அதனால் ஆத்திரம் அடைந்த ரெபேக்கா ஜூலியை கொலை செய்ததும் தெரியவந்தது.
டோக்லாஸ் சீப்பின் உலோக பகுதியால் குத்தியதில் ஜூலியின் மண்டை ஓடு வரை துளைக்கப்பட்டிருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
இதற்கிடையில் கோமா நிலையிலேயே இருந்த ஜூலி, நினைவு திரும்பாமலேயே கடந்த செப்டம்பரில் உயிரிழந்தார். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய பொலிசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். லண்டனில் உள்ள தி ஓல்டு பெய்லி நீதிமன்றத்தில் நீதிபதி நிக்கோலஸ் குக் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட சீப்பும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளார்.
நீதிபதி தனது தீர்ப்பில், ஜூலி கொலை வழக்கில் உலோக பிடியுள்ள சீப்பு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் அழகு சாதன பொருட்களும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள், ஆபத்தில்லாத அழகுப் பொருட்களை உபயோகிக்கிறார்களா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்றார்

அமெரிக்காவில் பயங்கர சூறாவளி: 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

30.08.2012.BY.rajah.புகை படங்கள் காணொளி கள் .
கரீபியன் கடலில் ஏற்பட்ட இசாக் புயல் அமெரிக்காவில் கடும் புயலாக மாறி லூசியானா மாகாணத்தை தாக்கியுள்ளது. இசாக் புயல் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை தாக்கியுள்ளது.
தற்போது அங்கு கடும் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இப்புயலால் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இப்புயல் வீசியதால் மின் கம்பங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக அம்மாகாணம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

அமெரிக்காவின் லூசியானா, மிஸ்சிசிப்பா, அலபாமா, புளோரிடா ஆகிய 4 மாகாணங்களில் ஜனாதிபதி ஒபாமா அவசர நிலையை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து ஒபாமா, புயல் தாக்கினால் சேதமும், வெள்ளப்பெருக்கும் பெருமளவில் ஏற்படும் அபாயம் உள்ளது.
வளைகுடா பகுதியில் இருப்பவர்கள் உள்ளூர் அதிகாரிகளின் கோரிக்கைகளை ஏற்று அங்கிருந்து வெளியேற வேண்டும்.
எச்சரிக்கைகளை கடுமையாக பரிசீலித்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என்றும் அரசு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு லூசியானாவை தாக்கிய கத்ரீனா புயலுக்கு 1,800 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கெய்தி மற்றும் டொமினிகள் குடியரசு நாடுகளில் இப்புயலுக்கு 24 பேர் பலியாகியுள்ளனர்.

கடும் நிலச்சரிவு:
புயல் தாக்கியதை தொடர்ந்து இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.