சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் மாற்றான். முதன் முறையாக சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்துள்ளார். படத்தில் அகிலம், விமலன் என்ற இரு கேரக்டரில் வருகிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சிங்கப்பூரில் ஹாரிஸ் ஜெயராஜ் இசைக் கச்சேரியுடன் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் இசைக் குறுந்தகட்டை இயக்குநர்கள் கவுதம் மேனன், ஹரி, விஜய், லிங்குசாமி வெளியிட, சூர்யா, கேவி ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நடிகர்கள் சிவகுமார், பிரபு, பிரசன்னா - சினேகா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். பிருந்தா நடன அமைப்பில் தன்ஷிகா, பூர்ணா உள்ளிட்டோர் நடனம் ஆடினர். விழாவில் அஞ்சலா அஞ்சலா பாடலுக்கு மேடையில் திடீரென தோன்றிய சூர்யா நடனம் ஆடினார். அவருடன் இணைந்து கார்த்தி, பிரசன்னா ஆகியோரும் நடனமாடி உற்சாகப்படுத்தினர். சுமார் 10 ஆயிரம் இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக