Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

கோப்பாய் பகுதியில் வயோதிபப் பெண்மணி சடலமாக மீட்பு

09.08.2012.
news
கோப்பாய் பகுதியில் வயோதிபப் பெண்மணி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பழம்வீதி, நாசிமார் கோவிலடியைச் சேர்ந்த குமாரசாமி மங்கையகரசி என்ற 70 வயது வயோதிபப் பெண்மணியே மேற்படி சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இன்று காலை குறித்த பெண்மணியின் வீட்டிற்கருகில் உள்ளவர்களினால் கோப்பாய் காவற்றுறையினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்றுறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலத்தில் வெட்டுக்காயங்களும் அடிகாயங்களும் காணப்பட்டதாகவும் அவர் அணிந்திருந்த தோடு, சங்கிலி, காப்பு என்பன காணமால் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சடலத்தை மீட்ட கோப்பாய் காவற்றுறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்மணியின் நான்கு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் மட்டும் தனிமையில் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக