Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 11 ஆகஸ்ட், 2012

திருட முயன்று பொது மக்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட திருடன்: கிளிநொச்சியில் சம்பவம்

சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012,
கிளிநொச்சியில் நேற்றிரவு வீடென்றில் திருட முற்பட்ட போது திருடன் ஒருவன், பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் கிளிநொச்சி உமையாள் புரத்தில் நேற்றிவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்திலிருந்தபோது உள்ளே நுழைத்த திருடர்கள் அங்கிருந்த பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்களை திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயற்பட்டனர்.
இதன்போது சத்தம் கேட்டு எழுந்த வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிடவே ஒன்று கூடிய பொது மக்கள், திருடர்களை துரத்திச் சென்று ஒருவரை பிடித்தனர். ஏனையவர்கள் தப்பிச் சென்றனர்.
பொது மக்களால் பிடிக்கப்பட்ட திருடன் நையப்புடைக்கப்பட்டு பின்னர் அப்பகுதி இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக