Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 25 ஆகஸ்ட், 2012

பாணந்துறையில் மூழ்கும் கப்பல்: பாரிய எண்ணைக் கசிவு அபாயம்: மூடிமறைக்கிறதா இலங்கை அரசு

25.08.2012.
 

பாணந்துறைக் கடலில் கடந்த 2 தினங்களாக ஒரு கப்பல் மூழ்கி வருகிறது. இதுதொடர்பான செய்திகளை சில சிங்கள ஊடகங்கள் வெளியிட்டபோதிலும் அவை சரக்குக் கப்பல் என்பதுபோன்ற செய்திகளே வெளியாகியுள்ளது. ஆனால் இக் கப்பலில் எண்ணெய் இருப்பதாக தற்சமயமே தெரியவந்துள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் முற்றாக மூழ்கத்தொடங்கியுள்ள இக் கப்பலில் இருந்து பாரிய எண்ணெய் கசிவுகள் ஏற்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இக் கப்பலில் இருந்து கசியும் எண்ணெய், கொழும்பு, காலிமுகத்திடலிருந்து 4 � 10 கடல் மைல் தொலைவில் காணமுடிகின்றது. இந்த எண்ணெய் கசிவு நீர்கொழும்பு கடலை நோக்கி பரவிவருவதாகவும் மேலும் அறியப்படுகிறது.

இந்த எண்ணேய் கசிவு காலி வரை பரவிச் செல்ல வாய்பு இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.