Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

சுன்னாகத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் பலி

 
செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012, BY.rajah.
 
யாழ்ப்பாணம், சுன்னாகம் மதவடியில் இன்று காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய உற்சவத்திற்கு வந்தவர்களை ஏற்றிக்கொண்டு யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த மினிபஸ் ஒன்று, சைக்கிளில் சென்ற நபரை மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்தில் சுன்னாகம் மயிலணி வடக்கை சேர்ந்த விசுவலிங்கம் சங்கரன்(வயது-50) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் மினிபஸ்ஸையும் சைக்கிளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன், இந்த விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மினிபஸ்ஸின் சாரதி தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேர்த்திருவிழா என்பதால் வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.