Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 11 ஆகஸ்ட், 2012

அளவுக்கு அதிகமான வெடி பொருட்களுடன் இருவர் கைது

11.08.2012.
அட்டன் ருவன்புர களஞ்சியத்தில் இருந்து உத்தரவுப் பத்திரத்தில் குறிப்பிட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகமான வெடிபொருட்களைக் கொண்டு சென்ற இருவர் மஸ்கெலியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமோனியா 50 கிலோ கிராம், வெடிப்பு தூள் (கருப்பு மருந்து) 2 கிலோ கிராம், வெடிக்கும் வயர்கள் 50, மோட்டார் ஜெல் 5 கிலோ கிராம் என்பன கைப்பற்றப்பட்ட பொருட்களில் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வெடி பொருட்கள் கற்பாறைகளை வெடி வைத்துத் தகர்ப்பதற்காகவே களஞ்சியசாலையில் இருந்து விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக