Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

யாழ்.குடாநாட்டில் 24 மெகாவோட் மின்சாரம்!


25.09.2012.By.Rajah.வருகின்ற ஆண்டு ஜனவரி மாதமளவில் 24 மெகாவோட் (அதிக வழு) மின்சாரத்தினை யாழ்.குடாநாடிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சினை ஆதாரங்காட்டி லங்கா பிஸ்னஸ் இணையம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கென நான்கு பில்லியன் ரூபா செலவுடனான மின்சார உற்பத்தி நிலையமொன்று சுன்ணாகத்தில் ஏலவே வடிவமைக்கபட்டுள்ளது. இதன் அடுத்த படியாக கடந்த ஞாயிறன்று, 8.6 மெகாவோட் மின்பிறப்பாக்கிகள் மூன்று இறக்குமதி செய்யப்பட்டு அவை கப்பல் மூலம் யாழ். குடாநாட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக லங்கா பிஸ்னஸ் இணையம் தெரிவித்துள்ளது. தற்போது குடாநாட்டின் 72 சதவீதமான பகுதிகள் மின்சார வசதியினைப் பெற்றுள்ள நிலையில், மேற்படி புதிய மின் பிறப்பாக்கிகள் மூலம் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க எதிர் பார்க்கப்படுகின்றது