| 06.09.2012.by.rajah. |
| துருக்கியில் சட்டவிரோதமாக
குடியேறிய சிலர் ஐரோப்பாவுக்கு படகில் செல்ல முயன்ற போது, அவர்கள் பயணம் செய்த படகு
கடலில் கவிழ்ந்து மூழ்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலியான குழந்தைகள் உட்பட 39 பேரின் உடல்கள் இதுவரை
மீட்கப்பட்டுள்ளன, 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். துருக்கியின் மேற்கு கடல் பகுதியிலிருந்து புறப்பட்ட படகு, கிரேக்க தீவுகளுக்கு அருகில் சென்ற போது கடலின் நடுவே இருந்த பாறையில் மோதி கடலில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் அரேபிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
