Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 13 அக்டோபர், 2012

அமெரிக்காவில் மன்னிப்பு கடிதத்துடன் 10 டாலர்

         
Saturday 13 October 2012 .By.Rajah.
பணமும் வைத்த சைக்கிள் திருடன்.அமெரிக்காவில், சைக்கிளை திருடிய நபர், மன்னிப்பு கடிதத்துடன் மீண்டும் சைக்கிளை ஒப்படைத்து உள்ளார்.
அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள கல்லூரியில் படிப்பவர், பால் ஜில்மர். இவர் வகுப்பறையை விட்டு, வெளியே வந்து பார்த்த போது, இவரது சைக்கிளை காணவில்லை. இருப்பினும், இது தொடர்பாக அவர் யாரிடமும் புகார் தெரிவிக்கவில்லை. சில மணி நேரங்களில், இவரது சைக்கிள், அதே இடத்தில் விடப்பட்டு இருந்தது.
அதுமட்டுமல்ல, சைக்கிளை திருடியதற்கு மன்னிப்பு கடிதமும் அதில் செருகி வைக்கப்பட்டிருந்தது. அந்த கடிதத்துடன், 10 டாலரும் இணைக்கப்பட்டிருந்தது. பூட்டு உடைக்கப்பட்டதால், அதை மீண்டும் வாங்குவதற்காக இந்த பணம் (570 ரூபாய்) வைத்துள்ளதாகவும், வேலை இல்லாததாலும், போதைக்கு அடிமையானதாலும் இந்த தவறை செய்ததாக சைக்கிளை திருடிய நபர், கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்