Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 15 அக்டோபர், 2012

விளையாட்டால் வந்த விபரீதம்

         
Monday 15 October 2012.By.Rajah.
45 மாணவர்கள் வைத்தியசாலையில் !  இரத்தினபுரி பொத்குல் விகாரையைப் பார்வையிடுவதற்காகச் சென்ற மாணவர்கள் 45 பேர் குளவித் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளனர்.

கிக்கடுவை பிரதேச பௌத்த அறநெறிப் பாடசாலை மாணவர்கள் 45 பேரே குளவித் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் நேற்று குளவித் தாக்குதலிற்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விகாரைப் பகுதியில் உள்ள மரமொன்றில் இருந்த குளவிக் கூடு ஒன்றிற்கு மாணவர் ஒருவர் கல் எறிந்துள்ளார்.

இந்நிலையிலேயே குளவிகள் கலைந்து மாணவர்களை தாக்கியுள்ளது.

எப்படியிருப்பினும் குளவித் தாக்குதலிற்கு இலக்கான மாணவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்