Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 13 அக்டோபர், 2012

ஒபாமா அலுவலகத்தில் துப்பாக்கி சூடு

சனிக்கிழமை, 13 ஒக்ரோபர் 2012,By.Rajah.{ காணொளி,-  புகைப்படங்கள்}
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ஓபாமா, மிட்ரோம்னி இருவரும் தீவிர தேர்தல் பிரசாத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒபாமாவுக்காக டென்வர் நகரில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நோக்கி மர்ம மனிதன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
இதில் அலுவலக கண்ணாடி உடைந்து விழுந்தது. துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
துப்பாக்கியால் சுட்ட நபர் உடனே அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எதற்காக சுட்டார் என்பது மர்மமாக உள்ளது.

இந்த சம்பவம் அமெரிக்காவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு தொடர்பாக ஒபாமா அலுவலகத்தில் இருந்து இதுவரை கருத்து எதுவும் வெளியிடப்பட வில்லை. இந்த சம்பவம் நடந்த போது ஒபாமா வாஷிங்டனில் இருந்தார்.
மேலும் அடுத்த மாதம் 6ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.