Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற வேலைக்கார பெண்

 ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, By.Rajah.
வீட்டில் வேலை செய்த பெண் ஒருவர், உரிமையாளரின் 2 குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கெவின் கிரிம், அவருடைய மனைவி மரினா கரிம் மற்றும் இவர்களது குழந்தைகள் லூலூ(6), லியோ(2), 3 வயது மகளுடன் வசித்து வருகின்றார்.
கணவன் மற்றும் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை பார்த்துக் கொள்ள, யோசிலின் ஓர்டகா(50) என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தனர்.
வேலை விஷயமாக கெவின் வெளியூர் சென்றிருந்தார். கடந்த வியாழக்கிழமை உள்ளூர் நடன ஸ்டுடியோவுக்கு மகளுடன் சென்றார் மரினா வீட்டிற்கு திரும்பினார்.
விளக்குகள் எரியாமல் அவரது வீடு இருட்டாக இருந்ததும், பதற்றம் அடைந்த மரினா அவசர அவசரமாக வீட்டுக்கு சென்றார்.
கதவை திறந்தவுடன், உள்ளே சென்ற மரினாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கழிவறையில் இரண்டு குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
மரினாவை பார்த்ததும் வேலைக்கார பெண் யோசிலின், கத்தியால் தன்னை தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
மரினாவின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர், தகவல் அறிந்து வந்த பொலிசார் 2 குழந்தைகளின் சடலங்களையும் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்பட்ட வேலைக்கார பெண்ணுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து நியூயார்க் பொலிஸ் கமிஷனர் ரே கெல்லி கூறுகையில, கெவின் குடும்பத்தார் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் அருகில்தான் யோசிலின் வசிக்கிறார்.
யோசிலின் நினைவற்று கிடப்பதால் விசாரணை நடத்த முடியவில்லை. அதனால் வழக்கு எதுவும் இதுவரை பதிவு செய்யவில்லை என்றார்.