Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 20 அக்டோபர், 2012

ஒபாமா குழந்தைகள் படிக்கும் பள்ளியில் வெடிகுண்டு பீதி

         
Saturday 20 October 2012  By.Rajah.
அமெரிக்க அதிபர், ஒபாமாவின் மகள்கள், படிக்கும் பள்ளி கூடத்தில், சந்தேகத்திற்குரிய வகையில் பை கிடந்ததால், மாணவர்களும், ஆசிரியர்களும் வெளியேற்றப் பட்டனர்.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள்கள், மாலியா, 14, சாஷா, 11, இருவரும், வாஷிங்டனில் உள்ள, "சிட்வெல் பிரெண்ட்ஸ்' பள்ளியில் படிக்கின்றனர்.
நேற்று முன்தினம், இந்த பள்ளி மைதானத்தில், ஒரு பை, கேட்பாரற்று கிடந்தது. இந்த பையில், வெடிகுண்டு வைக்கப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால், பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் வெளியேற்றப் பட்டனர்.வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சந்தேகத்திற்குரிய பை சோதிக்கப் பட்டதில், அதில் ஒன்றுமில்லை, என தெரிய வந்தது. இதையடுத்து, மாணவர்களும், ஆசிரியர்களும் மீண்டும் பள்ளிக்கு திரும்பினர்.