Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 22 அக்டோபர், 2012

பிரிட்டன் முன்னாள் பிரதமரின் கார் ஏலம்

 திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012,By.Rajah.[புகைப்படங்கள்],
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய லேண்ட் ரோவர் கார் ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது. சர்ச்சிலின் 80ஆவது பிறந்தநாளின் போது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இக்கார் அவருக்கு பரிசளிக்கப்பட்டது.
கேம்பிரிட்ஜ்ஷயரில் இக்கார் ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கார் ரூ. 50 லட்சத்துக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட இரு மடங்கு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
இங்கு ஏலம் விடப்பட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமான பழங்கால வாகனங்களில் சர்ச்சில் பயன்படுத்திய கார் தான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.