| Wednesday, 31 October 2012, By.Rajah. |
| நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டீர்களா? என்றதற்கு பதில் அளித்துள்ளார் லேகா வாஷிங்டன். |
|
ஜெயம் கொண்டான், வா குவாட்டர் கட்டிங் படங்களில் நடித்தவர் லேகா வாஷிங்டன். அந்த
படங்களுக்கு பிறகு அவரை காணவில்லை. இது குறித்து அவர் கூறுகையில், அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைனிங் கல்லூரியில் படிப்பை முடித்த பிறகே, நடிக்க வந்தேன். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தலா ஒரு படம் நடித்து வருகிறேன். நடிப்பை தவிர்த்து டிசைனிங் தொழிலில் எனக்கு ஆர்வம் அதிகம். எனவே அதற்கான பணியில் கவனம் செலுத்தி, சமீபத்தில் விருதும் பெற்றேன். டிசைனிங் தொழிலில் எனது ஆதிக்கம் தான் இருக்கும். நடிப்பை பொறுத்தவரை மற்றவரின் எண்ணப்படித்தான் நடிக்க முடியும். எனது பெரும்பாலான நேரத்தை பேஸ்புக், டுவிட்டரில் கழிப்பதுடன் நிறைய சினிமா பார்க்கிறேன். இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக