| கிறிஸ்துமஸ் பண்டிகை
வரவிருப்பதை முன்னிட்டு 1000 கைதிகளை விடுதலை செய்ய ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து Rhineland-Palatinate நீதித்துறையின் தகவல் தொடர்பாளி கூறுகையில்,
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 1000 சிறைக்கைதிகள் நன்னடத்தை அடிப்படையில்
விடுவிக்கப்பட உள்ளனர். கொடூரமான வன்முறை, தீவிரவாதம், திருட்டு மற்றும் போதை பொருள் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்த பொது மன்னிப்பு கிடையாது என்று தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு அதிகபட்சமாக நார்த் ரைன் – வெஸ்ட்ஃபேலியா மாநிலத்தில் 710 பேரை விடுதலை செய்யப்படுகின்றனர். அடுத்ததாக ஹெசி மாநிலத்தில் 150 – 200 பேர் வரை விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேக்ஸனி, பவேரியா ஆகியன இந்த விடுதலைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டன. |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக