Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 18 டிசம்பர், 2012

நீதிபதி உட்பட 3 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொலை

உக்ரைன் நாட்டில் நீதிபதி, அவரது மகன் மற்றும் மகனின் காதலி தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். உக்ரைன் நாட்டின் கஹார்கிவ் மாகாண நீதிபதி வொலோ டைமர் ட்ரோபர்மோ(வயது 58).
இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வொலோ மகனுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் திடீரென கடந்த 15ஆம் திகதியன்று, மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்ட நிலையில் நீதிபதி, அவரது மகன் மற்றும் காதலி பிணமாக கிடந்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த பொலிசார் சடலங்களை மீட்டதுடன், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பொலிசார், வீட்டில் சில பொருட்கள் காணாமல் போயிருந்ததால் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் புகுந்த கொள்ளையர்கள் மூவரையும் கொலை செய்து தப்பியோடி இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே கடந்த 15ஆம் திகதி அந்நாட்டின் நீதிபதிகள் தினம் என்பதால், கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக